இருக்கா… இல்லையா ? ஞாயிற்று கிழமை தோறும்…

i444அர்த்த சாஸ்திரம் கூறுகிறது, ” ஆறாவது அறிவினால் அறியமுடியாத அமானுஷ்யங்களை – பரிணாமமடைந்த ஏழாவது அறிவினால் அறியலாம். அந்த ஏழாவது அறிவு கொண்ட மனிதர்கள் இருக்கும் இடம், காந்த சக்தி கொண்ட காற்று மண்டலத்தாலும் – சூட்சுமமான நீராலும் சூழப்பட்டிருக்கும் தீவினில்தான் வாழ முடியும்… ” என கூறுகிறது….’

இரவு மணி 11..
வித்ய சமுத்ரா கப்பல் மெதுவாக அசைந்து அசைந்து 20 நாட்டிக்கல் மைல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
ஏற்கனவே அறிவுடைநம்பி அறையில் நடந்த வினோத நிகழ்ச்சியால், கப்பலில் அவரவர் அறையை விட்டு யாரும் வெளியே வரவில்லை.
கேப்டன் ஞானசேகரன் தன் அறையினுள் இருந்து நேவிகேசன் ரிப்போர்ட்ஸ் பார்த்து கொண்டிருந்தார். கப்பல் இப்போது சென்று கொண்டிருக்கும் இடம் அறிந்தார். வால்டாஸ் தீவுக்கு செல்ல இன்னும் எத்தனை நேரம் ஆகும் ? கணக்கிட்டார். காலை ஆறு மணிக்கு சென்றுவிடலாம்.
கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு யாராக இருக்கும் என யோசித்துவிட்டு, ” யெஸ் … கம் இன்… ” என்றார்.
துணை கேப்டன் சாய் சர்மா கதவை திறந்தார்.
“.. யெஸ்.. சர்மா … வாட் ஹேப்பன் ? ஞானசேகரன் கேட்டார்.
” சார்.. மிஸ்டர் மாசிலாமணி வாண்ட் டு மீட் யூ.. ”
சர்மாவிற்கு பின்னால் மாசிலாமணி நின்றிருந்தார். ” ஒகே… சர்மா… ப்ளீஸ் ” என்றார் ஞானசேகரன். சர்மா புன்னகையுடன் பணிவாய் நகர்ந்தார்.
“.. எஸ் மிஸ்டர் மாசிலாமணி.. ”
“.. சார். இந்த நேரத்தில உங்கள தொந்தரவு செய்றதுக்கு மன்னிக்கனும்.. ” என்றவர் தொடர்ந்து, ” சார்… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னுடைய டேப்லட் – ல பிபிசி செய்தி பார்த்துகிட்டு இருந்தப்ப இந்த செய்தியை பார்த்தேன்… அதான் உங்ககிட்ட உடனே சொல்லனும்னு ஒடி வந்தேன். ” என்று தன் டேப்லட்டை காட்டினார்.
மாசிலாமணி சுட்டி காட்டிய செய்தியை பார்த்தார் ஞானசேகரன். அப்படியே உறைந்து போனார்.
அந்த செய்தி…
” இன்னும் இரண்டு நாட்களில் இந்து மகா சமுத்திரத்தில் உள்ள வால்டாஸ் தீவு பகுதியில் வசிக்கும் ஏழாவது அறிவு கொண்ட அமானுஷ்ய மனிதர்களை கடத்தபோவதாக தீவிரவாதிகள் திட்டம்… அமெரிக்க உளவு பிரிவு தகவல்… ”
ஞான சேகரன் மாசிலாமணியை பார்த்தார். ” மாசிலாமணி … வால்டாஸ் மனிதர்களுக்கு அமானுஷ்யங்களை அறிகிற திறன் இருக்கிற மாதிரி, மனிதர்கள்ல தீவிரவாதிகளை அடையாளம் காண்கூடிய சக்தி இருக்கான்னு தெரியல்ல.. நாம் அங்க போய் சேர்ற நேரத்துல இப்படி சம்பவம் நடந்தா … அந்த மனிதர்கள்கிட்ட எப்படி நம்மல அடையாளப்படுத்தி காட்டறது ? ” என்றார்.
யோசிக்க ஆரம்பித்தனர்.

தொடரும்.. அடுத்த அத்தியாயம் 06 / 09 / 15

முந்தைய அத்தியாயம் படிக்க