குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ரெசிப்பிக்கள்

ஆப்பிள், கேரட், டேட்ஸ்ஸ்குவார்ஸ்

தேவையானவை:
ஃப்ரெஷ்பிரவுன்பிரெட் – 10 முதல் 12 துண்டுகள்
துருவியகேரட்- ஒருகப்
மயோனைஸ் – ஒன்றரைகப்
தோல்நீக்கித்துருவியஆப்பிள் – 1
பொடியாகநறுக்கியபேரீச்சை – அரைகப்
சீஸ் – ஒருடேபிள்ஸ்பூன்
ஃப்ரெஷ்க்ரீம் – ஒருடேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு

unnamed

செய்முறை:
ஒரு பவுலில் மயோனைஸுடன் கேரட்டைக் கலந்து தனியாக வைக்கவும். துருவிய ஆப்பிள், பேரீச்சை, சீஸ், ஃப்ரெஷ்க்ரீம், உப்பு ஆகியவற்றை ஒரு பவுலில் தனியாக கலந்துவைக்கவும். பிரெட்டின் ஓரங்களை நறுக்கிவிட்டு, ஒருபிரெட்டின் மேல் கேரட், மயோனைஸ் கலவையை வைத்து, இதன்மேல்ஆப்பிள் கலவையை வைக்கவும். இதை மற்றொரு பிரெட்துண்டால் மூடவும். இனி, உங்கள் விருப்பம்போல் பிரெட்டை கட் செய்து பரிமாறவும்.

 

குயிக் ஃபிராங்கீஸ்

தேவையானவை:
ஃபுல்கா – 4
வேகவைத்துமசித்த
உருளைக்கிழங்கு – 2
துருவியகேரட், பனீர் – தலாஅரைகப்
ப்ராசஸ்டுசீஸ்- கால்கப்
சாட்மசாலா- 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு- ஒருடேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு
எண்ணெய் – சிறிதளவு
டூத்பிக் – 2

unnamed (2)

செய்முறை:
மசித்த உருளைக்கிழங்கில், துருவிய கேரட், சீஸ், சாட் மசாலா, எலுமிச்சைச்சாறு, உப்பு, பனீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். இதை மெல்லிய கட்லெட் வடிவத்தில் தட்டி வைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், தட்டி வைத்த கட்லெட்டுகளை தவாவில் சேர்த்து இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதை ஃபுல்காவின் நடுவில் வைத்து, ரோல் செய்து, டூத்பிக்கால் மேலேகுத்தி விடவும். தக்காளி சாஸ் சேர்த்துப் பரிமாறவும்.

ஹெல்திக்ரிஸ்ப்பீஸ்

தேவையானவை:
சோளமாவு – இரண்டுடேபிள்ஸ்பூன்
கம்புமாவு – இரண்டுடேபிள்ஸ்பூன்
ராகிமாவு – இரண்டுடேபிள்ஸ்பூன்
கோதுமைமாவு – கால்கப்
சர்க்கரை – அரைடீஸ்பூன்
வெள்ளைஎள் – ஒருடீஸ்பூன்
சோடாஉப்பு – அரைடீஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு
வெண்ணெய் – ஒருடீஸ்பூன்
எண்ணெய் – தேவையானஅளவு

unnamed (3)

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சோடா உப்புசேர்த்து அழுந்த தேய்த்துக்கொள்ளவும். இதனுடன் தேவையானவற்றில் உள்ள எண்ணெய் தவிர அனைத்துப்பொருட்களையும் சேர்த்துப்பிசையவும். இடையிடையே சிறிதுதண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து பத்துநிமிடம் மூடிவைக்கவும். பிறகுமாவை தட்டையாகத் தேய்த்துக்கொள்ளவும். அவற்றை ஒரு விரல் நீளமும், ஒரு அங்குல அகலமும் கொண்டவாறு நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், நீளமாக நறுக்கிய மாவை எண்ணெயில் சேர்த்துப் பொரித்துஎடுக்கவும். இவற்றை உங்கள் கற்பனைகேற்ப நீளமாகவோ, வட்டமாகவோ நறுக்கிப் பொரித்தெடுக்கவும். இதை சாஸ் உடன் பரிமாறவும்.

மிக்ஸ்டுவெஜ்மினிஊத்தாப்பம்

தேவையானவை:
தோசைமாவு – ஒருகப்
துருவியகேரட், காலிஃபிளவர், வெங்காயம், முட்டைகோஸ் – ஒருகப்
வறுத்தவேர்க்கடலை – ஒன்றரைடேபிள்ஸ்பூன்
பொடியாகநறுக்கியகொத்தமல்லித்தழை – ரெண்டுடேபிள்ஸ்பூன்
சர்க்கரை – ஒருடீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒருடீஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு
வெள்ளைஎள் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையானஅளவு

unnamed (4)

செய்முறை:
காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இங்கே சொல்லியிருக்கும் காய்கறிகள் அல்லாது உங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான காய்கறிகளைக் கூட இதில் சேர்க்கலாம், தோசை மாவில் காய்கறிகளைக் கலந்து கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையை கொரகொரப்பாக மிக்ஸியில் பொடித்து எடுத்து தோசை மாவில் கலக்கவும். இதில் கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், சர்க்கரை, உப்புசேர்த்துக் கலக்கிக்கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி எண்ணெய் ஊற்றி, இதன்மேல் வெள்ளைஎள்ளைத் தூவவும். இது கருகுவதற்கு முன், இதன் மேல் தோசைமாவை ஊத்தப்பம்போல ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். தக்காளிசாஸ் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

டெலிஷியஸ்பைட்ஸ்

தேவையானவை:
கோதுமைமாவு – கால்கப்
சோயாமாவு – கால்கப்
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
ராகிமாவு – 2 டேபிள்ஸ்பூன்
பொடித்தவெல்லம் – கால்கப்
பொடியாக்கியபாதாம் –  ஒருடீஸ்பூன்
அக்ரூட்பருப்பு – ஒருடீஸ்பூன்
கசகசா – ஒருடேபிள்ஸ்பூன்

unnamed (5)

செய்முறை:
வாணலியைச் சூடாக்கி இதில் கோதுமைமாவு, சோயாமாவு, ராகிமாவு மூன்றையும் ஒன்றன்பின் ஒன்றாக கலந்து பச்சைவாசனை போகும்வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். இதே வாணலியில் நெய்விட்டு உருகியதும், பொடித்தவெல்லத்தைச் சேர்த்து சிறிது தண்ணீர்ஊற்றி, கரையவிட்டுஅடுப்பிலிருந்து இறக்கவும். இதில் வறுத்தமாவு கலவைகளைச் சேர்த்துக் கிளறவும். இத்துடன் பாதாம், அக்ரூட், கசகசாஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். இந்தக் கலவை சூடாககைப் பொறுக்கும் சூட்டில் இருக்கும் போதே, உங்கள் குழந்தைகளுக்குப் பிடித்தமான வடிவங்களில் கட்செய்து அவர்களுக்குக் கொடுக்கலாம்.

பனீர்டிக்கீஸ்

தேவையானவை:
பனீர்க்யூப்ஸ் – 2 கப்
க்யூப்களாகநறுக்கியவெங்காயம் – 2 கப்
க்யூப்களாகநறுக்கியகுடமிளகாய் – ஒருகப்
க்யூப்களாகநறுக்கியபெங்களூர்தக்காளி – ஒருகப்
ஃப்ரெஷ்க்ரீம் – ஒருடேபிள்ஸ்பூன்
கெட்டியானபுளிக்காததயிர் – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – ஒருடேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு
டூத்பிக் – தேவையானஅளவு

சாஸ்செய்ய:
பொடியாகநறுக்கியபுதினா – ஒருகப்
பொடியாகநறுக்கியகொத்தமல்லித்தழை – அரைகப்
சீரகம் – ஒருடீஸ்பூன்
பொடியாகநறுக்கியபச்சைமிளகாய் – 4
எலுமிச்சைச்சாறு – ஒருடீஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு
இவைஎல்லாவற்றையும்மிக்ஸியில்சேர்த்துபேஸ்டாகஅரைத்துக்கொள்ளவும்.

unnamed (6)

செய்முறை:
ஒரு டூத்பிக்கில் பனீர், வெங்காயம், தக்காளி, குடமிளகாய் என ஒன்றன் பின் ஒன்றாக டூத்பிக்கில் குத்திவைக்கவும். இதன்மேல் அரைத்தசாஸை தடவவும். தோசைக் கல்லில்எண்ணெய்விட்டு சூடானதும், வெங்காயம் குத்திய டூத்பிக்கை சேர்த்து, நான்குபுறமும் லேசாக வேகவிட்டு எடுக்கவும். தீயை மிதமாக்கிக் கொள்ளவும். இதற்கு பதில் வெங்காயம், தக்காளி, குடமிளகாய் ஆகியவற்றை இவற்றின் தன்மையைப் பொறுத்து லேசாகவதக்கிபிற குடூத்பிக்கில் ஒன்றன்பின் ஒன்றாக குத்தி சேர்க்கலாம். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், மீதமிருக்கும் சாஸை பச்சைவாசனைபோகும் வரை வதக்கிக்கொள்ளவும். இதில் ஃப்ரெஷ்க்ரீம், தயிர், உப்புசேர்த்துக் கலந்து பரிமாறும் தட்டில்ஊற்றி, இதில்டூத்பிக்கை வைக்கவும். இனி டூத்பிக்கின் மேலும் சாஸை ஊற்றிப் பரிமாறவும்.

ஃப்ரூட்ஃப்ரீஸ்

தேவையானவை:
தோல்நீக்கிபொடியாகநறுக்கியஆப்பிள் – ஒருகப்
சர்க்கரை – இரண்டரைடேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு –  ஒன்றேகால்டீஸ்பூன்
வாழைப்பழம் – 2
தயிர் – கால்கப்

unnamed (7)

செய்முறை:
ஒருபாத்திரத்தில் நறுக்கிய ஆப்பிள், 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் கால்கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு எடுத்து ஆறவிடவும். வாழைப்பழத்தையும் தனியே மசித்து வைத்துக் கொள்ளவும். இனி கொதித்து ஆறிய சர்க்கரைக் கலவையில் மசித்த வாழைப்பழம், தயிர் சேர்த்து பிளண்டரில் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். இதனை விரும்பிய ஜெல்லிமோல்ட் அல்லது விருப்பமான மோல்டில் ஊற்றி, ஃப்ரீசரில் வைக்கவும். பரிமாறும் முன்பு மோல்டில் இருந்து கலவையை வெளியே எடுத்து, ஒரு  பவுலில் போட்டு பரிமாறவும்.

ஸ்வீட்ஃகார்ன்ஸ்வீட்டிடோஸ்ட்

தேவையானவை:
வேகவைத்தஸ்வீட்ஃகார்ன் – ஒருகப்
பிரெட்- 6 துண்டுகள்
வெண்ணெய் – 2 ஸ்பூன்அளவு
பொடியாகநறுக்கியபெரியவெங்காயம்- முக்கால்கப்
பொடியாகநறுக்கிய
பச்சைமிளகாய்- 3
சர்க்கரை – அரைடீஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு
மிளகுதூள்- தேவையானஅளவு
துருவியசீஸ் – அரைகப்

வொயிட்சாஸ்செய்வதற்கு:
வெண்ணெய்- ஒருடேபிள்ஸ்பூன்
மைதா – ஒருடேபிள்ஸ்பூன்
பால் – ஒருகப்
மிளகு, உப்பு – தேவையானஅளவு

unnamed (8)

செய்முறை:
வாணலியை சூடாக்கி, சாஸ் செய்வதற்கு கொடுத்துள்ள வெண்ணெயை சேர்த்து உருக்கிக் கொள்ளவும். இதில் மைதாவை சேர்த்து பச்சைவாசனை போகும் அளவுக்கு வதக்கவும். இத்துடன் சிறிதுசிறிதாக பாலை ஊற்றி சிம்மில் வைத்து கட்டி விழாமல் கிளறவும். நன்றாக வெந்துவரும் போது மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். இதை, வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். இப்போது சுவையான வொயிட் சாஸ்ரெடி.

வேறு ஒருவாணலியில் வெண்ணெயை விட்டு, உருகியதும், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். இதில் வேகவைத்த ஸ்வீட்கார்னை சேர்த்து  வதக்கவும். பிறகு சர்க்கரை, மிளகுத்தூள், உப்புசேர்த்துக் கிளறி சிலநிமிடம் கழித்து வொயிட்சாஸ் சேர்த்து நன்றாகக் கிளறவும். இது திக்கான சாஸ்போல் ஆகும். பின், பிரெட்டை ரோஸ்ட்செய்து இதன்மேல் சீஸை மூடிவைத்து தனியே வைத்து, பிறகு பரிமாறவும்.

ஆப்பிள்பனானாஸ்மூத்தி

தேவையானவை:
நன்குபழுத்தவாழைப்பழம்- ஒன்று
தோல்நீக்கிநறுக்கியஆப்பிள்-  ஒன்று
புளிக்காதஃப்ரெஷ்தயிர்- ஒருகப்
சர்க்கரை- இரண்டரைடேபிள்ஸ்பூன்
ஐஸ்க்யூப் – 9
எலுமிச்சைச்சாறு – ஒருடீஸ்பூன்

unnamed (9)

செய்முறை:
ஐஸ்க்யூப் தவிர மற்ற எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்தெடுத்தால் ஸ்மூத்தாக க்ரீம்போல் வரும். இதை அப்படியே கிளாஸில் ஊற்றி, ஒரு ஸ்பூன் வைத்து கொடுக்கலாம். பரிமாறும் போது இதை செய்தால்தான் ஃப்ரெஷாகவும் டேஸ்டாகவும் இருக்கும்.

டேஸ்ட்டிடேட்பால்ஸ்

தேவையானவை:
விதைநீக்கிநறுக்கியபேரீச்சைப்
பழம் –  ஒன்றரைகப்
நெய் – 2 டீஸ்பூன்
பொடியாகநறுக்கியபாதாம் – ஒருகப்
உலர்ந்ததேங்காய்த்துருவல் –
3 டேபிள்ஸ்பூன்

unnamed (10)

செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடானதும் தீயை மிதமாக்கி பேரீச்சம்பழத்தைச் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை கிளறி எடுத்துக் கொள்ளவும். பிறகு, பொடித்த பாதாமைத் தூவி நன்கு கிளறவும். பேரீச்சை வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும். ஆறியதும் சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். பரிமாறும் தட்டில் உலர்ந்த தேங்காய்த் துருவலைத் தூவி, இதில் இந்த உருண்டைகளைப் போட்டு புரட்டி எடுத்துப் பரிமாறவும்.