கலைஞருடன் ஒரு கற்பனை….

சென்ற இதழ் தொடர்ச்சி….

பேரன் :  கொஞ்சம் விஞ்ஞானம் பேசலாமா தாத்தா ?

கலைஞர் : கேள் . சொல்கிறேன் .

பேரன் : மரத்திற்கும் – அதில் விளையும் காய் – கனிகளுக்கும் என்ன உறவு தாத்தா ?

கலைஞர் :உறவுகள் , மனிதனின் வாழ்வியலுக்கான செயற்கை அமைப்பு முறை . மரங்கள் இரை தேடவும் – இனப்பெருக்கம் செய்யவும் மட்டுமே தெரிந்த உயிர்கள் .அவைகளுக்கு பிரபஞ்ச பரிச்சய உணவுகள் கிடையாது .

பேரன் : மரத்திலிருந்து கனி பிரிந்தால் மரம் வருத்தப்படுவதில்லை , இல்லையா தாத்தா ?

கலைஞர் : ஆம் . மரத்திலிருந்து கனி பிரிவதுதான் பரிணாம விதி . பிரிவின் வருத்தம் மரம் மட்டுமே உணரும் வலி .

பேரன் : பகுத்தறிவு என்றால் என்ன தாத்தா ?

கலைஞர் : எந்த ஒரு விசயத்தையும் பகுபாய்வு செய்து அதன் உண்மை நோக்கு கண்டறிவது பகுத்தறிவு .

பேரன் : பக்திக்கும் – பகுப்பாய்வு செய்யும் பகுத்தறிவுக்கும் வேற்றுமை உண்டா தாத்தா ? கலைஞர் : (யோசிக்கிறார் ) உண்டு . நான் பகுபாய்வு ஸ்ய்யும் பகுத்தறிவு வழியையே நம்புகிறேன் .

பேரன் : நீங்கள் பேரனுக்கு சொல்ல விரும்புவது ?……

கலைஞர் : தந்திரங்களால் ஈட்டப்படும் பணம் – புகழ் தன் நிறை ( எடை ) இழந்தே வந்து சேரும் . மீண்டும் தந்திரங்களாலேயே கவரப்படும் . பெற்றதும் – இழந்ததும் சமனாகும் .

EDITOR