அதிரடி அழகிகள்!

[wysija_form id=”1″]Image2இவங்க வீட்டுல சண்டையே வராது. புருஷன் திட்டவே மாட்டார். மாமியார் கொடுமையே இருக்காது. அவ்வளவு ஏன், குழாய்ல தண்ணி பிடிக்கப்போனா, சின்ன சத்தம்கூட கேட்காது. காரணம் ’மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ்’ எனப்படும் பலவிதமான தற்காப்புக்கலைகளில் முன்னணியில் இருக்கும் பெண்கள் இவர்கள்.http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=language-learning-books

கேட் ஜிங்கானோ: 12 வயதில் இருந்து தற்காப்புக் கலைகளில் கலக்கும் கேட் இந்தக் கலைகளில் உலகிலேயே இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இவரின் கணவர் கடந்த ஆண்டு ஜனவரியில் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் அடுத்த 10வது நாளில் நடந்த தற்காப்புக்கலைப் போட்டியில் வென்று காட்டிய தைரியலெட்சுமி.

மியாஷா டேட்: அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த மியாஷாவுக்கு சாப்பாடே சண்டைதான். ரோண்டா ரௌசி, கேட் ஜிங்கானா என்ற இரண்டு வீரர்களிடம் மட்டுமே தோல்வியடைந்திருக்கிறார். இருவரை ஜெயிப்பதே லட்சியமாம்.http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=language-learning-booksImage3

ஜெசிக்கா பென்னி: 12 சர்வதேச இறுதிப்போட்டிகளில் கலந்துகொண்டு 10 போட்டிகளில் வென்று இருக்கிறார். நிரந்தர பாய்ஃப்ரெண்ட் இல்லையென்பதுதான் இவரின் பெரிய கவலையாம்.

கெய்ரா கிரேசி: பிரேசிலியன் ஜூட் ஜுசு என்கிற தற்காப்புக்கலையில் செம கில்லி இந்த கிரேசி. பிரேசிலின் பிரபல நடிகரான மால்வினோவுடன் காதலாகி ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். அதனால் போட்டிகளில் இருந்து விலகி பயிற்சியாளராக மாறிவிட்டார்.http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=language-learning-books

அலெக்ஸியஸ் டேவிஸ்: ‘நான் பெரியவளாகி ஜாக்கிசான், ஜெட்லிகூட எல்லாம் சண்டை போடுவேன்’ பெரியவளாகி என்ன ஆகப்போகிறாய் என்று டீச்சர் கேட்டதற்கு பள்ளியில் டேவிஸ் சொன்ன பதில் அது. கனடா நாட்டிலிருந்து தற்காப்புக்கலை சண்டைக் களத்திலிருக்கும் ஒரே அதிரடி அம்மணி இவர்தான்.http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=language-learning-books

ரோண்டா ரௌசி: ‘இந்தப் பெயரைக் கேட்டா, எனக்கே பயமாயிருக்கு’ என்று அர்னால்டே சொல்லும் அளவுக்கு அட்ராசிட்டி பார்ட்டி. இதுவரைக்கும் யாருமே இவரை வென்றதில்லை. நாலே உதை, நாலு குத்து எதிராளியை மயக்கமடையச் செய்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார். 27 வயசாகும் ரோண்டாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எங்கே, தில் இருந்தா நூல்விடுங்க பார்ப்போம்!http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=language-learning-books

Image3