சீக்கிரம் மீண்டு வா அன்யா!

[wysija_form id=”1″]அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் வசிக்கிறார்கள் ஆனந்த் கண்ணன்- ப்ரீத்தி தம்பதி. இவர்களது செல்ல மகள் அன்யா ஆனந்த். ஐந்து வயதான அன்யா, பிரைன் டியூமரால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பது துயரமான செய்தி.http://tamilagamtimes.com/?post_type=product

மூளையின் மத்தியப் பகுதியில் உருவாகும் இந்த வகை டியூமரால் (DIPG-Diffuse Intrinsic Pontine Glioma)  பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிழைத்தது இல்லை என்பது மருத்துவர்களின் கூற்று. அன்யாவுக்கும் இதையே சொல்லிவிட்டனர் அமெரிக்க டாக்டர்கள்.http://tamilagamtimes.com/?post_type=product

கடந்த வருடம் செப்டம்பரில் அன்யாவுக்கு பிரைன் டியூமர் என்று கண்டறியப்பட்டபோது, உடைந்து போனார்கள் அவளது பெற்றோர். அவள் அதிகபட்சம் இன்னும் 12 மாதங்கள் மட்டுமே உயிர் வாழ் வாள் என பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டது.http://tamilagamtimes.com/?post_type=product

மருத்துவ உலகம் தன் மகளை கைவிட்டாலும், அதையெல்லாம் மீறிய ஒரு சக்தி தன் மகளைக் காப்பாற்றும் என்ற அதீத நம்பிக்கையுடன், மகளின் நோயோடு போராடி வருகிறார்கள் ஆனந்த் கண்ணன்- ப்ரீத்தி தம்பதி.
http://tamilagamtimes.com/?post_type=product
அவளுக்காக ஆரம்பிக்கப்பட்ட Pray for Anya Anand என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், அன்யாவின் ஒவ்வொரு நாளையும் புகைப்படங்களாகப் பதிவேற்றுகிறார்கள். ‘அன்யா சோர்வாக இருக்கிறாள்; சாப்பிட வில்லை. ஆனால், சரியாகிவிடுவாள் என்று நம்புகிறோம்!’ என்று தினம்தினம் தங்கள் மனத் தவிப்பை அதில் தொடர்ந்து பதிவு செய் கிறார்கள்.http://tamilagamtimes.com/?post_type=product

அன்யாவின் அப்பா ஆனந்த் கண்ணன், பிரபலமான ‘கோ ஃபண்ட் மீ’ வலைதளத்தில் தன் மகளின் மருத்துவ சிகிச்கைக்காக நிதி உதவி கேட்டிருக்கிறார். இன்னொரு பக்கம், அன்யாவை டியூமரிடம் இருந்து காக்கப் போராடி வருகிறார்கள் மருத்துவர்கள்!http://tamilagamtimes.com/?post_type=product

அன்யாவின் குழந்தை முகம் நம்மை ஏதோ செய்கிறது!

மருத்துவ அற்புதமோ, மனிதர்களின் பிரார்த்தனையோ எதுவோ ஒன்று அவளைக் காக்கட்டும்.

www.facebook.com/prayforanya http://tamilagamtimes.com/?post_type=product

[wysija_form id=”1″]