இதுதான் நெஞ்சுக்கு நீதியா? கலைஞர் அவர்களே !

நளினிக்கு ஒரு நீதி ! கனிமொழிக்கு ஒரு நீதியா ?

ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது சிறையில் இருக்கும் நளினி என்ற பெண் தன்னை விடுவிக்க
கோரி செய்த பிணைய மனுவை பரிசீலித்தது அப்போது முதலமைச்சராயிருந்த இதே கலைஞர்தான். அந்த மனுவில்
நளினி தனக்கு விடுதலை அளிக்க காரணமாக குறிப்பிட்டிருந்த காரணங்களில் ஒன்று ” மீதமுள்ள நாட்களிலாவது நான்
என் பெண்ணுடன் வாழ விரும்புகிறேன்..” என்பதுதான். கனிமொழியின் பிணைய மனுவிலும் ‘ தாம் ஒரு பெண் என்றும்,
குழந்தையை கவனிக்க வேண்டிய பொறுப்பு இருப்பதால்’ ஜாமீன் வழங்க கோரியிருந்தனர்.
இங்கே நாம் குறிப்பிட விரும்புவது இருவருடைய குற்ற பிண்ணனி ஒப்புமை அல்ல. ஆனால் பிணையம் கேட்கும்போது
காரணமாக கூறப்படும் விசயங்கள் ஒன்றுதான். இப்போது கலைஞர் என்ன கூறுவார் என்பதை நாம் எதிர்நோக்கவில்லை.
காரணம், அவரிடம் எப்போதுமே நேர்மையான – அவர் வகிக்கும் பதவிக்கேற்ற பொறுப்பான பதில் வருவதில்லை.
சமச்சீர் கல்வி விவகாரத்தில் கூட அவர் தம் தரப்பு நியாயமாக, தாம் எந்த அடிப்படையில் அந்த சமச்சீர் கல்வி பாட
அமைப்பை உருவாக்கினோம் என்றோ, அவை எதிர் காலத்தில் சிறந்த மனித வளத்தை உருவாக்குவதில் உள்ள
பங்களிப்பையும் கூறியிருந்தால் அவர் திறனை பாராட்டலாம். ஆனால் அது போன்ற எந்த பதிலும் இல்லை. அவர் அப்படி
உருவாக்கவில்லை என்பதுதானே உண்மை.
நாம், நம் இணையத்தில் சமச்சீர் கல்வி   என்ற அடிப்படையில் நாம் உருவாக்க நினைக்கும் மனித வளத்தை – மனித
ஆற்றலை – எல்லோரும் ஒப்புகொள்ளும் வகையில் நம் வாசகர்களின் ஆதரவோடு / உண்மையான மனித வளத்தை
உருவாக்க உள்ள கல்வியாளர்களின் துணையோடு தொடங்குகிறோம்.
அரசியல்வாதிகளை திருத்த முயல்வது நம்மால் முடியாத வேலை. ஆனால் நாம் முன்னேற்றத்தை நோக்கிய முதல்
அடியை எடுக்க முடியும். எடுத்து வைப்போம்.
விரைவில் அறிவிப்புகள் வெளிவரும்…
editor@tamilagamtimes.com