சாமி எனக்கு ஒரு சந்தேகம்…

நெடுநாளாய் ஒரு சந்தேகம் என் உயிரோடு ஒட்டிவருவதை உணர்கிறேன்..

அதன் வெப்பம் உணர்ந்து அது நீண்ட தூரம் பயணித்து வருவது புரிந்தது;

ஆறாவது அறிவின், பரிணாம காலத்தின் மத்தியநாட்களில் இந்த சந்தேகங்கள் மனித மனசுக்குள் தோன்றி பயணம் தொடங்கியிருக்க வேண்டும்;

ஏனென்றால் கேள்வியில், தர்க்க அறிவின் சாமர்த்திய துணைபோக்குகள் இல்லை;

அது என்னவென்றால்;

பிரபஞ்ச உணவு கொண்டு மட்டுமே உயிர் வாழ்ந்து விடும் எளிய இயற்பியல் ஆற்றல் கொண்ட மனித உடல் வாழ்க்கையில் ;

உணவு தேடல் மட்டுமே இலக்காக மூளையில் அமைந்திருக்க வேண்டும்;

உணவு உற்பத்தி ஒன்றே நம் உலகளாவிய தொழிலாக பரிமளித்திருக்க வேண்டும்;

உடல் உழைப்பின் மதிப்பீடுகள் காகித குறியீடுகளாக ( CURRENCY )  மாறியது என்ன வகை பரிணாமம் ?

கத்திரிக்காயும் – கணினியும் உற்பத்தியாகும் இடங்களில் உழைப்புக்கு ஒரே ஊதியமா ….?

கத்திரிக்காய் விற்ற பணத்தில்  – கம்ப்யூட்டர் வாங்கி படித்து மீண்டும் கத்திரிக்காய் வாங்கவே சம்பாதிக்கிறோம் !

தேச அடையாளங்கள் கொண்ட பூகோள வரைபடங்களில் பட்டினியும் – சாவுகளும் சர்வதேச விளைவுகளான காரணம் ….?

பகிர்ந்துண்டு வாழும் பண்பையும் ; பண்டமாற்று முறையையும் நாம் விலக்கினோம் ;

நிறை உணவும் , மனித நேயமும் விலகியது,

பட்டினி சாவுகளும் – பற்றாகுறையும் பற்றிக் கொண்டது;

தேர்தலுக்கு பணமும், திருவிழாவிற்கு சோறும் என்ற கையேந்தும் கூட்டத்தை உருவாக்கியது யார் ?

கையேந்தி பாத்திரங்களுக்கு முன்னால் கைபேசிகளும் – கணினிகளும் உற்பத்தி பெருக்கமாவது எதற்கு ?

உழைப்பும் – பகிர்வும் உண்மையானால் , தேர்தல் இலவசம் தேவையில்லாமல் போகுமே ?

நாம் திசை மாறி வெகுதூரம் போய் வெகுகாலமானது என்பதால் எங்கள் குரல் கேட்பதில் சற்று சிரமம் இருக்கும்;

வாக்காளர் அட்டை மட்டும் நம் அடையாளமில்லை…நம் அடையாளம் நமக்கே தெரிவதில்லை !

editor@tamilagamtimes.com