காணாமல் போனவர்கள்

 

குட்டிச்சாமியார் இப்போ வாலிப சாமியார்!

த்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைக் கலக்கிவந்த சேலத்தைச் சேர்ந்த குட்டிச் சாமியார் பரணிதரன், இப்போது 18 வயது வாலிபராக வளர்ந்து கரூரில் அருளுரை வழங்கிக்கொண்டு இருக்கிறார்!

சேலத்தில் வறுமையில் வாடிய இவருடைய குடும்பத்தினர் ஒரு கட்டத்தில் வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாமல் திண்டாடினர். அதே சமயம், ஒரு ஆன்மீக கும்பல் குட்டி சாமியாரைத் தங்கள் பிடிக்குள் வைத்துக்கொண்டு அவரை ஊர் ஊராக அழைத்துச்சென்று அருளுரை வழங்கச்செய்து காசு பார்த்தது. இதனால் மனம் வெறுத்துப்போன குட்டிச்சாமியாரின் பெற்றோர், தங்களின் குழந்தையை மீட்டுத் தரக்கோரி முக்கியஸ்தர்கள் பலரிடம் கோரிக்கை வைத்தனர். மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தலையிட்டு பிரச்னையைத் தீர்த்துவைத்தார்.

கரூர் மாவட்டம் நெரூரில் குட்டிச்சாமியாருக்குப் பக்தர்கள் அதிகம். அங்குள்ள பக்தர்கள் குட்டிச்சாமியார் பரணிதரன் தங்கிக்கொள்ள வீடு ஒன்றை வழங்கியுள்ளனர். தனது பெற்றோருடன் அங்கே தங்கியுள்ள குட்டிச்சாமியார், சம்ஸ்கிருதம் கற்றுத் தேர்ந்து தீட்சையும் பெற்றுள்ளார். இப்போது தனது பெயரை ‘ஸ்ரீ ஸ்ரீ வித்யாசங்கர சரஸ்வதி சுவாமிகள்’ என மாற்றிக்கொண்டுள்ளார். சிருங்கேரி மடாதிபதி நெரூரில் ஒரு தியான பீடம் அமைத்துக்கொடுத்து அதை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை குட்டி… ஸாரி… வாலிப சாமியாரிடம் வழங்கியுள்ளார். தியான பீடத்தில் அருளுரை வழங்குவது மட்டும் இல்லாமல், தமிழகம் முழுக்க ஸ்ரீநிவாச கல்யாண வைபவம் நடத்திவைப்பது, ஆன்மீக உரை நிகழ்த்துவது என எப்போதும் பிஸியாகவே இருக்கிறார் இந்த வாலிபச் சாமியார்.

குட்டிச்சாமியாராக இருந்தபோது ஒரு அருளுரை நிகழ்ச்சிக்கு 300 ரூபாய் கட்டணம் வசூலித்த பரணிதரன், தனது கட்டணத்தை இப்போது 10 மடங்கு உயர்த்தியுள்ளார். ஆனாலும், பண விஷயத்தில் கறார் காட்டுவது இல்லையாம். கொடுப்பதை வாங்கிக்கொள்கிறாராம்.

பண்டைய இலக்கியங்கள், புராணங்கள், இதிகாசங்களில் இருந்து மேற்கோள் காட்டி அருளுரை வழங்கும் வாலிப சாமியார், தமிழ் மொழியின் மீது அதீத பற்றுடன் உள்ளார். ”கடவுளை வழிபட மொழி ஒரு தடையல்ல… தமிழ் மொழி வழியே கடவுளை வழிபடலாம்” என்று பேசி வருவதால் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் இவருக்குத் தனி செல்வாக்கு உள்ளது. அருளாசி பெறவரும் பக்தர்கள் சில சமயம் இவரிடம் ‘குறி’ கேட்பதும் உண்டு. அவர்களை இன்னின்ன மந்திரங்களை ஓதி இந்தந்த முறைகளில் கடவுளை வழிபடுங்கள், பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்று பதில் சொல்லி அனுப்புகிறார்.

குட்டிச்சாமியார் இப்போது கெட்டிக்கார சாமியாராகிவிட்டார்!

நன்றி விகடன்

 

VISIT OUR GROUP OF DOMAINS

FOLLOW OUR BLOGS BY MAIL TO GET NEW UPDATES IN YOUR INBOX

EDITOR – www.tamilagamtimes. com

CONTACT : tamilagamtimes@post.com

knowledgeocean2014.blogspot.com FOR E BOOKS IN 75 SUBJECTS 

 

madhuvanthana.wordpress.com FOR ENTERTAINMENT ARTICLES

yazhinimaran.wordpress.com FOR MEDICAL ARTICLES

isaipriyanka.wordpress.com FOR ECONOMICAL ARTICLES

kitchapacha.wordpress.com FOR CURRENT AFFAIRS

kaviazhaku.wordpress.com FOR POLITICAL & SOCIAL ARTICLES

sarumathipappa.wordpress.com FOR STUDENTS

devadharsinivinayagam.wordpress.com FOR AUTOMOBILE

shanthivinayagam.wordpress.com FOR WOMEN

kaviazhakuvinayagam.wordpress.com FOR AGRICULTURE

alagusundari.wordpress.com FOR SPIRITUAL