அணு உலையா ? அரசியல்வாதிகளா ? யாரை கண்டு மக்கள் அச்சப்படுகிறார்கள்…

அணு உலையின் பாதுகாப்பு பற்றிய அச்சமும்அதன் பயன்பாடுகள் குறித்த விளக்கமும் குறித்து இரு தரப்பிலும் விரிவாக பேச ஆள் இல்லை என்பதுதான் அடிப்படை உண்மை . அச்சங்களை அறிவியல்பூர்வமாக விளக்கமளிக்கும் அறிவு சாமான்ய மக்களிடம் எதிர்பார்க்கமுடியாது . அதே சமயத்தில் அச்சத்தில் இருப்பவர்களிடம் அறிவியல் பூர்வமான பதில்கள் கூறுவது எடுபடாது என்பதும் உண்மைதானே .

அப்துல் கலாம் போன்ற வெகுஜன தொடர்பும்அறிவியல் ஞானமும் உள்ளவர்கள் இன்னும் சற்று விரிவாகவே பதில் அளித்திருக்கலாம் . ‘ சுனாமி / பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தாலும் பாதிப்பில்லாத வகையில் இந்த உலை வடிவமைக்கப்பட்டுள்ளதாகஅறிவியலாளர்களும் , அரசியல்வாதிகளும் திரும்ப திரும்ப கூறுகிறார்கள் . ஒன்று கவனியுங்கள் . அறிவியலாளர்களை பொறுத்தவரை அவர்களின் ஆய்வுக்கு உட்பட்டு மட்டுமே அவர்கள் எதையும் கூறமுடியும் . இவர்கள் குறிப்பிடும் அளவை விட வலிமையான இயற்கை சீற்றங்கள் வந்தால் என்ன செய்வது ? வராது என்று உறுதியாக யாரும் கூற இயலாது . அடுத்து , அரசியல்வாதிகளின் பொது வாழ்க்கை நேர்மை பற்றியும் அவர்களின் வாக்கு சுத்தம் பற்றியும் மக்கள் நன்கு அறிவார்கள் . மக்கள் இறைஞ்சுவது போல் உதவி கேட்பதும் , அரசு அதிகார தோரணையில் அவர்களிடம் கருத்து கேட்பதும் ஜனநாயக முறைமைக்கு ஏற்புடையது அல்ல .

வெகு ஜனங்களின் மிக அதிக உபயோகத்தில் இருக்கும் ஒரு நுகர்வு பொருளின் விலையேற்றத்தை (எரிபொருள் விலையேற்றத்தை) தங்களுடைய எந்த ஒரு சாமர்த்தியத்தாலும் கட்டுபடுத்த திறனில்லாமல்நிறுவனங்களின் பெயரில் பழியை போட்டு தப்பிக்கும் இந்த மக்கள் பிரதிநிதிகளை மீது மக்கள் எப்படி நம்பிக்கை கொள்வார்கள் ? தன் அளவில் , தன் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட தெரியாத அரசியல் தலைவர்களின் கூற்றுகளை மக்கள் உறுதியான நம்பிக்கையுடன் எப்படி ஏற்றுக்கொள்வது ?

நம் நாட்டின் வட எல்லையிலும் சரி , தென் எல்லையிலும் சரிமக்களை காப்பதிலும்அச்சமின்றி வாழ வைக்கவும் இயலாத ஒரு அரசாங்கம் , அணு உலை ஆபத்திலிருந்து மக்களை காப்போம் என கூறுவதை எப்படி நம்புவது ? இத்தனைக்கும் ஒரு கட்டுகோப்பான இராணுவம்உலகின் தர வரிசையில் நான்காவது இடம் பெற்றஒரு தொழில்முறை இராணுவத்தை வைத்துக் கொண்டு நம்மால் நம் தேசத்தின் எல்லையோரத்தில் வசிக்கும் மக்களை காப்பது இயலாது என்ற நிலையில் , அவர்கள் தரும் வாக்குறுதிகளை எப்படி எடுத்துகொள்வது என்ற நம்பிக்கையின்மை ஏற்படுவதை தடுக்க இயலாது .

இன்று மக்கள் நலனுக்காகஅணு உலையை எதிர்த்து போராட வருபவர்களை நோக்கிய நம் கேள்வி என்னவென்றால் , அணு உலைகளை விட ஆபத்தானவாழ்வை சீரழிக்ககூடியஉடலை அழிக்க கூடிய – ‘ மது உலைகளை ‘ ( மது பான கூடங்கள் ) எதிர்த்து அறிவியல்பூர்வமான விளக்கங்களுடன் ஏன் போராடவில்லை ? மது உலையா / அணு உலையா ? எது மிக ஆபத்தானது ? எது சந்ததிகளை பாதிக்கக்கூடியது ?

கடல் சார் வளங்களை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் மீனவர்களின் பொருளாதார வாழ்க்கை முன்னேற்றமடையாமல் தொடர்ந்து தேக்கமடைவதும்அதில் தொழில் செய்யும் நிறுவனங்கள் கொழுத்து வளர்வதும்தலைவர்கள் தொடர்ந்து செழிப்பதும் உணு உலைகளால் ஏற்பட்ட விளைவுகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் .

தங்களின் நியாயமான சந்தேகங்களை கேட்கும் உரிமைகளை மக்களுக்கு வழங்குவதும்சந்தேகத்திற்கு இடமின்றி விளக்கம் அளிப்பது மக்கள் ஜனநாயக அரசின் கடமை .

EDITOR

editor@tamilagamtimes.com