இது மாபாதகம் இல்லையா ? டாக்டர்களே சிந்திப்பீர் !


ஒரு மருத்துவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார் ; அதில் தொடர்புடைய குற்றவளிகள் கைது செய்யப்பட்டுவிட்டார்கள். உங்களுக்கு இன்னும் உங்களின் பணி பாதுகாப்பு சம்பந்தமாக ஏதேனும் குறைப்பாட்டினை அரசுக்கு தெரிவிக்க விரும்பினால் உங்கள் சங்கம் இருக்கிறது. அதன் நிர்வாகிகள் அந்த பணிகளில் ஈடுபடலாம்.

அறிவு கெட்ட – மூர்க்கமான மூடன் ஒரு ஈனச்செயலில் ஈடுபட்டான் என்பதற்காக உங்கள் தொழில் தர்மத்தை தொலைத்து இப்படி பொதுமக்கள் உயிரோடு விளையாடலாமா ?

இந்த உடலை படைத்த கடவுளை கண்களால் யாரும் கண்டிருக்கமாட்டார்கள்; ஆனால், இந்த உடலை காப்பாற்றும் கடவுளாக மக்கள் உங்களைத்தான் காண்கிறார்கள்.

ஆனால், உங்கள் போராட்டத்தினால் இன்று ஒரு உயிர் மருத்துவ சிகிச்சை இன்றி இறந்து போயிருந்தால் , அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள் ? உங்கள் போராட்டத்தில் அறம் இருக்கிறதா ? ஒரு மருத்துவர் கொலை செய்யப்பட்டார் என்பதற்காக அத்தனை நோயாளிகளையும் பழி வாங்குவது , உடலியலையும் – உளவியலையும் படித்த ஒரு டாக்டரின் செயலாக இருப்பது தங்கள் படிப்புக்கு பொருந்திய செயலா ?

உங்கள் கோரிக்கைகளை கூறுங்கள் ; ஆனால், நீங்கள் நடந்து கொண்ட விதம் உயர் படிப்பு படித்தவர்களின் தரத்திற்கு ஏற்றதல்ல !

தங்கள் இயக்கத்தை சார்ந்த ஒருவர் கொல்லப்பட்டுவிட்டால் , உடனே பழி வெறியோடு களத்தில் குதிக்கும் ஒரு பயங்கரவாத கும்பலுக்கும் – ஒரு மருத்துவர் இறந்தவுடன் அத்தனை நோயாளிகளையும் புறக்கணித்து , அறுவை சிகிச்சைகளை நிறுத்தி , ஆம்புலன்சில் சிகிச்சைக்காக காத்திருந்தவர்களை கண்டும் காணாமல் கடந்து சென்று போராட்டத்தில் குதித்த – உங்கள் செயலுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா ?

உணர்வு கட்டுபாடில்லாத உங்களிடம் தரமான மருத்து சிகிச்சை எப்படி கிடைக்கும் ? கேள்வி கேட்காமல் நம்பும் தரத்தில் மருத்துவர்கள் இல்லை .

இது கசப்பான உண்மை !

EDITOR

editor@tamilagamtimes.com