ஆக்க பின்புல சக்தி

அரை நூற்றாண்டுகால பெண்ணிய விடுதலை சித்தாந்தங்கள், சமுதாயத்தில் செய்த பெண் உரிமை மீட்டெடுப்பு பங்களிப்பு போற்றுதலுக்குரியவை. கல்வி மறுப்பு – முன்பருவ திருமணங்கள் – தன் ஒப்புதல் இல்லாத  திணிக்கப்படும் பாலியல் நிர்பந்தங்கள் என பெண்களுக்கு எதிரான கொடுமைகளை வலிமையாக எதிர்த்து நின்று அகற்றியது இந்த சித்தாந்தங்கள்தான்.

எப்பொழுதுமே பெண் ஆக்க பின்புல சக்தி ( BACKFORCE OF EXECUTION ) யாக  இருந்து வருகிறது என்பதில் மாற்று கருத்தில்லை.

ஆனால்,  நவீன பொருளாதார சுதந்திரமடைந்த – நிகழ்கால சமுதாய பதிவுகள் பெண் முன்னேற்றத்திற்கு இணையான பெண் கொடுமைகள் வேகமாக நிகழ்வது வெட்கபடவேண்டிய சமுதாய உண்மைகள். ஆண்களுக்கு நிகரான சதவிகித பங்குள்ள வேலை வாய்ப்புகளால் பொருளாதார சுதந்திரம் பெற்ற பின்பும், உடல் உழைப்பால் வீட்டு வேலை செய்யும் நடுத்தர – வயதான பெண் வேலையாட்கள் எப்படி உருவானார்கள் ? இன்னும், பெண் பாலியல் தொழிலாளர்கள் சமூகத்தின் எந்த தளத்தில் உருவாக்கப் படுகிறார்கள்.

பெண் விடுதலை சித்தாந்த வளர்ச்சியோடு சம கால வேகத்தில் வளர்ந்ததுதான் இந்த கொடுமைகளும். தனி மனித வாழ்வு பயன் தாராத கருத்தாய்வு கூட்டங்களுக்கோ , குழுப் பேச்சு சுவாரஸ்யங்களுக்கோ இடம் தராமல், ஆய்வு பார்வையோடு –  விவாதம் இறுதி இலக்கு தெளிவோடு தொடங்க வேண்டும் என்பதே இணையத்தின் குறிக்கோள்.  மோலோட்ட புள்ளி விவரங்களால் சமாதானம் தேடும் சமாளிப்பு வேலையை நம் இணையம் செய்யாது.

பெண்ணிய சிந்தனைகளை எதிர்மறை மதிப்பீடு செய்யும் நோக்கமும் நம் இணையத்திற்கு இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறோம்.