உயிர் பானம் – 4

[subscribe2]

செக்ஸ் உறவில் கிடைக்கும் பரவசமான சுகம் எப்படி இருக்கும்? இதை வர்ணிக்க முயன்ற எல்லோருமே தோற்று விட்டார்கள். வாத்ஸாயனரும் இதற்கு விதிவிலக்கு இல்லை. ‘அது கிட்டத்தட்ட தும்மல் மாதிரி… ஆரம்பித்த பிறகு நிலைகொள்ளாமல் தவிக்க விடும். எப்போது வெளிப் படுமோ எனப் பதற்றம் அடைய வைக்கும்… முடிந்ததும் அடுத்த நொடி அமைதி யாகி விடும்’ எனச் சொல்கிறார் அவர்.

அப்படியும்கூட அவருக்கு சரியாக சொன்னோமா என்று குழப்பம் வருகிறது. அதனால், ‘அனுபவித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது. இந்த சுகம் எப்படிப்பட்டது என்று கேட்டால், யாராலும் பதில் சொல்ல முடியாது. ஆணுக்கு விந்தணு வெளியேறுவதால் சுகம் கிடைக்கிறது. இந்த அனுபவம் எப்படி என்பது அவருடைய மனைவிக்குத் தெரியாது. ஆனால், பெண்களுக்கு அப்படி எந்த திரவமும் வெளியேற வாய்ப்பில்லை. அவர்களுக்கும் சுகம் கிடைக்கிறது. அது எப்படிப்பட்ட பரவசம் என்பது கணவனுக்குத் தெரி யாது. இப்படி இருக்க இதை எப்படி விவரிப்பது, என்ன எழுதுவது?’ என்ற கேள்வியோடு முடிக்கிறார்.

இதேபோல ‘செக்ஸ் உறவு எந்தக் கணத்தில் முழுமை பெறுகிறது’ என்பதையும் அலசுகிறார் அவர். ‘பரவசம் கிடைத்ததுமே பெண்ணிடமிருந்து ஆண் விலக முயற்சிப்பான். ஆனால், பெண் விடமாட்டாள். இறுக்கி அணைத்து, இன்னும் வேண்டும் என்பதுபோல செயல் படுவாள்’ என்கிறார் வாத்ஸாயனர்.

‘செக்ஸ் உறவின் உச்சகட்டத்தில் ஆண்களுக்கு விந்தணு வருவதைப் போல பெண்களுக்கும் ஏதோ ஒரு திரவம் வெளியேறுகிறது’ என்று மேற்கத்திய நிபுணர்கள் ஐம்பது ஆண்டு களுக்கு முன்புவரைகூட நம்பினர். ஆனால், செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சியை நடத்தியவர் களான மாஸ்டர்ஸும், ஜான்சனும் நடத்திய படுக்கை அறை ஆராய்ச்சிக்குப் பிறகுதான் இது தவறு என்பது புரிந்தது.

‘ஆண்களுக்கு இருப்பது போல பெண்களுக்கு சில சுரப்பிகள் இல்லை. இதனால் பெண்களுக்கு எதுவும் வெளியேறுவது இல்லை’ என்ற அவர்கள், இன்னொரு விஷயத் தையும் சொன்னார்கள். ‘செக்ஸ் உறவில் ஆண் களுக்கும், பெண்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. ஆண்களுக்கு விந்து வெளியேறிய பிறகு கண்டிப்பாக ஓய்வு வேண்டும். திரும்பவும் அடுத்த ரவுண்டை ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டும். ஆனால், பெண்கள் அப்படி இல்லை. அவர்களுக்குத் திரவமாக எதுவும் வெளியேறுவது இல்லை என்பதால், ஒரே நிமிடத்தில்கூட திரும்பவும் இன்னொரு முறை உறவில் ஈடுபட்டு உச்சகட்டத்தை அடைய அவர்களால் முடியும். இதனால்தான் உறவு முடிந்ததும் விலக முயற் சிக்கும் ஆணை இறுக்கமாக அணைக்கிறாள் பெண்’ என்று அவர்கள் கண்டுபிடித்துச் சொன்னார்கள்.

இதையெல்லாம் பல நூற்றாண்டுக்கும் முன்பே கண்டுபிடித்துச் சொல்லியிருப்பது மட்டுமில்லை, காம சூத்திரத்தின் சிறப்பு. கணவனும் மனைவியும் இல்லற வாழ்க்கையில் இரண்டறக் கலக்க நல்வழிகளைச் சொல்லும் ஓர் ஆசானாகவும் அது இருக்கிறது.

செக்ஸ் உறவு முடிந்த அடுத்த ஓரிரு நிமிடங்களில் குறட்டைவிடும் பழக்கம் பல பேருக்கு உண்டு. ‘இந்தியர் கள் தங்கள் மனைவியைத் தூக்க மாத்திரையாகப் பயன் படுத்துகிறார்கள்’ என்று செக்ஸாலஜி நிபுணர்கள் கிண்டலடிப்பார்கள்.

வாத்ஸாயனர் ‘இது ரொம்பத் தப்பு’ என்கிறார். ‘செக்ஸ் முடிந்த பிறகு களைப்பில் மனைவிக்கு முதுகு காட்டித் திரும்பிப் படுக்கக் கூடாது. இரண்டு பேரும் அன்போடு கட்டிப்பிடித்து முத்தத்தை பரிமாறிக்கொள்ள வேண்டும். பரவசத்தைத் தூண்டும் வெறித்தனமான முத்தம் தேவையில்லை. ஒரு குழந்தையை முத்தமிடும் போது காட்டும் களங்கமற்ற அன்புதான் அதில் கலந்திருக்க வேண்டும். செக்ஸ் உறவின் சிகரத்தைத் தொட்டுவிட்டு ஓய்வெடுக்கும்போது மனம் அமைதியில் மூழ்கியிருக்கும். இதுபோன்ற அமைதி வேறெந்த சந்தர்ப்பத்திலும் கிடைக்காது. அந்த நேரத்தில் மனம்விட்டுப் பேச வேண்டும். இப்படி பேசுவதுதான் பரஸ்பரம் இருவர் மனதிலும் அன்பை ஊற்றெடுக்க வைக்கும். பாசப் பிணைப்பை அதிகமாக்கும்’ என்கிறார் அவர். நவீன செக்ஸ் சிகிச்சையில் ‘கணவன்-மனைவி சண்டையைத் தவிர்க்க’ இந்த விஷயத்தைதான் டாக்டர்கள் செய்யச் சொல்கிறார்கள்.

‘செக்ஸில் ஆணுக்குக் கிடைக்கும் இன்பத்தைவிட பெண் ணின் திருப்திதான் மிகவும் முக்கியம்’ என்பது வாத்ஸாயனர் கட்சி. இதற்காக அவர் நேரடியான செக்ஸ் உறவுக்கு மாற்று ஏற்பாடாக இருக்கும் பல முறைகள் பற்றி விளக்க மாகச் சொல்கிறார். இதில் முக்கியமானது, இப்போது ‘வைப் ரேட்டர்கள்’ என்ற பெயரில் மார்க்கெட்டில் விற்கப்படும் செயற்கை ஆண் உறுப்பு.

வாத்ஸாயனர் காலத்தில் இதற்கு ‘அப திரவியம்’ என்று பெயர். தங்கம், வெள்ளி, யானைத் தந்தம், பித்தளை, மரம் என வெவ்வேறு பொருட்களில் செய்யப்பட்டு இவைக் கிடைத்தன. செக்ஸ் உறவில் பரவசம் அடைய முடியாத பெண்கள் இவற்றைப் பயன்படுத்தினர்.

நவீன கால வைப்ரேட்டர்கள் 1869-ம் ஆண்டு அறிமுக மானது. நம் மண்ணில் இவை ஆறாயிரம் ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தின் தொட்டிலான ஹரப்பாவில் புதைபொருள் ஆராய்ச்சி செய்தபோது கிடைத்த புராதன பொக்கிஷங்களில் செயற்கை ஆண் உறுப்புகளும் அடக்கம்!).

அவர் சொல்லும் இன்னொரு விஷயம், ‘வாய்வழி உறவு.’ வழக்கமான செக்ஸில் பிரச்னை இருந்து, உறவு சாத்தியமில்லாமல் போனால், இந்த முறையைக் கையாண்டு பார்க்கலாம்… (நிறைய பேர் ஜனன உறுப்புகள் சுத்தமில்லாதவை என நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் வாய்தான் அசுத்தமானது. எந்த நேரத்திலும் குறைந்தது நாற்பதாயிரம் பாக்டீரியாக்கள் வாயில் இருக்கும். ஜனன உறுப்புகளை, குளிக்கும்போது சுத்தம் செய்தால் போதும்).

இதுபோன்ற பல விஷ யங்களை நாசூக்காக விவ ரிக்கும் வாத்ஸாயனர், ‘இவற்றைக் கண்டிப்பாக பின் பற்றுங்கள் என சொல்லமாட்டேன். தேசம், சூழ்நிலை, வாழ்கிற காலம் ஆகியவற்றை மனசில் வைத்துக்கொண்டு, இது நல்லதா, கெட்டதா என தீர்மானியுங்கள்’ என முடிவெடுக்கும் பொறுப்பை வாசகரிடம் கொடுத்து விடுகிறார்.

ஒப்பனைக் கலை பற்றியும் வாத்ஸாயனர் விவரிக்கிறார். ‘கணவன்-மனைவி உறவில் சந்தோஷம் நீடிக்க, ஒருவர் மீது இன்னொருவர் கொண்டிருக்கும் கவர்ச்சி நீடிக்க வேண்டும். எனவே அலங்கரித்துக்கொள்ள மறக்காதீர்கள்’ என்பது அவரது அட்வைஸ். இன்னமும்கூட நிறைய பேர் தப்பு செய்வது இந்த விஷயத்தில்தான்.

திருமணத்துக்கு முன்பு அவர்கள் வெளியில்தான் சந்தித்து இருப்பார்கள். வாரிச் சீவிய தலை கலையாமல், பவுடர் பூச்சு, சென்ட் வாசனை என சந்திப்பு நிகழும். ‘இதுதான் தங்கள் ஜோடி’ என்ற பிம்பம் அவர்களது மனதில் பதிந்துவிடும்.

ஆனால், திருமணம் நடந்த மறுநாளே கணவன் ஒரு அழுக்குக் கைலியோடும், கிழிந்த பனியனோடும் வீட்டில் நடமாட, மனைவி தலைசீவாமல் சும்மா சுருட் டிக் கொண்டை போட்டுக்கொண்டு, எண்ணெய் வடியும் முகத்தோடு இருப்பார். இருவருக்குமே இது எதிர்பார்க் காத கோலமாக இருக்கும். தங்கள் மனதில் இருக் கும் பிம்பத்தோடு இந்த நிஜம் ஒத்துப் போகாத உறுத் தல், ஒவ்வொரு நாளும் அதிகமாகும். இந்த ஏக்கத்தில் இருக்கும் கணவன், ரோட்டில் முழு மேக்கப்போடு போகும் வேறொரு பெண்ணைப் பார்ப்பான். ‘அந்தப் பெண் அவரது சொந்த வீட்டில் எந்த கோலத்தில் இருப்பாள்’ என யோசிக்க தோன்றாது. ‘நம் மனைவியைவிட இவள் அழகு’ என்ற நினைப்புதான் வரும். சமயத்தில் இதே மாதிரி மனைவிக்கும் தோன்றக் கூடும். கவர்ச்சி இல்லா விட்டால், ஈர்ப்பு இருக்காது. செக்ஸிலும் ஆர்வம் வராது. எப்போதும் ‘பளிச்’சென இருந் தால் பிரச்னை இல்லை.

இவ்வளவு வாழ்க்கை ரகசி யங்களையும் சொன்ன வாத் ஸாயனர், காமசூத்திரத்தைப் பெண்களும் படிக்க வேண்டும் என விரும்பினார். ‘குடும்பப் பொறுப்பில் இருப்பது போல செக்ஸிலும் பெண்களுக்கு சமபங்கு உண்டு. அவர்களும் இதைப் படித்துக் கற்றுக் கொண்டால்தான் எப்படிப் பழக வேண்டும், எது செய்யக் கூடாத விஷயம் என புரியும். ஒரே நிபந்தனை… அவர்கள் தங்கள் கணவரிடம் அனுமதி பெற்ற பிறகே இதைப் படிக்க வேண்டும்’ என்றார் அவர்.

ஏன் அனுமதி? இல்லாவிட் டால் மனைவியின் நடத்தை குறித்துக் கணவன் சந்தேகப் பட வாய்ப்பு உண்டு என கவலைப்படுகிறார் அவர்.

இந்திய கலாசாரத்தில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற் றங்கள்தான் காமசூத்திரத்தை மறக்கடித்து விட்டது.

நன்றி விகடன்

FOLLOW OUR DOMAIN VIA MAIL TO GET UPDATES NEW ARTICLES @ YOUR INBOX

[subscribe2]

VISIT OUR GROUP OF DOMAINS

EDITOR – www.tamilagamtimes. com

http://yazhinimaran.com/ FOR MEDICAL ARTICLES
http://isaipriyanka.com/ FOR ECONOMICAL ARTICLES
https://kaviazhaku.com / FOR POLITICAL & SOCIAL ARTICLES
http://shanthivinayagam.com/ FOR WOMEN
http://alagusundari.com/ FOR SPIRITUAL