இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவோர் இந்த நாட்டிலே …..?

மூன்றாவது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யும் முன்பே கோவையில் ‘ தயாள நிதி அமைச்சர் ‘ மீது வழக்கு பதிவாகுமா ?

நாம் எப்போதுமே பரபரப்பான செய்திகளுக்கோ – மலிவான விளம்பரங்களுக்கோ நம் இணையம் விரும்புவதில்லை . ஆனால் , தொடர்ந்து நம் விசாரணையிலும் – நம் இணையத்தை தொடர்பு கொண்டவர்களும் தெரிவிக்கும் ஒரே விசயம் ஒரு அப்பாவி தொடர்ந்து பாதிக்குள்ளாகிறார் என்பதால் , அந்த விசயத்தை வெளியிடுகிறோம் .

கோவை மாவட்டம் , கிணத்துகடவு பகுதியில் வசிக்கும் ஒருவர் தொடர்ந்து வங்கி மோசடி மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றில் ஈடுபடுவதும் – அதற்காக தம் உறவினரும் , திமுக வின் முன்னாள் மத்திய அமைச்சரும் , ‘ சூரிய குடும்பத்து நிதியின் ‘ கல்லூரி நண்பராகியவரின் பெயரை உபயோகப்படுத்தி வருவது வெளிப்படையாக தெரிகிறது .

2007 ஆம் ஆண்டு ஒரு சாதாரண கணக்கு வழக்கு விசயத்திற்காக – தன் உறவினர் என்பதற்காக மாத்திரம் , தற்போது ‘ சூரிய குடும்பத்தின் திரைப்படம் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைமை ‘ பொறுப்பு ஏற்றிருக்கும் அந்த நபர் , முன்னாள் ‘ பொங்கல் ‘ ஊர் அமைச்சரின் துணையோடு கட்ட பஞ்சாயத்து செய்து, ஒப்பு கொண்ட பணத்தை கொடுக்காமல் தன் உறவினருக்கு சாதகமாக மிரட்டியுள்ளது ஆதாரங்களுடன் வெளிவருகிறது .

பணம் செட்டில் செய்யாமல் ஏமாற்றுவதுதான் அந்த ‘ சூரிய குடும்ப குழுமத்தில் ‘ பணியில் சேருவதற்கு தகுதியோ என தெரியவில்லை ? ஏனென்றால், முன்னாள் தலைமையும் செட்டில் செய்யாத காரணத்திற்காகத்தான் சேனா ‘ உள்ளே ‘ இருக்கிறார் .

வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி சி பி ஐ – யின் மூன்றாவது குற்ற பத்திரிக்கையில் ‘ சூரிய குடும்பத்தின் அமைச்சர் ‘ மீது குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த நேரத்தில் , அந்த அமைச்சரின் நண்பரும் – தற்போது ‘ சூரிய குழுமத்தின் திரைப்பட ‘ பிரிவில் தலைமை பொறுப்பில் இருப்பவரின் கடந்த கால அடாவடி நடவடிக்கையினால் அமைச்சருக்கு ‘ சிக்கல் ‘ வருமோ என அஞ்சப்படுகிறது .

ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அடக்கி வாசிப்பது நல்லது என நல விரும்பிகளின் ஆதரவாளர்கள் கருதுகிறார்கள் . பார்ப்போம் ,.