ஒரு நதியின் ஆன்மா…

 

A dried-up area of the Sagan River running through Konso, Ethiopia.

ஒரு நதியை விதவையாக்குகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா ?

நீர் ஓடாத நதியின் பாதையை பாருங்கள் , ஒரு விதவையின் உருவம் தெரியும் !

பெண்ணையும் – என்னையும் வாழ விடாது இந்த நாடு ;

பிறப்பதும் – வாழ்வதும் – வாழவைப்பதும் வெவ்வேறு தேசங்கள் என்பதில் எனக்கும் பெண்ணுக்கும் ஒற்றுமை உண்டு;

புனிதம் பெறுவதிலும் – போற்றி மகிழ்தலிலும், பெண்ணும் நானும்  , ஒரே வீணையின் சுரங்கள்தான்;wman

சுரண்டப்பட்டால் கேட்பாரில்லை என்பதில் எனக்கும் பென்ணுக்கும் ஒரே நீதிதான்;

சுய விருப்பம் அற்று வாழ்வதில், நானும் பெண்ணும் ஒன்றுதான் : ஏனெனில் எங்கள் பாதையை நாங்கள் தீர்மானிக்க இயலாது ;

விபசாரியாய் யாரும் பிறப்பதில்லை – சாக்கடையாய் எந்த நதியும் உருவாவதில்லை என்பதினை ஆறறிவு மானிடரே அறிவீரா ?

என் ஆன்மாவின் அறைகூவல் தொடரும்….

Editor

Join with us

https://www.facebook.com/groups/363191934057249/