ஓ.பி.எஸ். கையை இழுத்த கன்னட போலீஸ்

[wysija_form id=”1″]

http://tamilagamtimes.com/?post_type=product

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கியதும் 26, 27 தினங்களில் பெங்களூரில் நிலவிய அசாதாரண சூழல் லைவ் ரிலேவாக இங்கே…

இந்திய மீடியாக்கள் குவிந்தன

தீர்ப்பு நாளான 27-ம் தேதிக்கு ஒரு நாள் முன்பே, இந்தியா முழுவதிலும் இருந்து அனைத்து ஆங்கில, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்… என பல மொழி மீடியாக்களும் பெங்களூரில் குவிந்துவிட்டன. நீதிமன்றம் நடைபெறும் பரப்பன அக்ரஹாரா வளாகத்துக்குச் செல்வதற்கு 26-ம் தேதி மாலை 5 மணிக்கு பெங்களூரு சிட்டி கமிஷனர் அலுவலகத்தில் பாஸ் கொடுக்கப்படுவதாக அறிவிப்பு வரவே, பத்திரிகையாளர்கள் குவிந்தனர். நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு வி.ஐ.பி பாஸும் அதே இடத்தில் வழங்கப்பட்டதால் பத்திரிகையாளர்களும் அ.தி.மு.க முக்கியப் பிரமுகர்களும் பெங்களூரு சிட்டி கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் பெங்களூரு

26-ம் தேதி இரவே பெங்களூரு சிட்டியில் உள்ள அனைத்து லாட்ஜுகளிலும் அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள் என  ஆக்கிரமித்துவிட்டதால் மக்கள் ரூம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். 26-ம் தேதியே பெங்களூரு தமிழகமாக மாறியது. எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடந்துவிடக் கூடாது என்று போலீஸார் பெங்களூரு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர காக்கி உடையிலும் மஃப்டியிலும் வேவு பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் கும்பல் கும்பலாகத் தமிழர்கள். சிறை வளாகத்தைச் சுற்றி இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு போட்டிருந்தனர்.

அல்லல்பட்ட அமைச்சர்கள்

27-ம் தேதி காலை 6 மணியில் இருந்தே பரப்பன அக்ரஹாராவை நோக்கி அனைவரும் படையெடுத்தனர். ஜெயிலில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பரப்பன அக்ரஹாரா ஜங்ஷனில் பாஸ் இல்லாதவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பாஸ் இருந்த அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரின் வாகனங்களும் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டு, மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதித்தார்கள். அவர்களின் உதவியாளர்களை அனுமதிக்கவில்லை. அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு ஐந்து கிலோ மீட்டர் நடந்தே நீதிமன்ற வளாகத்துக்கு வந்து சேர்ந்தனர். பத்திரிகையாளர்கள் நீதிமன்றத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, அங்கு அமைக்கப்பட்ட மேடையில் அமர்த்தப்பட்டனர்.

‘நான் யாரு தெரியுமா?’

காலை 8.30 மணியில் இருந்து அமைச்சர்கள் ஒவ்வொரு​வராக வர ஆரம்பித்தார்கள். அதன் பிறகு எம்.எல்.ஏ-க்கள்,  எம்.பி-க்கள், மேயர்கள், மாவட்டச் செயலாளர்கள் என வந்து சேர்ந்தனர். இதில் எவரும் கர்நாடக காவல் துறையினருக்கு அறிமுகம் இல்லாததால், பெரும் போராட்டத்துக்குப் பின்னரே உள்ளே செல்ல முடிந்தது. தி.மு.க வழக்கறிஞர்கள் தாமரைச்செல்வன், சரவணன், நடேசன், பாலாஜி சிங் ஆகியோர் காலை 7.30 மணிக்கே நீதிமன்றத்துக்குள் சென்றுவிட்டனர். ஜெயலலிதாவுக்கான நுழைவாயிலில் வந்த நால்வர் அணியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் பரப்பன அக்ரஹாரா ஜங்ஷனில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வத்திடம் அங்கிருந்த கர்நாடக போலீஸார், ”நீவு யாரு? யாரு ஒலகே ஓக பாருது…” (நீங்கள் யார்… நீங்கள் யாராக இருந்தாலும் உள்ளே போகக்கூடாது) என்று சொல்லி தடுத்து நிறுத்தினர். ”என் பேரு பன்னீர்செல்வம். நான் தமிழ்நாடு மினிஸ்டர்” என்று சொன்னார். அதன் பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட, அங்கிருந்து நடந்தே நீதிமன்றத்துக்குச் சென்றனர்.

மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ

மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜலட்சுமியை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ‘நான் யாரு தெரியுமா…’ என்று ஆரம்பித்தார். பாதுகாப்புக்கு இருந்த லேடி கான்ஸ்டபிள்களும், பதிலுக்கு கன்னடத்தில் ஏதோ சொல்ல… நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது. அவர்கள் எதிர்பார்க்காத நிலையில், திடீரென்று நீதிமன்றத்தை நோக்கி ஓட்டம் எடுத்தார் ராஜலட்சுமி. லேடி கான்ஸ்டபிள் ஒருவர் அவரை துரத்திக்கொண்டு ஓட… ஆனாலும் ராஜலட்சுமியைப் பிடிக்கவே முடியவில்லை. ஈரோடு மேயரான மல்லிகா பரமசிவத்துக்கு அனுமதி மறுக்கப்பட, அவரோ கர்நாடக மாநில செயலாளரான புகழேந்தியை அழைத்து வந்து போலீஸாரிடம் பேச வைத்தார். ஆனாலும் அவரை போலீஸார் விடவில்லை. நீண்ட நேரம் போராடிப் பார்த்துவிட்டு, போலீஸாரை திட்டியபடியே திரும்பிப் போனார் மல்லிகா பரமசிவம்.

மகிழ்ச்சியாகப் புறப்பட்ட ஜெ.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மூவரும் சென்னை விமான நிலையத்தில் 8.57-க்கு தனி விமானத்தில் கிளம்பி, பெங்களூரு ஹெச்.ஏ.எல் விமான நிலையத்தில் 9.40-க்கு தரையிறங்கினர். கர்நாடக அ.தி.மு.க மாநில செயலாளர் புகழேந்தி மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். பிறகு அங்கிருந்து கான்வாய் மூலம் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து பரப்பன அக்ரஹாரா ஜங்ஷன் வரை அவரை வரவேற்று 500 ஃபிளெக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

பாதுகாப்பு வளையத்தில் குன்ஹா…

சிரித்த முகத்துடன் ஜெ.!

8 மணிக்கு தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குணசீலன், சம்பந்தம், 8.10-க்கு அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் பவானி சிங், மராடி வந்தனர். 9.50-க்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா வந்தார். அவருடைய காருக்கு முன்னும் பின்னும் மூன்று காவல் துறை வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இருந்தது. 10.10-க்கு ஜெயலலிதா வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், செந்தில், குமார், மணிசங்கர், அசோகன், பன்னீர்செல்வம் ஆகியோர் சென்றனர். 10.45-க்கு 23 வாகனங்கள் புடைசூழ தேசியக் கொடி கட்டிய வாகனத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மூன்று பேரும் சிரித்த முகத்தோடு வந்து இறங்கினர். இதற்கிடையே பரப்பன அக்ரஹாரா ஜங்ஷனில் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆயிரக்கணக்கில் கூடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதால் காலை 11.20-க்கு லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தினார்கள். இதில் நத்தம் விஸ்வநாதன் உட்பட பல அமைச்சர்களுக்கும் தடியடி விழுந்தது. இதேபோல் மாலை 4.30 மணிக்கும் லத்தி சார்ஜ் செய்து கும்பலைக் கலைக்க வேண்டியிருந்தது.

தாமதமாகவே வந்த தகவல்கள்!

பத்திரிகையாளர்கள் 500 மீட்டருக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்பட்டதாலும், சிறை வளாகம் முழுவதும் ஜாமர் அமைக்கப்பட்டு செல்போன்களை இயங்காமல் செய்ததாலும் நீதிமன்றத் தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அங்கிருந்து வெளியே வந்த பிறகுதான் தகவல்கள் பரிமாறப்பட்டன. 11 மணிக்கு வந்து அமர்ந்ததுமே நீதிபதி குன்ஹா, நான்கு பேரும் குற்றவாளி என்பதை அறிவித்துவிட்டார். இந்த விஷயம் வெளியே தெரிந்ததும் கலவரம் வெடிக்கும் என்பதால், பத்திரிகையாளர்களுக்கு தகவல் போகும் முன்பு காவல் துறையை உஷார்படுத்த வேண்டும் என்பதால், 11.45 மணிக்கு நீதிமன்றத்தில் இருந்து அவசரமாகக் கிளம்பிப்போனார் பெங்களூரு சிட்டி கூடுதல் போலீஸ் கமிஷனர். கர்நாடக காவல் துறை தலைவருடன் அவர் அவசர ஆலோசனை நடத்தி, உடனடியாக பெங்களூரு முழுக்கக் கூடுதல் போலீஸாரை பாதுகாப்புக்காகக் குவிக்க ஏற்பாடுகளை செய்தார். தீர்ப்பு விவரம் வெளிவரத் தொடங்கிய நேரத்தில் பெங்களூரு முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

COURTSEY : VIKATAN MAGAZINE
DOWNLOAD BOOKS http://tamilagamtimes.com/?post_type=product
WE ARE TAMILAGAMTIMES PUBLISHERS
YOU CAN DOWNLOAD BOOKS FROM FOLLOWING CATEGORIES

accounting-finance
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=accounting-finance

career-study-advice
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=career-study-advice

career-management-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=career-management-books

communication-presentation-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=communication-presentation-books

engineering-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=engineering-books

engineering-for-professionals
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=engineering-for-professionals

entrepreneurship-small-business
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=entrepreneurship-small-business

it-management-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-management-books

it-programming-computer-science-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-programming-computer-science-books

language-learning-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=language-learning-books

management-strategy-development
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=management-strategy-development

marketing-sales
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=marketing-sales

natural-sciences-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=natural-sciences-books

office-programs-software
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=office-programs-software

personal-development-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=personal-development-books

statistics-mathematics
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=statistics-mathematics