கம்பெனி ஸ்கேன் : அதுல் ஆட்டோ லிமிடெட்!

TO GET YOUR ENGINEERING & OTHER COLLEGE BOOKS VISIT http://pickyourbooks.wordpress.com/
& write to us pickyourbookz@gmail.com

SHARE THIS DOMAIN http://pickyourbooks.wordpress.com TO YOUR FRIENDS TO FIND THEIR REQUIRED STUDY BOOKS

இந்த வாரம் நாம் ஸ்கேனிங்குக்கு எடுத்துக்கொண்டுள்ளது ‘அதுல் ஆட்டோ லிமிடெட் (Atul Auto Limited)’ என்னும் மூன்று சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் ஒரு முன்னணி நிறுவனமாகும். 1970-களில் சாமானியர்களுக்கான போக்குவரத்து வாகனங்கள் பெரிய அளவிலான தட்டுப்பாட்டில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் ஒரு புதுமையைச் செய்து இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் குறைந்த செலவில் பயணிக்கச் செய்த பெருமை இந்த நிறுவனத்தின் ஸ்தாபகரையே சேரும். சௌராஸ்ட்ரத்திலும், வட இந்தியாவிலும் சாமானியர்கள் பயணிக்க ‘சக்கடா’ என்ற இந்தப் புதுமையான வாகனத்தை டிசைன் செய்து அறிமுகப்படுத்தியவர் இந்த நிறுவனத்தின் ஸ்தாபகரான ஜக்ஜீவன்பாய் கர்சன்பாய் சந்திரா.

இவர் காலத்துக்குப்பின் இவரது மகனான ஜயந்திபாய் சந்திராவின் தொடர் முயற்சியால் வெற்றிகரமாக மூன்று சக்கரப் பயணிகள் மற்றும் சரக்கு வாகன உற்பத்தியில் செயல்பட்டுவரும் நிறுவனம்தான் ‘அதுல் ஆட்டோ’.

தொழில் எப்படி?

மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை கடந்த ஐந்து ஆண்டுகளில்,  பயணிகளுக்கான வாகனங்களின் விற்பனை ஏறக்குறைய 11 % அளவிலான வளர்ச்சியையும், சரக்கு போக்குவரத்து வாகனங்களின் விற்பனை சராசரியாக 8% அளவிலான வளர்ச்சிக் குறைவை யும் கொண்டுள்ளது. சரக்கு போக்குவரத்து வண்டிகளின் விற்பனை சரிவுக்குக் காரணம், எஸ்சிவிகள் (ஸ்மால் கமர்ஷியல் வெஹிக்கல்) தரும் கடுமையான போட்டியே ஆகும்.

சந்தை ஆராய்ச்சி நிறுவனங்களின் கூற்றுப்படி, மூன்று சக்கர வாகனங்களின் தேவை ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 7-8% வரையிலான வளர்ச்சியை (சிஏஜிஆர்) அடுத்த ஐந்து ஆண்டுகளில் கொண்டிருக்கலாம். இந்தியாவில் மாநில அரசுகள் அவ்வப்போது பயணிகளுக்கான மூன்று சக்கர வாகனங்களுக்கான பெர்மிட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது புதிய வண்டிகள் விற்பனைக்கு நல்லதொரு அடித்தளமாக அமைகிறது. வெளிநாடுகளிலும் மூன்று சக்கர வாகனங்களின் தேவை இருக்கவே செய்கிறது. எதிர்காலத்திலும் பயணி களுக்கான மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை அளவு அதிகரிக்கவும், சரக்குப் போக்குவரத்துக்கான வாகனங்களின் விற்பனை அளவு குறையவுமே செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

கம்பெனி எப்படி?

குஜராத்தில் மிகப் பெரிய மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது. சரக்குப் போக்குவரத்துக்கு உதவும் ஒரு டன் எடைக்குக் கீழேயான வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் இந்த நிறுவனம், குறிப்பாக 0.50 டன் பாரம் சுமக்கும் வண்டிகளைப் பெருமளவில் தயாரித்து விற்றுவருகிறது. பயணிகள் போக்குவரத்துப் பிரிவில் மூன்று மற்றும் ஆறு பயணிகள் பயணிக்கக்கூடிய வகையிலான டீசல் மற்றும் காஸில் ஓடும் வண்டிகளைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது.

இந்த இரண்டு வகை வண்டிகளுமே ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் மாசு கட்டுப்பாட்டுக்கான பாரத் ஸ்டேஜ் – 3 தகுதிச் சான்றிதழ்தனைப் பெற்றுள்ளது. 2013-ம் ஆண்டு இறுதியில் ஏறக்குறைய 150 முழுமையான டீலர்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட சப்-டீலர்களையும், 14 மண்டல அலுவலகங்களையும், 3 பயிற்சி மையங்களையும் அகில இந்திய ரீதியாக 16 மாநிலங்களில் கொண்டிருக்கிறது.

அதுல் சக்தி, அதுல் ஜெம், அதுல் ஜெமினி-டிஇசட் போன்ற பிராண்ட்களில் ஃப்ரன்ட் மற்றும் ரியர் இன்ஜின் மூன்று சக்கர வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்கிறது. சரக்கு போக்குவரத்து வண்டிகள் சந்தையில் ஏறக்குறைய 17 சதவிகிதப் பங்களிப்பையும், பயணிகள் போக்குவரத்துக்கான வாகனச் சந்தையில் ஏறக்குறைய 6% பங்களிப்பையும் கொண்டுள்ளது.

2009-ம் ஆண்டில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய ரியர்-இன்ஜின் டீசல் ஆட்டோவின் வெற்றியும், அகில இந்திய ரீதியாக விரிவாக்கமும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் வியாபார வளர்ச்சியை ஏறக்குறைய 29% (சிஏஜிஆர்) அளவில் வைத்துள்ளது. 2008-ம் ஆண்டு 2.4 சதவிகிதமாக இருந்த இந்த நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு 2014ல் 7.7 சதவிகிதமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

விரிவாக்கம் எதுவும் உண்டா?

இந்த நிறுவனம் தனது உற்பத்தித்திறனை தற்சமயம் உள்ள 48,000 யூனிட்களிலிருந்து 1,20,000 யூனிட்களாக மாற்றுவதற்கான திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த விரிவாக்கங்களுக்கு தனது வருமானத்திலிருந்து  கிடைக்கும் பணத்தையே பயன்படுத்த நினைப்பது இந்த நிறுவனத்தின் தனிச்சிறப்பு எனலாம். சமீபத்தில்தான் தனது ராஜ்கோட் தொழிற்சாலையின் உற்பத்தி அளவை 48,000 யூனிட்களாக இரட்டிப்பாக்கியது இந்த நிறுவனம். இந்த உற்பத்தி அளவிலிருந்து 60,000 யூனிட் உற்பத்தி அளவை எட்டுவதற்காக அஹமதாபாத் அருகே தொழிற்சாலைகளை நிறுவலாமா என்று யோசனை செய்து வருகிறது.

இந்திய சந்தை விற்பனையில் மூன்று சக்கர வாகனங்கள் பிரிவில் டீசல் வண்டிகள், 35% பங்களிப்பையும், பெட்ரோல் வண்டிகள் 65% பங்களிப்பையும் கொண்டுள்ளது.

விற்பனை வளர்ச்சிக்கான வாய்ப்பு பெட்ரோல் பிரிவில் அதிகம் இருப்பதால் இதுவரை டீசல் இன்ஜின் வண்டிகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்துவந்த இந்த நிறுவனம், முக்கியமானதொரு நிகழ்வாக பெட்ரோல் இன்ஜின் மூன்று சக்கர வாகனங்களை அடுத்த வருடம் அறிமுகப்படுத்த உள்ளது.

போட்டி எப்படி?

ஆட்டோ மொபைல் துறையாயிற்றே, போட்டிகள் அதிகம் இருக்குமே என முதலீட்டாளர்கள் கவலைப்படலாம்.

மூன்று சக்கர வாகனங்களுக்கு இணையாக நான்கு சக்கர வாகனங்கள் போட்டி போடுவதில் பெரிய வெற்றி நான்கு சக்கர வாகனங்களுக்குக் கிடைக்கவில்லை எனலாம். 0.5 டன் எடைக்கு அதிக எடையைச் சுமக்கும் தகுதியுள்ள நான்கு சக்கர வாகனங்கள் அதிகத் தேய்மானம் குறித்த கவலையால் பயன்படுத்தப்படுவதில்லை.

அதேபோல், 0.5 டன் மட்டுமே சுமக்கும் தகுதிகொண்ட மூன்று சக்கர வாகனங்களில் சற்று ஓவர் லோடிங்கும் செய்யமுடிவதால், இதையே தொழில் செய்பவர்கள் விரும்பி வாங்குகிற நிலை தொடர்கிறது. பயணிகளுக்குண்டான வாகனங்களில் மூன்று, நான்கு சக்கர வாகனங்களின் போட்டிவந்த பின்பும்கூட, தொடர்ந்து விற்பனை அளவை அதிகரித்துக்கொண்டே வருகின்றன. ஏனென்றால், மூன்று சக்கர வாகனங்களைவிட நான்கு சக்கர வாகனங்களின் விலை அதிகம்.

பொதுவாக, பயணிகளுக்கான வாடகை வண்டிகளை வாங்குபவர்கள் முதல் முதலில் வண்டி வாங்குபவர்களாக இருப்பதால், அவர்களால் நான்கு சக்கர வண்டிக்கான பணத்தைத் தயார் செய்வதில் சிரமம் இருக்கும். எனவே, மூன்று சக்கர வண்டிகளின் விற்பனை பாதிப்படையாமல் இருக்கிறது.

ஏன் முதலீடு செய்யலாம்?

உற்பத்தித்திறன் விரிவாக்காத்தாலும், அதிக அளவிலான ஏற்றுமதிக்கு வாய்ப்புகள் இருப்பதாலும், பெட்ரோல் இன்ஜின் வண்டிகள் புதிய லாபத்துக்கு வழிவகுக்கும் என்பதாலும் இந்த நிறுவனத்தில்  முதலீடு செய்ய  பரிசீலனை செய்யலாம்.

ரிஸ்க் ஏதும் உண்டா?

ஆட்டோமொபைல் துறை போட்டிகள் நிறைந்த களமாகும். பயணிகள் வண்டியில் பஜாஜ் ஆட்டோவும், சரக்கு வண்டிகளில் பியாஜியோவும் நல்லதொரு விற்பனையைக் கொண்டிருக்கும் நிறுவனங்களாகும். இந்த நிறுவனத்துக்குக் கணிசமானதொரு மார்க்கெட் ஷேர் இருந்தாலும் அனைவராலும் விரும்பப்படும் பிராண்டாக மாற இன்னமுமே நிறையப் பிரயத்தனப்பட வேண்டியிருக்கும்.

இதுவும் தவிர்த்து டாடா மோட்டார்ஸ், அசோக் லேலாண்ட் மற்றும் பியாஜியோவின் ஸ்மால் கமர்ஷியல் வாகனங்கள் (நான்கு சக்கரம் பொருத்தியது) வேறு கடுமையான போட்டியைத் தருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும், பொருளாதார மந்தநிலை தொடர்ந்தால் விற்பனை இலக்குகளை எட்ட முடியாது போகலாம்.

ரிஸ்க்குகள் பல இருந்தாலும் தொழிலில் நீண்ட அனுபவமும், தனது வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பும், கைக்கு அடக்கமான விலையில் இருக்கும் வாகனங்களைத் தயாரித்து விற்கும் நிலையிலும் இருக்கும் இந்த நிறுவனத்தின் பங்குகளை ஓர் அசாதாரண இறக்கத்தில் வாங்குவதற்காக முதலீட்டாளர்கள் டிராக் செய்வதில் தவறேதுமில்லை எனலாம்.

நன்றி விகடன்

FOLLOW OUR BLOG VIA MAIL TO GET UPDATES NEW ARTICLES @ YOUR INBOX

TO GET YOUR ENGINEERING & OTHER COLLEGE BOOKS VISIT http://pickyourbooks.wordpress.com/
& write to us pickyourbookz@gmail.com

SHARE THIS DOMAIN http://pickyourbooks.wordpress.com TO YOUR FRIENDS TO FIND THEIR REQUIRED STUDY BOOKS

VISIT OUR GROUP OF DOMAINS
EDITOR – www.tamilagamtimes. com
CONTACT : pickyourbookz@gmail.com

http://pickyourbooks.wordpress.com/ FOR COLLEGE E BOOKS

http://yazhinimaran.wordpress.com/ FOR MEDICAL ARTICLES

http://isaipriyanka.wordpress.com/ FOR ECONOMICAL ARTICLES

https://kaviazhaku.wordpress.com / FOR POLITICAL & SOCIAL ARTICLES

http://shanthivinayagam.wordpress.com/ FOR WOMEN

http://alagusundari.wordpress.com/ FOR SPIRITUAL

SHARE THIS DOMAIN http://pickyourbooks.wordpress.com TO YOUR FRIENDS TO FIND THEIR REQUIRED STUDY BOOKS