உயிர் பானம் ( தொடர் )

[subscribe2]

‘சுய இன்பம்.’ -இதற்கு பேச்சுவழக்கில் பயங்கரமான பல பெயர்கள் உண்டு. படிக்கிற வயசில் இளைஞர்கள், பெண்கள் பலருக்கு இந்தப் பழக்கம் சுயமாக வந்து விடுகிறது. மிக நீண்ட நெடிய வரலாறு இந்தப் பழக்கத்துக்கு உண்டு. எப்படி செக்ஸைப் பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உள்ளனவோ, அதேபோல சுய இன்பம் பற்றியும் கதைகள் உண்டு.

எல்லோரும் நினைக்கிற மாதிரி சுய இன்பம் அனுபவிப்பது, தப்பான விஷயம் இல்லை. அது ஒரு நோயும் இல்லை. ஆனால், இதைச் சொன்னால் ஏற்றுக் கொள்கிறவர்கள் குறைவு.

சமீபத்தில் இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தேன். இதைப் படித்துவிட்டு ஒரு இளைஞர் என் மருத்துவமனைக்கு வந்தார். ‘‘நீங்க சொன்ன விஷயம் ரொம்ப கரெக்ட் சார்! துணிச்சலா சொல்லி இருக்கீங்க’’ என்றார்.

எனக்கு இதைக் கேட்டதில் மகிழ்ச்சி. ‘பரவாயில்லை… நாம் சொன்னதை இவர் ஒருத்தராவது சரியா புரிஞ்சிகிட்டாரே’ என நான் நினைக்கும்போதே அவர் பேசினார். ‘‘டாக்டர்! நீங்க ஆபத்தில்லைனு சொன்னாலும் எனக்குப் பயமா இருக்கு. நான் அந்தப் பிரச்னைக்காகதான் சிகிச்சைக்கு வந்தேன். நானும் இதுக்கு அதிகமா அடிமையாயிட்டேன் டாக்டர்! ஏதாவது மருந்து, மாத்திரை கொடுத்து என்னைக் காப்பாத்துங்க!’’

நான் வெறுத்துப் போனேன். படித்த வர்கள் என்றில்லை… பல டாக்டர்களேகூட இதை ஒரு நோயாகக் கருதுவதுதான் சோகமான உண்மை.

பிறப்பு உறுப்பை வலுக்கட்டாயமாகத் தூண்டிவிட்டு இன்பம் பெற முயற்சிப்பதுதான் ‘சுய இன்பம்’ எனப்படுகிறது. இதில் பலருக்குக் கட்டாயம் விந்தணு வெளியேற வேண்டும் என்றில்லை… சும்மா சுகம் அனுபவிப்பதே போதும் என்று நினைப்பார்கள்.

ஆங்கிலத்தில் இதை மாஸ்டர் பேஷன் ( masturbation ) என்று சொல்கிறார்கள். ‘இது இயற்கைக்கு முரணான செக்ஸ் பழக்கம்’ என முதலில் பிரகடனம் செய்தது மதத்தலைவர்கள். காரணம்… இந்த செயலால் சந்ததி உருவாக வாய்ப்பில்லை என்பது மட்டும்தான்!

சுய இன்பத்துக்கு ‘ஓனானிஸம்’ என இன்னொரு பெயரும் உண்டு. இப்படி பெயர்வரக் காரணம் ஓனான் என்ற யூத மன்னன். ஓனானின் அண்ணன் எர் என்பவர்தான் முதலில் நாட்டை ஆண்டு வந்தார். அவர் அகால மரணமடைந்து விட, ஓனான் முடிசூட்டிக் கொண்டான். அந்தக்கால மரபுப்படி இறந்த மன்னனின் மனைவியுடன் புதிய மன்னர் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இந்த உறவின் மூலம் மகாராணிக்குப் பிறக்கும் குழந்தை புதிய மன்னரின் வாரிசாகக் கருதப்படாது. இறந்த மன்னரின் கணக்கில்தான் வரவு வைக்கப்படும். ஓனான் தனது அழகான அண்ணி தமருடன் மரபுப்படி உறவு கொண்டான். ஆனால் ‘இந்த உறவின் மூலம் குழந்தை பிறந்து, அது அண்ணனின் வாரிசாக நாட்டை ஆள்வதா?’ என்ற கேள்வி அவனுக்குள் எழ, வித்தி யாசமான ஒரு உத்தியைக் கடைப்பிடித்தான். உறவின் கடைசித் தருணத்தில் விந்தை தரையில் விட்டுவிடுவான். இப்படியே அவன் தொடர்ந்து செய்ய, இந்தப் ‘பாவத்துக்கு’ தண்டனையாக கடவுள் அவனைக் கொன்றதாக பைபிள் சொல்கிறது.

இதற்கும் சுய இன்பத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை. ஆனால், ‘கருவுறுதலில் முடியாத உறவு ஓனானிஸம்’ என கருதப்பட்டு எல்லாப் பழக் கங்களுக்கும் அந்தப் பெயரையே வைத்து விட்டார்கள்.

பாவமாகவும், இயற்கைக்கு முரணான பழக்கமாகவும் கருதப்படும் சுய இன்பத்தை எத்தனை பேர் அனுபவிக்கிறார்கள்? கடந்த ஐம்பது ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல செக்ஸ் சர்வேக்கள் அதிர்ச்சிதரும் உண்மைகளை அம்பலப்படுத்தின (பிரபல செக்ஸ் ஆராய்ச்சியாளர் கின்ஸி அமெரிக்காவில் எடுத்த சர்வேபடி, ‘ஆண்களில் 92 சதவிகிதம் பேரும், பெண்களில் 52 சதவிகிதம் பேரும் சுய இன்பத்தை அனுபவிக்கிறார்கள்’ என்பதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்). ஷியரி ஹைட் என்ற பெண் உளவியல் நிபுணர், 76-ம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு சர்வே எடுத் தார். ‘பெண்களில் 82 சதவிகிதம் பேர் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள்’ என்பது அவரது சர்வே முடிவு. 81-ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்று, ‘ஆண்களில் 99 சதவிகிதம் பேர் சுய இன்பம் அனுப விக்கிறார்கள்’ என்று தெரிவித்தது.

நம் நாட்டிலும் நிலைமை கிட்டத்தட்ட இதுதான்! இப்படி உலகம் முழுக்க பெரும்பான்மை சதவிகிதத்தினர் அனுபவிக்கும் ஒரு பழக்கம்தான் ‘இயற்கைக்கு விரோதமானது’ என முத்திரை குத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் வரலாற்றைப் பார்த்தால், வெவ்வேறு காலகட்ட மக்களிடையே இந்தப் பழக்கம் இயல்பான ஒரு கலாசார வெளிப்பாடாக இருந்து உள்ளது புரியும். பழங்கால எகிப்து மக்களின் முதற்கடவுள் ஆடம். சுயம்புவாக உருவான கடவுள் இவர். இந்த உலகில் முதலில் தோன்றியவர் இவர்தான் என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை. ‘இந்த உலகமே உயிரினங்கள் எதுவும் இல்லாமல் வெற்றிடமாக அப்போது இருந்தது. அன்னு என்ற நகரில் நின்றுகொண்டு இவர் சுய இன்பம் அனுபவிக்க, அவரது உறுப்பிலிருந்து வெளியான விந்தணு உலகம் முழுக்க பரவியது. இதிலிருந்து முதலில் ஷ§ மற்றும் டெஃப்நட் ஆகிய கடவுளர்கள் தோன்றினர். அப்புறம் அவர்கள் எல்லா உயிரினங்களையும் படைத்தனர்’ என்கின்றன எகிப்திய புராணங்கள்.

‘ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பழங்காலத்தில் சுய இன்பம் அனுபவித்தனர்’ என்கிறது, கிரேக்க சமூகவியல் வரலாறு. ‘ஒலிஸ்பாஸ்’ என்ற பெயரில் செயற்கை ஆண் உறுப்பு இதற்காகக் கடைகளில் விற்றது. திருமணம் மூலமாக செக்ஸ் இன்பம் பெற வாய்ப்பில்லாத நகரத்துப் பெண்கள் இதை வாங்கி சுய இன்பம் அனுபவிக்கப் பயன்படுத்தினர்.

நாகரிகம் அடைந்த மக்கள் என்றில்லை… பழங்குடியினரிடம்கூட இந்தப் பழக்கம் இருந்தது. உதாரணமாக- தென் ஆப்பிரிக்காவில் வாழும் ஜூலு இன மக்கள். சிறுவர், சிறுமி களுக்கு வேட்டை மற்றும் போர்பயிற்சி தரும் போது கூடவே சுய இன்பம் செய்வது எப்படி என்றும் அப்பா-அம்மாவே கற்றுத் தருவார்கள். ‘பெரியவர்களாகித் திருமணம் நடந்ததும் இந்தப் பழக் கத்தை மறந்துவிட வேண்டும்’ என கண்டிப்போடு அட்வைஸ் செய்வார்கள்.

மருத்துவரீதியாக இதுபற்றி தவறான நம்பிக்கையை விதைத்தவர், நவீன மருத்துவ முறையின் தந்தை என புகழப்படும் ஹிப்போகிரேடஸ். அவரது காலத்தில் விந்தணு முதுகுத் தண்டில் சுரப்பதாக மருத்துவர்கள் நம்பிவந்தார்கள். ‘‘தொடர்ந்து ஒரு நபர் சுய இன்பத்தில் ஈடுபட்டு தனது செக்ஸ் திரவத்தை வீணாக்கி வந்தால், அவருக்கு முதுகெலும்பில் இருக்கும் திரவம் தீர்ந்து போய்விடும். அப்புறம் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு அவரது மனநிலை பாதிக்கப்படும்’’ என்றார் அவர். ‘சுய இன்பம் பாவம்’ என்ற மத நம்பிக்கை, ‘இது உடல்நலத்துக்கு கேடு’ என்ற மருத்துவ நம்பிக்கையாக மாறியது அப்போதுதான்!

அதன்பிறகு வந்த டாக்டர்கள் இதே ரூட்டில் தங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு இஷ்டத்துக்கு கதைவிட்டனர். 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவிட் சர்லாந்து டாக்டர் டிஸ்ஸாட் என்பவர் சுய இன்பத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு என்னென்ன நோய்கள் வரும் என பெரிய பட்டியலே போட்டார். ‘ஆண்கள் இதில் ஈடுபட்டால் நரம்புத் தளர்ச்சி வந்து பைத்தியம் பிடிக்கும். காக்காவலிப்பு வரும். முகத்தில் பரு வரும். மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். கண்கள் உள்ளே போய்விடும். கண்களுக்குக் கீழே கருவளையம் விழும். கன்னங்கள் ஒடுங்கி நாக்கு வெளியில் தள்ளிவிடும். பெண்களுக்கு இதைவிட பயங்கரமான விளைவுகள் ஏற்படும்… தலைமுடி கொட்டி வழுக்கை விழும். மாதவிலக்கின் போது வலி கடுமையாக இருக்கும். குழந்தை பிறக்கும்போதும் பயங்கர வலி இருக்கும். குழந்தை செத்துப் பிறக்கும். கடும் வயிற்றுவலி ஏற்பட்டு கர்ப்பப்பை, பெண்குறி வழியாக வெளியில் வந்துவிடும்.’

இப்படி ஹோட்டல் மெனு கார்டு ரேஞ்சுக்கு இவர் பட்டியல் போட, மற்ற டாக்டர்கள் இதைவிட ஒருபடி மேலே சொல்ல வேண்டிய நிலை வந்தது.

இப்படி கற்பனையான விளைவுகளைச் சொல்லி, ‘சுய இன்பத்தைக் குணப்படுத்த’ இவர்கள் தந்த சிகிச்சைகள் பயங்கரமானவை.

DOWNLOAD BOOKS http://tamilagamtimes.com/?post_type=product
WE ARE TAMILAGAMTIMES PUBLISHERS
YOU CAN DOWNLOAD BOOKS FROM FOLLOWING CATEGORIES
accounting-finance
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=accounting-finance

career-study-advice
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=career-study-advice

career-management-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=career-management-books

communication-presentation-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=communication-presentation-books

engineering-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=engineering-books

engineering-for-professionals
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=engineering-for-professionals

entrepreneurship-small-business
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=entrepreneurship-small-business

it-management-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-management-books
it-programming-computer-science-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-programming-computer-science-books

language-learning-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=language-learning-books

management-strategy-development
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=management-strategy-development

marketing-sales
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=marketing-sales

natural-sciences-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=natural-sciences-books

office-programs-software
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=office-programs-software

personal-development-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=personal-development-books

statistics-mathematics
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=statistics-mathematics