உயிர் பானம் (தொடர்)

[subscribe2]

டிரான்வெஸ்ட் மற்றும் டிரான்ஸ் செக்ஸுவல்கள் என்று இரண்டு ரகங்களாக, மனிதர்களில் சிலர் மாறுவதற்கு உளவியல் நிபுணர்கள் பல காரணங்களைச் சொல்கிறார்கள். குழந்தையிலிருந்து வளர்க்கப்பட்ட முறையில் தப்பு இருப்பதுதான் முக்கிய காரணமாகப் பலருக்கும் படுகிறது. சின்ன வயசிலிருந்து பையன் அம்மாவிடம் நெருக்கமாகப் பழகி வளர்வான். அவனுக்கு ரோல்மாடலே அம்மாதான்! கோலம் போடுவது, சமைப்பது என அம்மாவை மாதிரியே செய்ய ஆரம்பித்து, கடைசியில் தன்னைப் பெண்ணாக உணர ஆரம்பித்து விடுகிறான் என்பது ஒரு தியரி.

இன்னும் சில வீடுகளில் பெண்குழந்தை வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால், வரிசை யாக ஆண் குழந்தைகள் பிறக்கும். இதில் ஏதாவது ஒரு குழந்தையைப் பெண் மாதிரி உடை போட்டு, சடை பின்னி, பொட்டு வைத்து வளர்ப்பார்கள். இப்படி வளர்க்கப்படும் குழந்தை, தன்னைப் பெண் என்றே கற்பனை செய்து கொள்கிறது… அதுதான் குழப்பத்துக்குக் காரணம் என்பது இன்னொரு தியரி.

இதைத் தவிர, சின்ன வயதில் செக்ஸ் சித்ரவதையை அனுபவிப்பது, செக்ஸ் பற்றிய விபரீதமான கற்பனைகளோடு வளர்வது, ஹோமோசெக்ஸ் ஆசையை அடக்கி வைத்துத் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது… இப்படி பல காரணங்களும் சொல்லப்படுகிறது.

டிரான்ஸ்செக்ஸுவல்களில் பலர் சீரியஸாக ஆபரேஷன் செய்து, தங்களை மாற்றிக்கொள்ள விரும்புகிறார்கள். வட இந்தியாவின் பிரபல தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த அபர்ணா, நாற்பது வயதில் ஆபரேஷன் செய்து அஜய் என்ற பெயரோடு ஆணாக மாறிய பிறகு, இந்த ஆபரேஷன் பற்றி அதிகம் செய்திகள் வருகின்றன.

ஒருகாலத்தில் உலகம் முழுக்க இந்த மாதிரி பாலினம் மாற்றும் ஆபரேஷன்கள் சட்டவிரோதமாகக் கருதப்பட்டது. ஆனால், ரகசியமாக டாக்டர்கள் இதைச் செய்தபடிதான் இருந்தார்கள். இதை பாப்புலராக்கியது, ஜார்ஜ் ஜார்ஜென்சன் சீனியர் என்ற அமெரிக்க ராணுவ வீரர். சின்ன வயதிலிருந்தே இவருக்குத் ‘தான் ஒரு பெண்’ என்ற உணர்வு இருந்தது. இருந்தாலும் இவர் தேர்ந்தெடுத்தது, ராணுவ வேலையை! ஒன்றரை வருஷம் ராணுவத்தில் வேலை பார்த்த ஜார்ஜ், உடம்பு சரியில்லாததால் ராஜினாமா செய்தார். அப்போது டென்மார்க்கில் மட்டும் அரசு அனுமதியோடு இந்த ரக ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. தனது இருபத்தாறாவது வயதில் டென்மார்க் போன ஜார்ஜ், ஆபரேஷன் செய்து கொண்டு கிறிஸ்டி ஜார்சென்சன் என்ற பெயரோடு பெண் தோற்றத்தில் திரும்பி வந்தார்.

அது 1952-ம் வருஷம். இவரது ஆபரேஷன் பற்றி ‘நியூயார்க் டெய்லி நியூஸ்’ பத்திரிகை முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது. ‘முன்னாள் ராணுவ வீரர், அழகான பெண்ணாக மாறினார்’ என்பதுதான் தலைப்பு. அந்த செய்தி உலகம் முழுக்கப் பற்றிக்கொண்டது. கிறிஸ்டி அழகாக வேறு இருந்தார்… அதனால் ஒரு பத்திரிகை விடாமல் அவரது போட்டோ வந்தது.

இந்த பாப்புலாரிட்டியை அவர் புத்திசாலித் தனமாகப் பயன்படுத்திக் கொண்டார். கல்லூரிகள், சமூக சேவை அமைப்புகளின் கூட்டங்கள் என பல இடங்களில் போய் அரவாணிகளுக்கு ஆதரவாகப் பேசினார் (ஒரே ஒரு தடவை டி.வி. ‘டாக் ஷோ’ ஒன்றில் மட்டும் கிறிஸ்டி அவமானப்பட நேர்ந்தது. நிகழ்ச்சியை நடத்தியவர், தடாலடியாக ஒரு கேள்வி கேட்டார். ஆபரேஷனுக்கு முன் ஜார்ஜாக இருந்தபோது அவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். ‘கிறிஸ்டி என்ற பெண்ணாக மாறியபிறகு உங்கள் மனைவியுடன் எப்படி ரொமான்ஸ் செய்கிறீர்கள்?’ என கேள்வி வந்தபோது, அவர் திகைத்துப் போனார். ஒன்றும் சொல்ல தெரியாமல் அவமானத்தோடு வெளிநடப்பு செய்தார்).

மேடைகளில் பாடுவது, இரவு விடுதிகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்துவது என சம்பாதித்து சொகுசாக வாழ்ந்த கிறிஸ்டியின் கதை, ஹாலிவுட் படமாகவும் வந்து நன்றாக ஓடியது.

ஆனால், எல்லோருக்கும் கிறிஸ்டி மாதிரி அமைந்து விடுவதில்லை. அமெரிக்கரான ரீனி ரிச்சர்ட்சன் ஒரு கண் டாக்டர். ரிச்சர்டு ரஸ்கின்ட் என்ற பெயரோடு ஆணாகப் பிறந்தவர். கல்யாணமாகி ஒரு குழந்தையும் பிறந்த பிறகு பாலின மாற்று ஆபரேஷன் செய்துகொண்டு பெண்ணாக மாறினார். டென்னிஸ் விளையாட்டில் அவருக்கு உயிர். பெண்ணாக மாறிய பிறகு அமெரிக்க ஓபன் பெண்கள் பிரிவில் அவர் விளையாடப் போனபோது தடுத்து விட்டார்கள். கோர்ட்டில் வழக்குப் போட்டுத் தன் உரிமையை நிலைநாட்டி, அடுத்த ஆண்டு விளையாட வந்தார் அவர். ஒரு தடவை வெற்றியும் பெற்றார். ஆனால், தன் வாழ்க்கையின் கடைசி நாட்களில் ஒரு டி.வி. பேட்டியில், ‘ஆபரேஷன் செய்துகொண்டு பெண்ணாக மாறியதற்கு இப்போது வருத்தப்படுகிறேன்’ என மனம் நொந்து சொன்னார்.

சமூகம் சில விஷயங்களை அவ்வளவு எளிதாக ஜீரணித்துக் கொள்ளாது. ஆபரேஷன் செய்து தனது பாலின அடையாளத்தை மாற்றிக்கொண்டு, சமுதாயத்தின் கேலிப் பார்வைகளை சகித்துக்கொண்டு வாழ, உறுதியான மனப்பக்குவம் வேண்டும். அது இல்லாத பலர், தற்கொலை செய்துகொண்டு இறந்து போகிறார்கள். சிலர் அனுபவமற்ற டாக்டர்களிடம் ஆபரேஷன் செய்து கொள்கிறார்கள். இதில் தப்பு நடந்து இறந்துபோகிறவர்கள் நிறைய பேர்.

இந்த ஆபரேஷனுக்கு என்று சில நடைமுறைகள் இருக்கின்றன. முதலில் உளவியல் பரிசோதனை செய்வார்கள். ஆபரேஷனுக்குப் பிறகு அவர்களால் சமுதாயத்தில் வாழமுடியுமா என்பதை அறிய இந்த சோதனை. இதன்பிறகு அவர்கள் இதற்கு சட்டப்படி கோர்ட் அனுமதி வாங்க வேண்டும். இதைப் பெற்ற பிறகே ஆபரேஷன் செய்யலாம். இது ஒருநாளில் செய்து முடிக்கிற ஆபரேஷன் இல்லை.

ஆணாக இருந்து பெண்ணாக மாற விரும்பும் ஒருவருக்கு, பெண்களின் ஹார்மோன்களை செலுத்துவார்கள். இதுதவிர முகத்தில் மீசை, தாடி ஆகியவற்றை அகற்ற லேசர் சிகிச்சை தரப்படும். இந்த சிகிச்சை தரப்படும் இரண்டு ஆண்டுகளும் அந்த ஆண், பெண்களின் உடையை அணிய வேண்டும். அரைகுறையாக முகத்தில் இருக்கும் தாடி, மீசையோடு பெண்களின் உடை அணிந்து பொது இடங்களுக்குப் போகிறபோது, மற்றவர்களது விசித்திரமான பார்வைகளைத் தாங்கிக்கொள்ள வேண்டும்.

இதன்பிறகே பிரதான ஆபரேஷன்! பிளாஸ்டிக் சர்ஜன், உளவியல் நிபுணர் அல்லது செக்ஸாலஜி நிபுணர், ஹார்மோன் ஸ்பெஷலிஸ்ட், சிறுநீரகவியல் நிபுணர் இப்படி ஒரு குழுவே சேர்ந்து ஆபரேஷன் செய்யும். ஆபரேஷனுக்குப் பிறகும் நிரந்தரமாக ஹார்மோன் மருந்துகளை செலுத்திக்கொள்ள வேண்டும்.

ஒருமுறை இப்படி ஆபரேஷன் செய்துகொண்ட பிறகு திரும்பவும் பாலினம் மாற முடியாது. அது மட்டுமில்லை… இப்படி ஆபரேஷன் மூலம் முழுமை பெற்ற பெண்ணாகவோ, ஆணாகவோ ஒருவர் மாறிவிட முடியாது. ஆண், பெண்ணாக மாறும்போது வெளிப்புற தோற்றங்களில்தான் மாற்றம் நிகழும். அவர்களுக்குக் கருப்பை கிடையாது என்பதால், குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை. இதே நிலைதான் பெண்ணாக இருந்து ஆணாக மாறுபவர்களுக்கும். சிகிச்சை முறையும் அதே போலத்தான். இருந்தாலும் விதை, விந்து தயாரிப்பு இல்லாததால் இவர்களால் தந்தையாக முடியாது.

ஒட்டுமொத்தமாக நாம் ஒரு விஷயத்தை உணர வேண்டும்… அரவாணிகளாக இருப்பவர்களை சமூகம் கேலிப் பார்வையோடுதான் பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர்களும் மனிதர்கள்தான். இயற்கைதான் அவர்களுக்குத் தண்டனை கொடுத்திருக்கிறது. சக மனிதர்களான நாம் செயற்கையாகவேறு தண்டனைகள் கொடுத்துத் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும்.

DOWNLOAD BOOKS http://tamilagamtimes.com/?post_type=product
WE ARE TAMILAGAMTIMES PUBLISHERS
YOU CAN DOWNLOAD BOOKS FROM FOLLOWING CATEGORIES

accounting-finance
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=accounting-finance

career-study-advice
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=career-study-advice

career-management-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=career-management-books

communication-presentation-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=communication-presentation-books

engineering-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=engineering-books

engineering-for-professionals
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=engineering-for-professionals

entrepreneurship-small-business
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=entrepreneurship-small-business

it-management-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-management-books

it-programming-computer-science-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-programming-computer-science-books

language-learning-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=language-learning-books

management-strategy-development
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=management-strategy-development

marketing-sales
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=marketing-sales

natural-sciences-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=natural-sciences-books

office-programs-software
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=office-programs-software

personal-development-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=personal-development-books

statistics-mathematics
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=statistics-mathematics