ஒரேமாதிரி உடையில் ஒபாமா… மூன்று உடைகளில் மோடி!

[wysija_form id=”1″]இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான பந்தம் இரண்டுமே ஜனநாயக நாடு என்பதுதான். ஆனால் இந்தியா அதிகமான ஆண்டுகள் ரஷ்யாவுடன்தான் நெருக்கமாக இருந்தது. 90கள் முதல் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை திசைமாறியது. சோவித் யூனியன் உடைய… நேரு குடும்பத்தின் அதிகாரம் திசைமாறி, அமெரிக்க உறவு தொடங்கியது. பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் காலத்தில் அமெரிக்க உறவு தொடங்கப்பட்டாலும் அது முழுமையை அடைந்தது மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில்தான். இப்போது நரேந்திர மோடி மேற்கொள்ளும் அமெரிக்க நட்பில் இருநாடுகளுக்கும் நெருக்கம் உச்சத்துக்குப் போயுள்ளது.Negotiating Sales

உலகின் மிகப்பெரிய  சக்தியாக இருக்கும் அமெரிக்க நாட்டு ஜனாதிபதிகள் இந்தியா வருவது அபூர்வம். இந்தியா சுதந்திரம் அடைந்து 12 ஆண்டுகள் கழித்து 1959-ல்தான் முதன் முறையாக அமெரிக்க ஜனாதிபதி டவைட் டி.ஐசனோவர் இந்தியாவுக்கு வந்து ஐந்து நாட்கள் முகாமிட்டு பொதுக்கூட்டங்களிலும் நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு நேருவின் அணிசேராக் கொள்கையையும் பாராட்டிச் சென்றார். அதன் பின்னர் நிக்ஸன், ஜிம்மி கார்டர் போன்றவர்கள் மட்டுமே வந்துள்ளனர். அணுகுண்டு சோதனை, பொருளாதாரத் தடை போன்றவைகளுக்குப் பின்னர் 2000-ல் பி.ஜே.பி ஆட்சியில் பில் கிளின்டன் மூலம் மிகப்பெரிய நட்பு தொடங்கியது. இந்தியா வந்த பில் கிளின்டன் நிர்வாக ரீதியான உறவோடு இந்திய நடனங்களையும் மாம்பழங்களையும் விரும்பத் தொடங்கினார். இப்போது ஒபாமா.Negotiating Sales

70 வருட சுதந்திர இந்தியாவில் மொத்தம் ஐந்தே அமெரிக்க ஜனாதிபதிகள்தான் இந்தியா வந்துள்ளனர். ஆறாவது ஜனாதிபதி ஒபாமா. அதுவும் இரண்டாவது முறை வந்துள்ளார். முதன் முறையாக இந்தியக் குடியரசுத் தின விழாவுக்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி என்கிற பெருமையையும் பராக் ஒபாமா பெற்றுள்ளார்.

மிகப்பெரிய நாட்டின் நிர்வாகத்தை அதிபரே நேரடியாகக் கவனிப்பதால் அமெரிக்க ஜனாதிபதிகள் ஒரு நிகழ்ச்சியில் அதிகபட்சம் முக்கால் மணி நேரம் கலந்துகொள்வார்களாம். ஆனால், ஒபாமா டெல்லியில் கடந்த 25-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியுடன் ஹைதராபாத் ஹவுஸில் கிட்டதட்ட நான்கு மணி நேரம் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அது வர்த்தக ரீதியானது. ஆனால், மறுநாள் ராஜ்பாத்தில் நடந்த குடியரசுத் தின அணிவகுப்பை சுமார் இரண்டு மணி நேரம் பொறுமையாக உட்கார்ந்து பார்த்தது அமெரிக்க அதிபருக்கு வித்தியாசமான அனுபவம்.

Negotiating Sales

ஒபாமா வருகையால் டெல்லி ஆடிப்போனது. சுமார் 80 ஆயிரம் டெல்லி போலீஸாரும் 20 ஆயிரம் மத்திய பாதுகாப்புப் படை போலீஸாரும் தயாராக இருந்தனர். ரகசிய தகவல்களைப் பெறுபவர்கள் உட்பட சுமார் 1,000 அமெரிக்க போலீஸாரும் களத்தில் இருந்தனர். சக்தி வாய்ந்த மோப்ப நாய்கள், கட்டுப்பாட்டு அறைகள் மூலம் கண்காணிக்க ஏராளமான ரகசியக் கேமராக்களும் பொருத்தப்பட்டன. முகத்தைக் கண்டுபிடிக்கும் கேமராக்கள் சுமார் 80 இடங்களில் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்கள் சந்தேகப்படும் அல்லது தேடப்படும் நபர்களைக் கண்டுபிடிக்கும். அமெரிக்க ஜனாதிபதி செல்லும் இடங்களிலும் குடியரசுத் தின அணிவகுப்பைக் காணும் பகுதியிலும் உள்ள, 70-க்கும் மேற்பட்ட கட்டடங்களும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. இப்படியெல்லாம் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளத் தெரிந்த அரசு, இதே மாதிரி பொது மக்களுக்கும் ஏன் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.Negotiating Sales

வாஷிங்டனிலிருந்து தனது ‘ஏர்போர்ஸ் ஒன்’ சிறப்பு விமானம் மூலம் வந்த ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி பாலம் விமானப்படை விமான நிலையத்துக்கு நேரடியாகச் சென்று மரபை மீறி வரவேற்றார். ஏற்கெனவே இதைப் போன்று மன்மோகன் சிங்கும் ஒபாமாவை வரவேற்றார்.

அடுத்து ராஷ்ட்ரபதி பவனில் கம்பீரமான ராணுவ வீரர்களின் அணிவகுப்புக்கு முன்பு குண்டுகள் முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் முதன் முறையாக முப்படை வீரர்களோடு பெண் விமானப்படை அதிகாரி பூஜா தாக்கூர் தலைமையில் அணிவகுப்பும் ஒபாமாவுக்காக நடத்தப்பட்டது. பின்னர் வழக்கமான காந்தி சமாதி மரியாதைக்கு அடுத்து ஒபாமாவும் நரேந்திர மோடியும் ஹைதராபாத் இல்லத்தில் அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தினர்.Negotiating Sales

சுமார் நான்கு மணி நேரம் பிரதமர் மோடியும் ஒபாமாவும் டெல்லி ஹைதராபாத் பவனில் இருந்தனர். ஒபாமா விசிட்டில் முக்கியமாக இருந்தது இந்திய  அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம். அடுத்து ராணுவ தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தங்களும் முக்கியமானது. இதே மாதிரி வர்த்தகம், பொருளாதாரம், ஸ்மார்ட் சிட்டிகள் போன்றவற்றிலும் அதிகார மட்டத்திலேயே பேசி முடிவுக்கு வந்துவிட்டனர். ஆனால், அணுசக்தி ஒப்பந்தமும் பருவ நிலை மாற்றத்திலும்தான் உயர் மட்டத்தில் தீர்வு காண வேண்டியது இருந்தது. இதனால் இருநாட்டு பிரதிநிதிகள் அடங்கிய பேச்சுவார்த்தைகள் குறைவான நேரம்தான் நடந்தது. ஆனால் மோடியும் ஒபாமாவும் ஹதராபாத் இல்லத்தில் புல்வெளியில் வாக் த டாக், டீ விவாதம் போன்றவற்றை மேற்கொண்டனர். இதில் மோடி தன்னுடைய பெற்றோர்கள்  டீ விற்று வாழ்க்கை நடத்தியதையெல்லாம் குறிப்பிட, ஒபாமா வியப்புடன் கேட்டு நடந்தார். பின்னர் புல் தரையில் போடப்பட்டு இருந்த ஷோபாவில் ஒபாமாவுக்கு டீயை தயாரித்தும் கொடுத்தார் மோடி.Negotiating Sales

கடந்த செப்டம்பரில் பிரதமர் அமெரிக்கா சென்றபோது நரேந்திர மோடிக்காக ஒரு பிரத்யேக ஏஜென்ஸி[என்.ஆர்.ஐ] அவரது விசிட்டுக்கு வடிவம் அமைத்துக் கொடுத்துள்ளது.மோடி கலந்துகொள்ளும் கூட்டங்கள், டிஜிட்டல் வடிவங்கள், பேச்சுகள், அதில் கலந்துகொள்பவர்களை வரவைப்பது போன்றவற்றை வித்தியாசமான முறையில் பொதுமக்களைக் கவரும் வகையில் மேற்கொண்டு மோடியின் புகழ் பரப்பப்பட்டது. இதில் மோடி அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கப் போகும்போதும் சரி, அவர் ஒபாமாவுடன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் மற்றும் வெள்ளை மாளிகை நிகழ்ச்சிகளும் இந்திய மீடியாக்கள் வாயிலாக பிரபல படுத்தப்பட்டன. ஆனால் இந்தக் காட்சிகளும் சந்திப்புகளும் அமெரிக்க அரசினாலோ அல்லது அமெரிக்க மீடியாக்களிலோ பிரபலமாகவில்லை. இந்தியப் பத்திரிகைகளிலும் விஷுவல் மீடியாக்களிலும்தான் பளிச்சிட்டது. ஆனால், ஒபாமா  மோடி சந்திப்பை வெள்ளை மாளிகை ‘ஒருபக்க பிரஸ் ரிலீஸோடு’ முடித்துக்கொண்டது வேறு விஷயம். டெல்லி தேர்தல் எல்லாம் ஒருபக்கம் நடக்க ஒபாமாவின் இந்திய விசிட் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டுள்ளது.Negotiating Sales

அமெரிக்காவில் மோடிக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் மாதிரியே ஒபாமாவுக்கும் செய்யப்பட்டது.

சுமார் 16 மணி நேர பயணத்துக்குப் பின்னர் ஒபாமா விமானத்தில் வந்து இறங்கி ஹோட்டலுக்கு சென்று ராஷ்ட்ரபதி மாளிகை அணிவகுப்பு, காந்தி சமாதி மரியாதை, ஹைதராபாத் இல்ல சந்திப்புகள், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு, ஜனாதிபதி மாளிகையில் நடந்த மிகப்பெரிய விருந்து என எல்லாவற்றிலும் ஒரே ‘சூட்’ தான். ஆனால் பிரதமர் மோடி மூன்று முறை உடைகளை மாற்றினார். விமான நிலையத்தில் வரவேற்க க்ரீம் கலர் குர்தா பைஜாமா மற்றும் அரைக்கை ஜாக்கெட், பின்னர் ஒபாமாவின் ராணுவ அணிவகுப்புக்கு நீள நிற  முழுக்கை சூட். மாலையில் ஜனாதிபதி மாளிகை விருந்தில் இளம் மஞ்சள் நிற முழுக்கை சூட் என்று ஆடைகளை மாற்றினார். ஒபாமா மனைவி மிஷெல் ஒபாமா அமெரிக்காவில் வாழும் ஒடிசாவைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் தயாரித்துக் கொடுத்த ஆடைகளை அணிந்து இந்தியாவுக்கு வந்து இறங்கினார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அளித்த விருந்திலும் மிஷெல் அதே ஃபேஷன் டிசைனர் தயாரித்துக் கொடுத்த மற்றொரு ஆடையையும் அணிந்து வந்து கலக்கினார். இதை அந்த ஒடிசா ஃபேஷன் டிசைனர் பைபூ மகபோத்ரா சமூக வலைதளத்தில் ட்விட் செய்ய உலக முழுவதும் பரவியது. பின்னர் விருந்தின்போது ஒபாமா, ‘தன்னுடைய மனைவியும் இப்போது ஃபேஷன் புள்ளியாகிவிட்டார்’ என்றார். ஆனால் இப்படியெல்லாம் கலக்கியதில் மோடியின் டீம், பின்னணியில் இருந்தது.Negotiating Sales

பிரதமர் மோடியும் ஜனாதிபதி ஒபாமாவும் கூட்டாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இதில் ஆரம்பத்தில் இரண்டு தலைவர்களும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசினர். மோடி ஆங்கிலத்தில் ஆஸ்திரேலியா சென்ற சமயத்தில் பேசியது மாதிரி ஹைதராபாத் பவனிலும் ஒபாமா முன்னிலையில் ஆங்கிலத்தில், எழுதி வைக்காமலேயே பேசினார்.Negotiating Sales

இந்திய மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் ஆச்சர்யமாகக் கேட்டனர். பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் ஒபாமாகூட குறிப்பைப் பார்த்து பேசினார். ஆனால் மோடி குறிப்பே இல்லாமல் ஆங்கிலத்தில் விளாசிய ரகசியம் மோடிக்கு முன்னால் இருந்த டெலிப்ராம்ட்டர் கருவிக்கே வெளிச்சம்! அந்தக் கருவியில் முதலிலேயே பேச்சு ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கும். அதைக் கேட்டுக் கேட்டுத்தான் மோடி பேசினார்.Negotiating Sales

அமெரிக்காவுக்கே டெக்னாலஜி வித்தையைக் காட்டியிருப்பது மோடியின் சாதனைதான்.

[wysija_form id=”1″]