உயிர் ( காதல் ) காந்தம்

புவி ஈர்ப்பு விசையின் உயிர் திணைச் சொல்; ( காதல் ) உடலின் உயிர் ஈர்ப்பு விசை சொல்லானது;

புலனறிவு மட்டுமே விசை தொடுக்கும்; மூளையின் மொழியறிவு சற்று தடுமாறும் ;

மௌனம் பேச்சு கலையாகும்;

உடல் பயண வாழ்க்கையில் உயிர் சேர்க்கை இலக்காகும் ;

சொற்கள் சூல் கொண்டு சிந்தனையோடு மகரந்த சேர்க்கையாகும் ;

தன்னியக்க சுழற்சி மறந்து , மாற்று சுழற்சியில் ஆறாவது அறிவு இயங்கும் ;

சொல்ல வந்த வார்த்தையெல்லாம் சுற்று பாதையில் செல்லும் ;

புத்திமதிகள் புறக்கணிப்பு மூளையின் தற்காலிக கட்டளையாகும்;

தன் உருவம் தான் மறக்கும் உயிர் தவம் உருவாகும்;

தன் பெயரின் தித்திப்பு தனக்குதானே புரியும்;

பருவம் கடந்தபின்தான் புரியும் இது ஒரு உயிர் வேதியல் வினையூக்கம் என்று !