அழகிரியின் ஆதரவு செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்கள் அரசியல் செய்கிறது …

முக நூலில் அந்த பக்கத்தை https://www.facebook.com/missionazhakiri   கண்டபோது மிக வியப்பாக இருந்தது. காரணம் அழகிரி அவர்களுக்கு மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்கு இருப்பதாக நான் நினைத்து  கொண்டிருந்த வேளையில் , அந்த முகநூல் பக்கத்தில் வட மாவட்டங்களிலிருந்து அதிக அளவில் திமுக பொறுப்பாளர்கள் பங்கெடுப்பதை கண்டு வியப்பு ஏற்பட்டது.

 

அந்த முகநூல் பக்கத்தில்  பங்கேற்பாளர்களின்  உரையாடலில் இருந்த ஆர்வத்தை உணர முடிந்தது. அவர்கள் ஸ்டாலின் தலைமையில் அதிருப்தியில் இருப்பதை அவர்களின் வார்த்தையில் காண முடிந்தது.

 

இப்படி பலவீனமான நிர்வாக கட்டமைப்பில் இருக்கிறோம் என்பதினை ஸ்டாலின் உணர்ந்துள்ளாரா ? என்று தெரியவில்லை.

 

இதனை ஊடங்கங்கள் வாயிலாக ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தலாம் என நினைத்து , சில ஊடகங்களை அழைத்தேன். ஊடகங்களின் பெயரினை சொல்ல விரும்பவில்லை , ஆனால் நான் அழைத்த ஊடக நண்பர்கள் யாரும், அழகிரிக்கு திமுக –வின் செல்வாக்கு உள்ளது – குறிப்பாக வட மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் உள்ளது என்பதினை செய்தியாக வெளியிட மறுத்துவிட்டார்கள்.

 

அழகிரிக்கு திமுக – வில் செல்வாக்கு உள்ளது என்பதினை செய்தியாக வெளியிட ஏன் ஊடகங்கள் மறுக்கிறது ?

 

ஆசிரியர் – தமிழகம் டைம்ஸ்

www.tamilagamtimes.com