இப்போ தெரியுதா?

[wysija_form id=”1″]நம் ஊரில் பிரசவத்துக்கு மருத்துவமனைக்குப் போனால், சிசேரியன் மூலம் குழந்தையை எடுப்பது சகஜமாகிவிட்டது. ஆனால் வெளிநாடுகளில் இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகள் அரிதிலும் அரிதுதான். ‘பெண்கள் மட்டுமே அனுபவிக்கும் இந்த வலியினை ஆண்களும் உணர்ந்தால் எப்படி இருக்கும்?’ என்று யோசித்தது சீனாவின் ஷாங்டாங் நகரிலுள்ள ஒரு மருத்துவமனை. http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-management-books

உங்கள் மனைவி எப்படிப்பட்ட வலியை சகித்துக்கொண்டு பிள்ளையைப் பெற்றெடுக்கிறார் என்பதை உணருங்கள் என அறிவித்தது. 300 பேர் தாங்கள் பிரசவ வலியினை உணர்ந்து பார்க்கத் தயார் ஆனார்கள். பிரசவ வலியை டைப் 1 என்பதில் துவங்கி அளவிடுகிறார்கள். வயிற்றில் இரண்டு பேட்ஜ்களை ஒட்டி அதில் மின்னதிர்வுகளை ஏற்படுத்தி வலியை உண்டாக்கினர். குழந்தை, பெண்ணின் வயிற்றிலிருந்து வெளியே வரும்போது டைப் 10 முதல் டைப் 12 வரை வலி Image3வருமாம். சோதனையில் கலந்துகொண்ட பெரும்பாலான ஆண்கள் நான்காம் கட்ட வலியை உணரும்போதே, அலறித் தவித்து ஆளைவிட்டால் போதும் என்று கத்திவிட்டார்களாம். ‘அதுவும் சில நிமிடங்கள் மட்டும் நீடித்த வலிக்கே இப்படி ஓடியிருக்கிறார்கள். பெண்கள் சாதாரணமாக 12 மணி நேரம் இந்த வலியிலிருக்க நேரிடும்” என்கிறார் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர்.

‘கணவர்கள் வலியை அனுபவிக்கும்போதெல்லாம் உடன் வந்திருந்த மனைவிமார்கள் சிரித்தபடி ரசித்தது ஆச்சர்யமாக இருந்தது. கணவர்கள் கஷ்டப்படுவதில் இவ்வளவு மகிழ்ச்சியா” என்று சிரிக்கிறார் யிங் பான் என்ற இந்த மருத்துவமனையின் நிறுவனர்.

எங்க ஊரில் ஹாஸ்பிடல் பில்லைக் கட்டும்போது இன்னும் வலிக்கும் டாக்டர்ஸ்!http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-management-books

Image2