குழந்தைகள் விற்பனைக்கு…

[wysija_form id=”1″]

DOWNLOAD BOOKS http://tamilagamtimes.com/?post_type=product

* கடந்த வருடம் சேலம், பள்ளப்பட்டி பகுதியில், பிறந்து நான்கு நாட்களே ஆன பெண் குழந்தைத் திருடப்பட்டு 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

* எடப்பாடியில் ஒரு மாதப் பெண் குழந்தை, விற்பனைக்காக ஒரு கும்பலால் திருடப்பட்டது.

* ஆண் குழந்தையை 10 ஆயிரத்துக்கும், பெண் குழந்தையை 5 ஆயிரத்துக்கும் பெற்றோர்களே விற்பனை செய்த விநோதமும் ஆத்தூரில் நடந்தது.

* சில மாதங்களுக்கு முன்பு சேலம் ரயில்வே ஸ்டேஷன் அருகே இருந்த வாய்பேச இயலாத ஃபாத்திமா என்கிற பிச்சைக்காரப் பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு அவரின் 4 வயது ஆண் குழந்தையை 7 பேர் கொண்ட கும்பல் கடத்தி விற்பனை செய்ய முயற்சி செய்தது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை சம்பவங்களிலும் குழந்தைகள் மீட்கப்பட்டுவிட்டன என்பது ஆறுதலான செய்தி. ஆனால், யாருடைய கவனத்துக்கும் வராமல் விற்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனையோ?

கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் நடந்த சம்பவம் இது. சேலம் மாவட்டம் ஜெயசீலி என்ற பெண் தன்னுடைய ஏழு மாத பெண் குழந்தையைக் காணவில்லை என்று சேலம் இரும்பாலை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, நாகர்கோவிலில் வைத்து குழந்தையை மீட்டிருக்கிறார்கள் போலீஸார்கள்.

காவல் நிலையத்தில் குழந்தையுடன் அமர்ந்திருந்த ஜெயசீலியிடம் முதலில் பேசினோம்.

”தருமபுரி மாவட்டம் அரூர்தான் நான் பிறந்த ஊர், திருப்பத்தூரைச் சேர்ந்த மைக்கேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்க வீட்டுக்காரருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வரும். ஒருகட்டத்துல வேற வழியில்லாம எங்க அம்மா வீட்டுக்கே வந்துட்டேன். அப்பதான் அசோக் என்பவரோட பழக்கமாச்சு. எனக்கும் அவருக்கும்தான் அந்த குழந்தை பிறந்துச்சு. அப்பதான் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த பழனியம்மா (ஒரிஜினல் பெயர்சுமதி. பழனியம்மா என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாராம்.) என்பவர் எனக்கு அறிமுகமானாங்க. ஃப்ரெண்ட்ஸா பழகிட்டு இருந்தோம். திடீர்னு ஒருநாள், ‘உன் குழந்தையை வித்துடுறியா?’னு கேட்டாங்க. இதற்கிடையில, செந்தில்குமாருனு ஒருத்தன் எனக்கு போன் பண்ணி, பார்க்க வர்றதா சொன்னான். செந்தில்குமார் இன்னொருத்தனை அழைச்சிக்கிட்டு வந்தான். ஒருத்தன், ‘குழந்தையை கடைக்குக் கூட்டிகிட்டு போறேன்’னு கூட்டிகிட்டு போனான். போனவன் திரும்பவேயில்லை. வீட்டில் இருந்தவனும் எகிறி குதிச்சு ஓடிட்டான். உடனே பழனியம்மாகிட்ட போய் குழந்தை எங்கேன்னு கேட்டேன். தெரியாதுனு சொல்லிட்டா. மறுநாள் போலீஸ்ல புகார் கொடுத்துட்டேன்” என்றார்.

விசாரணைக்காக காவல் நிலையத்தில்  அமர்ந்திருந்த சுமதியிடம் இதுபற்றி கேட்டபோது, ”ஒருமுறை நாகர்கோவிலுக்கு போனபோது நதியாவும் (ஜெயசீலி தன்னை நதியா என்று அறிமுகப்படுத்திக்கொண்டாராம்… எதற்காக இருவரும் பெயரை மாற்றிச் சொன்னார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்) என்கூட வந்தாங்க. அப்ப அங்க ஒரு பாட்டி, ‘புருஷன் இல்லேங்குற. குழந்தைய யார்ட்டயாவது கொடுத்தா. அவங்களாவது நல்லபடியா வளர்ப்பாங்கள்ல’ன்னு எதார்த்தமா கேட்டாங்க. அந்தப் பாட்டியை செந்தில்குமாருக்கும் தெரிஞ்சிருக்கு. இருவரும் சேர்ந்து அந்தக் குழந்தைய விற்பனை முயற்சி பண்ணியிருக்கங்க. இதை அந்தப் பாட்டியே எனக்கு போன் பண்ணி சொல்லுச்சு. நதியாவுக்குப் பணம் பேசினபடி வரலையின்னவுடனே என்னைச் சிக்கவைக்கப் பார்க்கிறாங்க. எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” என்று மறுத்தார்.

போலீஸ் தரப்பில், ”ஜெயசீலி கொடுத்த புகாரின் பேரில் சுமதியை அரெஸ்ட் செய்துவிட்டோம். செந்தில்குமாரைத் தேடி வருகிறோம்” என்றனர்.

குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் சிலரிடம் பேசினோம். ”இப்போது இதுமாதிரியான குழந்தை விற்பனை சம்பவங்கள் கண்ணுக்குத் தெரியாமல் அதிக அளவில் நடக்கின்றன. பணக் கஷ்டத்தில் தவிக்கும் ஏழைப் பெற்றோர்களைக் கடத்தல் கோஷ்டியினர் எப்படியோ தொடர்ந்து கவனித்து அவர்களுடைய உறவினர்கள் மூலம் பேசி அவர்கள் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுவார்கள். சில ஆயிரத்தைக் கொடுத்துவிட்டு குழந்தையை வாங்கி, அந்தக் குழந்தையை பெரிய பணக்காரர்களாக பார்த்து லட்சக்கணக்கில் விற்பனை செய்துவிடுகிறார்கள். முறையற்ற வாழ்வினால் உருவாகிவிடும் குழந்தைகளையும் இது மாதிரியான ஆட்களிடம் ரகசியமாக விற்பனை செய்துவிடுகிறார்கள். அரசாங்கம் தொட்டில் குழந்தைத் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. குழந்தையை வளர்க்க முடியாதவர்கள்  சமூக நலத்துறை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருக்கும் தொட்டிலில் சேர்த்துவிடலாம்” என்றார்.

குழந்தைகள் ஜாக்கிரதை!

WE ARE TAMILAGAMTIMES PUBLISHERS
YOU CAN DOWNLOAD BOOKS FROM FOLLOWING CATEGORIES
accounting-finance
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=accounting-finance

career-study-advice
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=career-study-advice

career-management-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=career-management-books

communication-presentation-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=communication-presentation-books

engineering-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=engineering-books

engineering-for-professionals
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=engineering-for-professionals

entrepreneurship-small-business
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=entrepreneurship-small-business

it-management-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-management-books
it-programming-computer-science-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-programming-computer-science-books

language-learning-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=language-learning-books

management-strategy-development
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=management-strategy-development

marketing-sales
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=marketing-sales

natural-sciences-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=natural-sciences-books

office-programs-software
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=office-programs-software

personal-development-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=personal-development-books

statistics-mathematics
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=statistics-mathematics