காளைகளுக்கு வாடிவாசல் திறந்தாயிற்று ! கன்றுகளுக்கு பள்ளி கூட வாசல்கள் எப்போது திறக்கும் ?

child laborபெரும் பண்பாட்டு எழுச்சியிலும் – புயலென புறப்பட்ட கலாச்சார புரட்சியிலும் வாடிவாசல்கள் திறக்கப்பட்டது. மிக்க மகிழ்ச்சி.

 

காளைகள் ஆர்பாரித்து புறப்பட்டு விட்டன  வாடிவாசலை நோக்கி !   ஆனால் கன்றுகளுக்கு இன்னும் பள்ளி கூட வாசல்கள் திறக்கவில்லை என்பது புரட்சி காளைகளுக்கு தெரியுமா ?

 

வருமானத்திற்காக மட்டுமே வளர்க்கபடுகின்ற கன்றுகள் பற்றி தெரியுமா ? தன் குடும்ப வருமானத்திற்காக தன் கல்வியை தொலைத்து நிற்கும் சிறுவர்களை பற்றி அறிந்ததுண்டா ?

 

வறுமைக்காக அடிமாட்டு விலைக்கு போன இந்த சிறுவர்களின் கல்வி உரிமை குறித்து மனித உரிமை கமிசன் மகான்களுக்கு தெரியுமா ?jallikattu

 

கல்வி அறிவு பெற்ற மாணவர்கள் – மது இல்லாத மாநிலம் – விபச்சாரம் இல்லாத சமூகம் … இன்னும் திறக்கபடாத வாடிவாசல்கள் இருக்கின்றன.

எதையோ தொலைத்துவிட்டு எதன் பின்னோ ஓடுகிறோம்.

கருத்து பிழை இருந்தால் மன்னியுங்கள் !

 

Editor – www.tamilagamtimes.com

http://astrologics.tamilagamtimes.com/