‘காகம்’ சொல்லும் நீதி!

 

தத்தை சண்டைக்கருவியாக்கிச் சீரழியும் மனிதர்களுக்குச் சவுக்கடி கொடுக்கிறது ‘காகம்!’ மதச் சண்டைக்கு ஒரு பறவை எப்படிச் சவுக்கடி கொடுக்கும் என்கிறீர்களா? இங்கே குறிப்பிடப்படும் ‘காகம்’ பறவை அல்ல, ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கிராமம் அது. இந்தக் கிராமத்தில் செல்லாண்டி அம்மன் மற்றும் ராவுத்த குமார சுவாமிக் கோயில்கள் இரண்டும் ஒரே வளாகத்தில் இருக்கின்றன. ‘இதிலென்ன ஆச்சர்யம்?’ நீங்கள் நினைக்கக்கூடும். செல்லாண்டி அம்மன் இந்துக்களின் கோயில்.

ராவுத்த குமார சுவாமி இஸ்லாமியர்களின் கோயில். பல நூறு ஆண்டுகளாக இந்த இரு கோயில்களும் இணைந்தேதான் இயங்கிவருகின்றன. சுற்றியுள்ள பல கிராமங்களில் வசிக்கும்  இந்துக்களும் இஸ்லாமியர்களும் இங்கே காலம்காலமாக வழிபட்டுச் செல்கின்றனர். இந்துக்கள் இஸ்லாமியர் கோயில்களுக்கு உபயம் செய்வதும், இஸ்லாமியர்கள் இந்துக் கோயிலுக்கு உபயம் செய்வதும் இங்கே சர்வசாதாரணம்.

கோயில் பராமரிப்பாளரான கந்தசாமியிடம் கேட்டால், ”பல தலைமுறையாக இந்தக் கோயிலை ரெண்டு மத மக்களும் இணைஞ்சு வழிபடுறோம். இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் எந்தச் சூழலிலும் இதுவரை மத வேறுபாடு இருந்ததே இல்லை. மனுஷன் வாழப்போறது கொஞ்சகாலம். அதில் ஒருத்தர் மீது ஒருத்தர் அன்பு செலுத்தி வாழ்ந்துட்டுப்போகாம மதம், மண்ணாங்கட்டினு சொல்லி அடிச்சுக்கிறதுல என்ன பலன் இருக்கு. இதை நான் மட்டுமல்ல… இந்தக் கோயிலுக்குவரும் அத்தனை பக்தர்களும் சொல்வாங்க. கோயிலில் இஸ்லாமியர் விசேஷ நாட்களில் இந்துக்கள்தான் அதிகம் கூடுவாங்க. அதேமாதிரி இந்துக்களின் விசேஷ நாட்களில் இஸ்லாமிய பக்தர்கள் அதிகம் கூடுவாங்க. உலகம் முழுக்க எத்தனை மதமாச்சர்யங்கள் நிலவினாலும் எங்கள் ஊரில் எல்லா மதத்தினரும் ‘மனிதர்கள்’ என்ற ரீதியில் ஒன்றிணைந்து வாழ்கிறோம்” என்கிறார் பெருமிதத்துடன்!

நன்றி விகடன்

 

VISIT OUR GROUP OF DOMAINS

FOLLOW OUR BLOGS BY MAIL TO GET NEW UPDATES IN YOUR INBOX

EDITOR – www.tamilagamtimes. com

CONTACT : tamilagamtimes@post.com

knowledgeocean2014.blogspot.com FOR E BOOKS IN 75 SUBJECTS 

 

madhuvanthana.wordpress.com FOR ENTERTAINMENT ARTICLES

yazhinimaran.wordpress.com FOR MEDICAL ARTICLES

isaipriyanka.wordpress.com FOR ECONOMICAL ARTICLES

kitchapacha.wordpress.com FOR CURRENT AFFAIRS

kaviazhaku.wordpress.com FOR POLITICAL & SOCIAL ARTICLES

sarumathipappa.wordpress.com FOR STUDENTS

devadharsinivinayagam.wordpress.com FOR AUTOMOBILE

shanthivinayagam.wordpress.com FOR WOMEN

kaviazhakuvinayagam.wordpress.com FOR AGRICULTURE

alagusundari.wordpress.com FOR SPIRITUAL