அழகிரி அண்ணனின் ‘திறமை’ ஸ்டாலினிடம் இல்லை … ஒப்பு கொள்வாரா ?

b51ஸ்டாலின் முதலில் விளக்கவேண்டியது , திமுக – வின் தன்மானம் எது ? அந்த தன்மானத்தை எவ்வாறு மற்றவர்கள் உரசினார்கள் ?

 

ஒரு வாதத்திற்காக , திமுக தினகரனை மறைமுகமாக – தனது வாக்கு வங்கி மூலம் – ஆதரித்து அவரை வெற்றி பெற செய்து – அதன் மூலம் அதிமுகவை இரண்டாக உடைக்க முயற்சி செய்தார் என்று கூறினால், அதில் ஓரளவிற்கு – அல்லது ஒப்புக்காககூட – அரசியல் சாமர்த்தியம் உள்ளதாக சொல்லலாம்.  தோல்வியும் கௌரவமாகும்.

 

ஆனால், ஸ்டாலின் அந்த கூற்றை மறுப்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் ?b53

 

தனக்கு,  எந்த தேர்தல் கள அரசியல் வியூகமும் வகுக்க தெரியாது – எத்தனை முறை தகப்பனுடன் இருந்து களப்பணியாற்றினாலும் அந்த சாமர்த்தியம் எனக்கு கைவசப்படுவதில்லை- காங்கிரஸுக்கு ராகுல் காந்தி போல் , திமுகவிற்கு தகுதியற்ற தலைவனாகத்தான் இருப்பேன் – விசுவாசமான திமுக தொண்டர்கள் கூட பணத்திற்காக விலை போகும் அளவிற்கு அவர்களை சோர்வடையச் செய்வேன்  – சுட்டு போட்டாலும் தலைமை பண்பு வராது , பேச்சாற்றல் வராது – எனக் கூற வருகிறாரா ?

 

நல்லவரோ , கெட்டவரோ , ஆனால் அழகிரி அண்ணனின்‘தேர்தல் களப்பணியாற்றல்’ , ஸ்டாலினிடம் மிஸ்ஸிங். சரிதானே ?  மதுரை களம் அதற்கு சாட்சி.

 

Editor – www.tamilagamtimes.com