“ஐ.டி. யில் எப்பவும் எதுவும் நடக்கலாம்!”

 [wysija_form id=”1″]அத்தனை அவநம்பிக்கை செய்திகளுக்கு இடையில், அது ஒரு சின்ன நம்பிக்கைக் கீற்று. ஐ.டி துறைகளில் கொத்துக்கொத்தாக நடக்கும் ஆள்குறைப்புக்குப் பலியான ஊழியர்களில் இவரும் ஒருவர். பிற துறைகளைப்போல தொழிற்சங்கச் சட்டங்களின் பாதுகாப்பு இல்லாமல் தவித்து, தத்தளித்துக்கொண்டிருந்தனர் வேலை இழந்த ஐ.டி துறைப் பணியாளர்கள். அவர்களிடையே, ‘தங்களுக்கு நடந்தது அநீதி’ என நியாயம் கேட்டு நீதிமன்றம் நாடிய வெகுசிலரில் இவரும் ஒருவர். ‘ஏன் இவரை வேலையில் இருந்து விலக்கினீர்கள்?’ என்ற நீதிமன்ற கேள்விக்குப் பதில் சொல்வதைத் தவிர்க்க, இவரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொண்டிருக்கிறது அந்த நிறுவனம்.Strategies to Fight Exam Stress & Achieve Success

இந்திய ஐ.டி நிறுவனங்கள் இடையே ‘அரசாங்க அந்தஸ்துடன்’ விளங்கும் அந்த நிறுவனத்தில் மீண்டும் பணியில் சேர்ந்திருக்கிறார் அந்தப் பெண். அவர்… ரேகா. நான்கு பெண்களைக் கொண்ட நடுத்தரவர்க்கக் குடும்பத்தில் இருந்து வந்த ரேகா, ஐ.டி துறை ஊழியர்கள் இடையே விதைத்திருக்கும் நம்பிக்கை மிகவும் பிரமாண்டமானது. தன் எதிர்கால நலன் கருதி புகைப்படம் தவிர்த்துவிட்டுப் பேசினார்…

”திருவாரூர் பக்கத்துல கோட்டூர் கிராமம் எனக்கு. என் அப்பா, ஓய்வுபெற்ற கல்வித் துறை ஊழியர். அம்மா, கிராமத்து அப்பாவி. வசதியும் இல்லாம, வறுமையும் இல்லாம ஒரு மாதிரியான  பட்ஜெட் குடும்பம் எங்களோடது. எனக்கு மூணு அக்கா. நான்தான் கடைக்குட்டி. செல்லமா வளர்ந்தேன். பி.எஸ்சி., முடிச்சுட்டு கம்ப்யூட்டர் கோச்சிங் சென்டர்ல வேலைக்குப் போயிட்டு இருந்தேன். மூணு அக்காக்களை மாதிரி நானும் ஸ்கூல் டீச்சர் வேலைக்குப் போகணும்னு ஆசைப்பட்டார் அப்பா. ஆனா எனக்கு, சென்னையில ஏதாவது ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கணும்னு கனவு. என்னை சென்னைக்குத் தனியா அனுப்ப, அப்பா ரொம்பப் பயந்தார். அவரை ஒருமாதிரி சமாதானப்படுத்திட்டு, ஒரு தோழியோட சென்னைக்கு வந்து ஹாஸ்டல்ல தங்கி வேலை தேட ஆரம்பிச்சேன்.Strategies to Fight Exam Stress & Achieve Success

ஆழ்வார்பேட்டையில் சின்ன கம்பெனியில் வேலை கிடைச்சது. சம்பளம் ரொம்பக் கம்மி. இருந்தாலும் இங்கே கிடைக்கிற அனுபவத்தை வெச்சு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துடணும்னு முடிவெடுத்தேன். ஒரு வருஷத்துக்குப் பிறகு, பெங்களூருல ஓரளவுக்குப் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைச்சது.Strategies to Fight Exam Stress & Achieve Success

அங்கே நான் வேலைக்குச் சேர்ந்த சமயம்தான், இந்திய ஐ.டி துறையில் ‘ரிசஷன்’ உச்சம். அப்போ புதுசா சேர்ந்த எங்களை அது பாதிக்கலை. ஆனா, நிறுவனத்தின் டாப் லெவல் ஆட்களை அது பாதிச்சது. எனக்கு அப்பவே ஐ.டி துறை மேல் இருந்த ஆசை, பிரமிப்பு, நம்பிக்கை எல்லாமே போயிடுச்சு. வெளிநாடுகள்ல 60 வயசுக்குப் பிறகும்கூட ‘டெவலப்பர்’ங்கிற பொறுப்பில் வேலை செய்யலாம். ஆனா, இந்தியாவில் அப்படி இல்லை. ஓய்வு வயசுக்கு முன்னாடியே கம்பெனி உங்களைத் துரத்த முயற்சிக்கும். அப்போதைய நிலைமைக்கு ஐ.டி துறையில் வேலை செய்றவங்களோட ‘எக்ஸ்பையரி காலம் 10 வருஷம்’னு தெரிஞ்சுக்கிட்டேன். வீட்ல நாலு பெண் பிள்ளைங்கிறதால, எங்களை வளர்க்க அப்பா அவ்வளவு சிரமப்பட்டார். யாரோட  உதவியும் இல்லாம எங்க எல்லாரையும் படிக்கவெச்சு ஆளாக்கினார். அவரை நிம்மதியா Strategies to Fight Exam Stress & Achieve Successவெச்சுக்கணும்னுதான் சம்பளம் நிறையக் கிடைக்கிற ஐ.டி வேலைக்குப் போனேன். அப்படி இருக்கிறப்ப திடீர்னு ‘வேலை போயிருச்சு’னு போய் நிக்கக் கூடாதுனு மட்டும் நினைச்சுக்கிட்டேன். அப்போதான் ஆனந்த அதிர்ச்சியா ஐ.பி.எம்-ல வேலை கிடைச்சது. எம்.என்.சி-க்களில் ஐ.பி.எம்-தான் டாப். ஆறு மாசம் பெங்களூரு ஐ.பி.எம்-ல வேலை பார்த்துட்டு, சென்னைக்கு டிரான்ஸ்ஃபர்ல வந்துட்டேன்.

2009-ல் கல்யாணம். கணவருக்கும் ஐ.டி துறையில்தான் வேலை. அப்போதான் இப்போ வேலை பார்த்துட்டு இருக்கிற நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்தேன். இந்திய ஐ.டி துறைகளில் அதிகபட்சப் பணிப் பாதுகாப்பு இந்த நிறுவனத்தில்தான் இருக்கு என்பது எல்லோரின் நம்பிக்கை. ஆரம்பத்தில் எல்லாம் நல்லாதான் இருந்தது. எனக்குக் கொடுத்த வேலைகளைச் சரியா செஞ்சேன். கொடுத்த டார்கெட் எல்லாம் பக்காவா முடிச்சேன். வேலைக்குச் சேர்ந்த எட்டு மாசத்துல என்  முதல் புராஜெக்ட் முடிஞ்சது. அடுத்த புராஜெக்ட்டுக்காகக் காத்திருந்தேன். புது புராஜெக்ட் கிடைச்ச சமயம், நான் கர்ப்பமா இருந்தேன். அதனால ஆறு மாசம் ‘பிரசவக் கால விடுப்பு’ எடுத்தேன். அந்த விடுமுறை முடிஞ்சு, திரும்பவும் வேலையில சேர்ந்து ஆறு மாசம் புராஜெக்ட்ல தீவிரமா வேலை பார்த்தேன். அப்போ திடீர்னு (டிசம்பர் மாசம்) என்னை வேலையைவிட்டு அனுப்பிட்டாங்க.”Strategies to Fight Exam Stress & Achieve Success

”பணி நீக்கத்துக்கு என்ன காரணம் சொன்னார்கள்?”

”காரணமே தெரியலையே! நான் நீதிமன்றத்துக்கே போனேன். ‘புராஜெக்ட் கிடைச்ச சமயம் பிரசவ விடுப்பு எடுத்ததுதான் காரணமா?’னு கேட்டேன். ‘அப்படி இல்லை. நிறுவனத்தின் தேவைக்கு உங்க திறமைகள் பொருந்தலை’னு மட்டும் சொன்னாங்க. ‘நம்ம நிறுவனத்துலயும் லே ஆஃப் ஆரம்பிச்சிருச்சு. சிலரை வெளியே அனுப்பிருவாங்க’னு சக ஊழியர்கள் பேசிக்கிட்டப்ப, ‘நாம ஒழுங்காத்தானே வேலை பார்த்துட்டு இருக்கோம். நமக்கு எதுவும் பிரச்னை இருக்காது’னு நினைச்சேன். என் சீனியர்களும் என்கிட்ட சகஜமாத்தான்  பேசிட்டு இருந்தாங்க. அதனால், நான் எந்தப் பதற்றமும் இல்லாம இருந்தேன்.Strategies to Fight Exam Stress & Achieve Success

ஒருநாள் மதியம் சாப்பிட்டு கேபினுக்குள் நுழைஞ்சேன். அப்பதான் என்னை நிறுவனத்துல இருந்து வெளியேத்துறதா மெயில் மூலம் தகவல் வந்தது. என் புராஜெக்ட் 2015-ம் ஆண்டு டிசம்பர்லதான் முடியுது. ஆனா, 2014 டிசம்பரோடு என் வேலைக் காலத்தை சுருக்கிட்டாங்க. என்ன நடக்குது, இப்போ என்ன செய்யுறதுனு தெரியாம, குழப்பத்துல திகைச்சு நின்னுட்டு இருந்தேன். வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் பேச அனுமதிக்கும் ‘வி.பி.என்’ டோக்கனை என்கிட்ட இருந்து புராஜெக்ட் லீடர் வாங்கிவெச்சுக்கிட்டார். யோசிக்கக்கூட நேரம் தரலை. ‘கேபினைவிட்டு வெளியே வாங்க. இதைப் பத்தி பேசலாம்’னு சொன்னாங்க. ‘என் கணவர்கிட்ட பேச செல்போன் வேணும். ஹேண்ட்பேக் எடுத்துக்கிறேன்’னு சொன்னேன். ‘வெளியே வந்து பேசலாம். இப்பவே வெளியே வாங்க’னு என்னைப் பிடிச்சுத் தள்ளாத குறையா வெளியே அனுப்பினாங்க. அப்போ நான் ரெண்டாவது முறை கர்ப்பமா இருந்தேன். ரெண்டு மாசம்” குரல் தழுதழுக்க, சின்ன இடைவெளி கொடுத்துத் தொடர்கிறார்.Strategies to Fight Exam Stress & Achieve Success

”சரி… என்னை வேலையைவிட்டு அனுப்ப முடிவெடுத்துட்டாங்க. ஆனா, ஏதோ மன்னிக்க முடியாத தப்பு பண்ண மாதிரி என்னை நடத்தின விதம்தான், என்னை ரொம்பப் பாதிச்சது. ‘என்னை ஏன் அனுப்பணும்?’னு கேட்டா, ‘அது நிர்வாக முடிவு. எங்களால ஒண்ணும் பண்ண முடியாது’னு எல்லாரும் சொன்னாங்க.  அந்த நிமிஷம் நான் அனுபவிச்ச வேதனை இருக்கே… நரகம்! வீட்டுச் செலவுகளை எப்படிச் சமாளிக்கிறது, அப்பா, அம்மா, மாமனார், மாமியாரை எப்படிக் கவனிச்சுக்கப்போறோம், பிரசவக் கால செலவுகளுக்கு என்ன பண்றதுனு… ஏகப்பட்ட குழப்பங்கள்!Strategies to Fight Exam Stress & Achieve Success

கொஞ்சம் நிதானமா யோசிச்சப்ப, ‘நிறுவனத்துல நாம எந்தத் தப்பும் பண்ணலை. ஏன் நம்ம உரிமையை விட்டுக்கொடுக்கணும்?’னு தோணுச்சு. அதே சமயம், தனி மனுஷியா என்ன பண்ண முடியும்னு தயக்கமாகவும் இருந்தது. அப்பத்தான் ஐ.டி நிறுவன லே ஆஃப்களை எதிர்த்துப் போராடும் திமிஜிணி (திஷீக்ஷீuனீ யீஷீக்ஷீ மிஜி ணினீஜீறீஷீஹ்மீமீs) அமைப்பு பத்திக் கேள்விப்பட்டேன். ‘சும்மா பேசிப் பார்க்கலாம்’னு அந்த அமைப்பைத் தொடர்புகொண்டேன். அங்கே என்னை மாதிரியே பாதிக்கப்பட்டிருந்த பலரும் இருந்தாங்க. சட்டரீதியா இந்த விஷயத்தை அணுகலாம்னு முடிவெடுத்தப்ப, பலரும் பயந்தாங்க. காரணம், வழக்கு போடுற ஊழியர்களை, நிறுவனங்கள் ‘ப்ளாக் லிஸ்ட்’ பண்ணிட்டா, அவங்க எதிர்காலமே  அவ்ளோதான். வேற எந்த நிறுவனத்திலும்கூட அவங்களை வேலைக்கு எடுத்துக்க மாட்டாங்க.  ஆனா, நான் என் நிறுவனத்தை எதிர்த்து வழக்கு போட்டேன்.Strategies to Fight Exam Stress & Achieve Success

‘ரெண்டு மாசக் கர்ப்பிணியை நாங்கள் வேலையைவிட்டு நீக்க மாட்டோம்’னு நிறுவனத் தரப்பில் சொல்லிட்டாங்க. இப்போ அந்த வேலை எனக்குத் திரும்பக் கிடைச்சிருச்சு!”

”ஐ.டி ஊழியர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?”

”ஐ.டி வேலை நிரந்தரம் இல்லைனு பொதுப்படையா சொல்ல முடியாது. ஆனா, எப்பவும் எதுவும் நடக்கலாம். அது யாருக்கும் நடக்கலாம்னு மட்டும் மனசுல வெச்சுக்கங்க!”Strategies to Fight Exam Stress & Achieve Success

[wysija_form id=”1″]