சந்தை – ஒரு சாதுர்ய களம் ( MARKETING & SALES )

சந்தை நிர்மாணம் செய்தல் ( MARKETING TECHNIQUES ) – விற்பனை செய்தல் ( SALES TECHNIQUES  ) என இரு களங்களில்தான் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிப் பாதை நோக்கி செல்லும்.

தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்ய தேவைப்படும் நுட்ப அறிவை விட பல மடங்கு  மனித அனுபவ வளம் சந்தைப்படுத்துததில் தேவைப்படும். ஏனென்றால் சந்தை இடங்கள் மாறும்போது சந்தை உத்திகளையும் மாற்ற தெரிந்திருக்க வேண்டும்.  ஒரே தொழில் உற்பத்தி முறையில் தாயாரிக்கபடும் பொருள் – ஒரே மாநிலத்தில் சந்தைப்படுத்துவதற்கு கூட வெவ்வேறு விற்பனை உத்திகளை கொண்டுதான் சந்தைப்படுத்த முடியும்.

மக்களின் வாங்கும் சக்தி – கலாச்சார அணுகுமுறை – திரும்ப திரும்ப வாங்க தூண்டும் விற்பனை ஊக்குவிக்கும் திட்டங்கள் – சந்தை ஓட்டத்தின் வேகம் அறிந்து நம் பொருளை சந்தைப்படுத்தும் திறன் – பொருளின் பயன்பாட்டு அளவை பொறுத்து விற்பனை அளவை நிர்ணயம் செய்தல் என பல விதமான கள நுட்ப விசயங்களை அறிந்து செயல்பட்டால் மட்டுமே சந்தை நிர்மாணம் செய்யவும் – விற்பனை செய்யவும் இயலும்.

இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் மார்க்கெட்டிங்க் – சேல்ஸ் துறையின் வல்லுனர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். தவறாது வாசியுங்கள். உங்கள் இ மெயில் முகவரியை பதிவு செய்யுங்கள். editor@tamilagamtimes.com