அப்படி நினைச்சாலும் இப்படித்தாங்க!

[wysija_form id=”1″]இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பார்கள். ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவருக்கும் பத்திரிகையில் வேலை பார்க்கும் ஒருவருக்கும் இடையே நடந்த ஏக்கப் பொறுமல்களும் அவரவர் மானங்கெட்ட மைண்ட் வாய்ஸும்…

பத்திரிகைக்காரன்:

வாழ்ந்தா உன்னைப்போல வாழணும். டேக் ஹோம் பெர் ஆனம் 10 லட்சம்கிற, வீட்ல இருந்தே ஆன்சைட் பார்க்குற, கொடுத்துவெச்ச ஆளுடா! (அவ்ளோ பணத்தை என்னடா பண்ணுவே?)

அமெரிக்காவா? அதை எல்லாம் நான் மேப்லதான் பார்த்திருக்கேன். என்னது நியூஸிலாந்தா? இந்த மேப்ல கீழே காக்கா கக்கா போன மாதிரி இருக்குமே அதுவா? அவ்வ்வ்வ்வ்வ்! (சென்னையைத் தாண்ட முடியலையடா நாராயணா!)

ஃபோர்டு காரா… சூப்பர் மாப்ளே. சான்ஸே இல்லை! (உன்னைப் பார்த்தா கார் ஓனர் மாதிரியாடா இருக்கு?)

ஒஃய்பும் ஐ.டி ஃபீல்டா? அப்போ எப்படியும் மாசம் ரெண்டு லட்சம் வாங்குவீங்களா? (திரும்பவும் கேட்குறேன். அவ்ளோ பணத்தை வெச்சு என்னடா பண்ணுவீங்க?)

ஈ.சி.ஆர்-ல வீடு வாங்கிட்டியா? ஸோ நைஸ். பெருமையா இருக்குடா! (அப்புறம் ஏன்டா சுனாமி வராது!)

ஐ.டி ஊழியன்:

நினைச்ச இடத்துக்குப் போற, வர்ற. கலர்கலரா ஃபிகர் பார்க்கிற. காலையில கிளம்பி ஜாலியா சிட்டிக்குள்ள சுத்துற… பொறாமையா இருக்குடா மாப்ளே! (ஒரு வாரம் டார்கெட் ஃபிக்ஸ் பண்ணி ஃபாரின்காரன் பம்படிச்சாதான் தெரியும் எங்க பொழப்பு!)

கபாலீஸ்வரர் டெம்பிள் ட்ரிப்லிகேனா? மைலாப்பூரா? அண்ணா நகர்லதானே அண்ணா யுனிவர்சிட்டி இருக்கு? வேளச்சேரியும் வேப்பேரியும் வேற வேறயா? (சென்னைக்குள்ளவே அந்நியனா சுத்த வேண்டி இருக்கே!)  http://tamilagamtimes.com/?post_type=product

பைக்ல சுத்தணும்னு ஆசை. பட் உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது. ஸ்பைனல் கார்டு டிஸ்-லொகேட் ஆகிடுச்சு. சுகர் வேற இருக்கு. கொடுத்துவெச்சவன்டா நீயி! (பைக்ல இவ்ளோ சுத்துறான் இவனுக்குலாம் ஸ்பைனல் கார்டு ஸ்டீல்லயா செஞ்சிருக்கு?)

டைவர்ஸ் அப்ளை பண்ணி இருக்கேன். நல்ல பொண்ணா இருந்தா சொல்லு! (இவன் மூஞ்சிக்கெல்லாம் அடக்கஒடுக்கமா நல்ல பொண்ணு கிடைச்சிருக்கு. ப்ச்ச்ச்ச்!)http://tamilagamtimes.com/?post_type=product

உனக்கு என்னப்பா ஹவுஸிங் லோன் ஈ.எம்.ஐ கட்ட வேண்டிய அவசியமே இல்லை. ரெண்டு வருஷத்துக்கு ஒரு வீடு ஷிப்ஃட் பண்ணிட்டு ஜாலியா சென்னையை சுத்திட்டே இருக்கலாம்! (ஒரு சினிமா பார்க்க எவ்ளோ தூரம் வர வேண்டி இருக்குடா சாமி!)

[wysija_form id=”1″]

http://tamilagamtimes.com/?post_type=product