“குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!”

[wysija_form id=”1″]

DOWNLOAD BOOKS http://tamilagamtimes.com/?post_type=product

வட சென்னை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளின் அருகில் ‘குடிகாரர்கள் விழிப்புணர்வு சங்கம்’ சார்பில் மதுபான விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று போஸ்டர்கள் பரபரத்தன.

அந்தக் கட்சியின் தலைவர் செல்லபாண்டியனை நேரில் சந்தித்தோம்.

”இப்படி கோரிக்கைக்காகப் போராடணும்னு எப்படி தோணியது?”

”எல்லாம் இந்த அரசியல்வாதிகளாலதான்! எங்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து ஒட்டு வாங்கிறாங்க. அப்புறம் எங்களுக்கு எந்த நல்லதும் செய்றதில்ல. எங்க கோரிக்கை இதுதான்… குடிகாரர்கள் வண்டிக்குனு தனி நம்பர் ப்ளேட் கொடுக்கணும். அந்த கலர் நம்பர் பிளேட் வண்டியை மட்டும்  போலீஸ் பிடிக்கவே கூடாது. சரக்கின் தரத்தையும் குடிகாரர்களின் பாதுகாப்புக்காகவும் ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் ஒரு டாக்டர் இருக்கணும். போக்குவரத்துத் துறை, மின்சார துறை..எல்லா துறைகளும் நஷ்டத்துல போறப்ப.. நாட்டை காப்பாத்தணுமேங்கிறதுக்காக தங்களோட பணத்தை வாரிக்கொடுக்கிற குடிகாரர்களை… தியாகிகளா அறிவிக்கணும். குடியால யாராவது இறந்துட்டா அவரோட குடும்பத்தை அரசுத் தத்தெடுத்துக்கணும். குடிக்காரர்களுக்குனு தனி சிறப்பு மருத்துவமனைக் கட்டி இலவச சிகிச்சைச் செய்யணும். வாங்குற சரக்குக்குக் கண்டிப்பா பில் தரனும். சினிமால சரக்கு அடிக்கிற மாதிரி சீன் வெச்சா அந்தப் படத்தோட லாபத்துல 25 சதவிகதத்தை எங்களுக்குத் தரணும். ஆலையிருந்து கொண்டுவர்றப்ப சரக்கு விபத்துகுள்ளாச்சுன்னா அதுக்கு இன்ஸ¨ரன்ஸ் இருக்கு. அதுமாதிரி குடிகாரர் ஒருவருக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு இன்ஸ¨ரன்ஸ் போட வழிவகை செய்யணும். மதுவால வர்ர பிரச்னையைச் சரி செய்யுற மருந்தைக் குறைந்த விலையில தரணும். ஒரு லிட்டர் சரக்கு உற்பத்தியாக 12 ரூபாய்தான் செலவு. அதனால ஒரு குவாட்டர் 20 ரூபாய்க்கும் ஃபுல் 45 ரூபாய்க்கும்தான் விக்கணும்… இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 2010-ல இருந்து கட்சி நடத்திக்ட்டு வர்ரேன்”

”நீங்க சொன்ன எதுவும் செயல்படுத்த முடியுற மாதிரி இல்லையே?”

”செயல்படுத்தித்தான் ஆகணும். ஏழு ரூபாய் சரக்கை, 100 ரூபாய்க்கு வித்தா மிச்ச காசுக்கு எங்க போவான்? வழிப்பறி செயின் பறிப்பு கொள்ளைலதான் ஈடுப்படுவான். ஏதாவது அரசு துறை லாபம் தந்துச்சுனா அவங்களுக்கு போனஸ் தர்றீங்க. குடிச்சு நாசமா போற எங்களுக்கு என்னங்க செஞ்சீங்க? இன்னமும் நாகப்பட்டினம், பழவேற்காடு, தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகள்ல கள்ள சாராயம் இருக்கு. மது விலை உயர்ந்தா நிச்சயம் அதுவும் அதிகரிக்கும். 2003-ல் டாஸ்மாக் தொடங்கினப்போ மொத்தம் 48 பிராண்டு சரக்குதான். இப்ப 250 பிராண்டு இருக்கு. அதுல முக்கால்வாசி தரமில்லாதது. அதை உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடைச் செய்யணும். (கடைக்கு வந்த கஸ்டமரிடம் ‘பேட்டி கொடுத்துக்கிட்டு இருக்கேன்’னு அப்பறம் வாங்கனு திருப்பி அனுப்பிட்டு மீண்டும் தொடர்கிறார்). இந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம். நிறைவேற்றவில்லை என்றால்,  அடுத்து வர்ற தேர்தலை எங்கள் கட்சியின் சார்ப்பில் புறக்கணிப்போம்.”

”உங்கக் கட்சில மொத்தம் எத்தனை உறுப்பினர்கள்?”

”குடிகாரர்கள் அத்தனைப் பேரும் என்னோட கட்சி உறுப்பினர்தான். மாத சந்தா எதுவும் உறுப்பினருக்குக் கிடையாது. மினிமம் பதினஞ்சு சரக்குகளின் பிராண்டு சொன்னாப்போதும் அவர் எங்கக் கட்சிதான்.

”ஆனால் இப்போதைய தலைவர்கள் எல்லோரும் மது விலக்கு வேண்டும் சொல்றாங்களே அப்படி ஒன்னு நடந்துட்டா?”

(ஷாக்காகிறார்… நீண்ட யோசனைக்கு பின்பு) இந்தத் திராவிட கட்சிகள் இருக்குறவரை மது விலக்கு சாத்தியமில்லை. ஏன்னா எல்லா ஆலைகளும் அவங்க கிட்டதான் இருக்கு. சமீபத்துல, கோட்டை பிரதிநிதி ஒருத்தர் மதுபான ஆலை ஒண்ணு தொடங்கினாரு. ஆனா, என்னமோ விஜயகாந்த் மட்டும்தான் குடிக்கிறார்னு விமர்சிக்கிறாங்க. எழுதிக்கோங்க… ஜார்ஜ் புஷ் அமெரிக்காவோட ஜனாதிபதியா போட்டி போட்டப்ப, ‘நான் பயங்கரமா குடிப்பேன். என் மனைவி வேண்டுகோளுக்குக்கிணங்க குடிக்கறத்தை நிறுத்திட்டேன்னு உருக்கமா பேசி ஜெயிச்சார். அதுமாதிரி விஜயகாந்த் பேசினா அவர்தான் அடுத்த சி.எம்.

”நீங்க எத்தனை ரவுண்டு அடிப்பீங்க?”

நானும் சரக்கு அடிச்சு ஃபிளாட் ஆயிட்டா அப்புறம் குடிகாரர்களுக்காக யார் போராடுவாங்க? கட்சி தொடங்கினதிலிருந்து சரக்கைவிட்டுட்டேன்”.

WE ARE TAMILAGAMTIMES PUBLISHERS
YOU CAN DOWNLOAD BOOKS FROM FOLLOWING CATEGORIES
accounting-finance
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=accounting-finance

career-study-advice
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=career-study-advice

career-management-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=career-management-books

communication-presentation-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=communication-presentation-books

engineering-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=engineering-books

engineering-for-professionals
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=engineering-for-professionals

entrepreneurship-small-business
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=entrepreneurship-small-business

it-management-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-management-books
it-programming-computer-science-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-programming-computer-science-books

language-learning-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=language-learning-books

management-strategy-development
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=management-strategy-development

marketing-sales
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=marketing-sales

natural-sciences-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=natural-sciences-books

office-programs-software
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=office-programs-software

personal-development-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=personal-development-books

statistics-mathematics
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=statistics-mathematics