அமைச்சர்கள் நடத்திய விழா!

[wysija_form id=”1″]

மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் ‘முல்லை-பெரியாறு அணையை மீட்டுத்தந்த தாயே…’, ‘வாழும் பென்னிக்குக்கே…’ இப்படி பற்பல வாசகங்களில் ஃபிளக்ஸ், போஸ்டர்கள்; தினசரி பத்திரிகைகளில் எல்லாம் முழு பக்கத்துக்கு விளம்பரங்கள்; முல்லை-பெரியாறு அணை வடிவத்தில் மிகப்பெரிய செட் என ஆகஸ்ட் 22 அன்று கலக்கலாக நடந்து முடிந்திருக்கிறது… தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கான நன்றி பாராட்டும் விழா

தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமான முல்லை-பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, உயர்த்துவதில் கேரளா அரசு முரண்டு பிடித்து வந்தது. இதற்காக, அப்பகுதி விவசாயிகள் முதன்முதலாக நீதிமன்றப் படியேறினர். அதன் பிறகே தமிழக அரசும் தன்னை இதில் இணைத்துக் கொண்டது. தமிழகத்தில் பல முறை ஆட்சிகள் மாறியபோதும்… வழக்கில் தீர்வு வந்தபாடில்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, மத்திய அரசும் மூவர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்நிலையில்தான், இந்த விழா!

இதைப் பற்றி பேசிய ஒன்பதாவது கால்வாய் பாசனக்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், ”இந்தப் பிரச்னைக்காக காலகாலமாக குரல்கொடுத்துவரும் விவசாய சங்கங்களை இந்த விழாவில் சேர்க்கவில்லை. தி.மு.க, காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்குக்கூட அழைப்பு கொடுத்திருக்கின்றனர். உண்மையான விவசாயிகளுக்கு அழைப்பு இல்லை. இது, ‘விவசாயிகள் நடத்தும் விழாவா… அமைச்சர்கள் நடத்தும் விழாவா?’ என்று தெரியவில்லை. இதைவிட முக்கியம்… இந்தத் தீர்ப்பு இன்னும் ‘கெசட்’டில் வெளியிடப்படவில்லை என்பதுதான். இதற்கு முதலில் தீர்வு காணவேண்டும்” என்றார்.

கம்பம் பள்ளதாக்கு விவசாயிகள் சிலர், ”இந்த அணைக்காக இங்கே போராட்டங்கள் நடந்தபோது, விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டார் ஒருவர். அவரைத்தான் இந்த மேடையில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். முல்லை-பெரியாறு போராட்டத்தை வீரியமாக முன்னெடுத்துச் சென்ற காலஞ்சென்ற காமய கவுண்டன்பட்டி ரத்தினசாமியை நினைக்கக்கூட ஆளில்லை” என்று வேதனைப்பட்டனர்.

இந்த விவரங்கள் எல்லாம் தன் காதுகளுக்கு வந்ததோ.. இல்லையோ…, ”வெளியில் மழைத் தூறிக் கொண்டிருக்கிறது… இங்கே பாராட்டு மழையில் என்னை நனைத்துள்ளீர்கள். இதற்காக வேளாண் சமூகத்துக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். இந்தப் பாராட்டைத் தக்க வைத்துக்கொள்வேன்” என்று விழா மேடையில் குஷிபொங்கப் பேசிவிட்டுப் புறப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா!

நன்றி விகடன்

FOLLOW OUR DOMAIN VIA MAIL TO GET UPDATES NEW ARTICLES @ YOUR INBOX

[wysija_form id=”1″]

VISIT OUR GROUP OF DOMAINS

EDITOR – www.tamilagamtimes. com

http://yazhinimaran.com/ FOR MEDICAL ARTICLES
http://isaipriyanka.com/ FOR ECONOMICAL ARTICLES
https://kaviazhaku.com / FOR POLITICAL & SOCIAL ARTICLES
http://shanthivinayagam.com/ FOR WOMEN
http://alagusundari.com/ FOR SPIRITUAL