இன்னும் அழியாத நரகாசுரன்கள்…….

நரகாசுரன் அழிந்த நாள்தான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது . புற உலகில் அழிந்துவிட்டாலும் , அவன் உருமாறி இன்னும் நம் மனங்களில் அழியாமல் சுழன்று கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது . எப்படி என்றால் , இன்னும் நம் மனசக்தியையும் – உடலாற்றலையும் அழிக்கும் மது – சூழ்ச்சிகளால் வணிக லாபம் ஈட்டும் வனிகர்கள் – பொது காரியங்களுக்கான பணத்தை வஞ்சகம் செய்து கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் – உயிர் கொல்லும் ஆயுத உற்பத்தி செய்யும் வல்லரசுகள் – இந்த நூற்றாண்டின் சர்வதேச துயரமான / அகதிகள் முகாமிற்கு வருமுன்னே இறந்து போகும் சோமாலியாவின் பட்டினி சாவு கண்டும் சலனமில்லாமல் இருக்கும் இறுகிய மனம்  – ஈழத்தின் யுத்தக்களத்தில் பல்லாயிரகணக்கான குழந்தைகளையும் / அப்பாவிகளையும் கொன்று குவித்த ராஜபக்க்ஷே என்னும் நரகாசுரன் – அவனுக்கு மௌனமாய் துணை நின்ற நம் உதவி நரகாசுரன்களான நம் அரசியல்வாதிகள் – புராண கால அவதாரங்கள் இப்போதும் நமக்கு தேவைப்படுகிறது . அவதாரங்கள் வானத்தில் இருந்து தோன்றுவதில்லை. அவைகள் நம் மனதில் எண்ணங்களின் எழுச்சியாக தோன்றி இந்த நரகாசுரன்களை அழிக்க வேண்டும் .

இருப்பினும் இன்றும் நம்மிடையே கருணையுள்ளமும் – தாயுள்ளமும் கொண்ட மனிதர்கள் நம் சமகாலங்களில் வாழ்வதால் இந்த தீபாவளி இனிமயாகவும் – உற்சாகமாகவும் – நம்பிக்கையுடனும் கொண்டாடுவோம் .

தீபாவளி வாழ்த்துக்கள் .

EDITOR