சீட்டுத் திட்டம்: லாபமா, நஷ்டமா?

TO GET YOUR ENGINEERING & OTHER COLLEGE BOOKS VISIT http://pickyourbooks.wordpress.com/
& write to us pickyourbookz@gmail.com

SHARE THIS DOMAIN http://pickyourbooks.wordpress.com TO YOUR FRIENDS TO FIND THEIR REQUIRED STUDY BOOKS

மாத சம்பளம் வாங்குபவர்கள், பிசினஸ் செய்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள் என யாராக இருந்தாலும் ஏலச் சீட்டுப் போடாதவர்களைப் பார்க்கவே முடியாது. மகளுக்குக் கல்யாணம், வீடு வாங்க, குழந்தைகளின் உயர்கல்வி, அவசரத் தேவை என அனைத்துத் தேவைகளுக்கும் பலரும் வைத்திருக்கும் ஒரே ஆயுதம் சீட்டுதான். நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் நம்பும் ஒரு முதலீடாகவும் இந்தச் சீட்டுத் திட்டம் இருக்கிறது. இந்த நம்பிக்கை சரியா, சீட்டுத் திட்டத்தில் சேருவது லாபகரமாக இருக்குமா என்பதைப் பார்ப்போம்.

இரண்டு வகைச் சீட்டு!

சீட்டு என்பது இரு வகையில் நடத்தப்படுகிறது. ஒன்று, சில தனியார் நிறுவனங்கள் அரசின் அனுமதிப் பெற்று முறையாக நடத்துவது; இன்னொன்று, அரசு அனுமதி பெறாமல், ஒரே இடத்தில் இருக்கும் 10, 20 பேர் ஒரு குழுவாகச் சேர்ந்து நடத்துவது.

இதில் அரசின் அனுமதி பெற்று முறையாகச் சீட்டு நடத்துபவர் களிடம்தான் சீட்டுச் சேரவேண்டும். அரசு அனுமதி பெறாமல் நடத்தப்படும் சீட்டுத் திட்டத்தில் யாராவது ஒருவர் சரியாகப் பணம் கட்டவில்லை என்றாலும்கூட நீங்கள் கட்டிய பணம் உங்கள் கைக்கு வந்துசேர தாமதம் ஆகும். மேலும், சீட்டு நடத்துபவர் பணம் தராமல் பிரச்னை செய்தால், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்ய முடியும். ஆனால், நம் பணம் திரும்பக் கிடைக்குமா என்பது சந்தேகமே.

அனுமதிபெற்ற சீட்டு நிறுவனங்கள் செயல்படும்விதம் குறித்தும், அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றியும் நமக்கு விரிவாக விளக்கினார் ஸ்ரீமதி சிட் ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் எஸ்.ராஜாராமன்.

அரசிடம் பதிவது அவசியம்!

”முறைப்படி பதிவு செய்யப்பட்ட சீட்டு நிறுவனங்கள், சீட்டு நடத்தும் தொகையின் அளவைப் பொறுத்து, தமிழ்நாடு சீட்டுப் பதிவு அலுவலகத்தின் பெயரில் குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்ய வேண்டும்.

அதாவது, 20 பேர் கொண்ட குழுவை வைத்து, 20 மாதங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சீட்டு நடத்துகிறார்கள் எனில், அந்தச் சீட்டை துவங்குவதற்குமுன் ஒரு லட்சம் ரூபாயை சீட்டு நிறுவனத்தின் பெயரிலும், தமிழ்நாடு சீட்டுப் பதிவு அலுவலகத்தின் பெயரிலும் சேர்த்து ஏதாவது ஒரு பொதுத்துறை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கான ரசீதை தமிழ்நாடு சீட்டுப் பதிவு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இதைக் கொடுத்தபிறகு சீட்டுப் பதிவு அலுவலகம், சீட்டை துவங்குவதற்கு முன்ஒப்புகை சீட்டை கொடுக்கும். இதில் அந்தச் சீட்டு பதிவு செய்யப்பட்டதற்கான எண் இருக்கும். இந்த எண்ணை சீட்டில் சேர்பவர்கள் குறித்துவைத்துக் கொள்வது முக்கியம். மேலும், சீட்டில் சேரும்முன் இந்த எண்ணை வைத்து பதிவு அலுவலகத்தில் செக் செய்துகொள்வதும் அவசியம்.

ஒவ்வொரு மாதமும் சீட்டுப் பணம் செலுத்தியபின் ஒரு ரசீதை சீட்டு நிறுவனம் தரும். இதில் சீட்டுப் பதிவு செய்த எண் இருக்கும். சீட்டு நிறுவனம் உங்களின் பணத்தைக் குறிப்பிட்ட நேரத்தில் தரவில்லை எனில், அந்த நிறுவனத்தின் மீது புகார் அளிக்கலாம்.

சீட்டுப் பதிவு சட்டம் 1982-ன் பிரிவு 40 கீழ், டெபாசிட் செய்த தொகையிலிருந்து பணத்தை எடுத்து அந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்குக் கொடுக்கும். அதேபோல, சீட்டு போட்டவர்களும் சரியாகப் பணத்தைச் செலுத்தவில்லை எனில், ஆர்பிட்ரேஷன் மூலமாகச் சீட்டு நிறுவனம் பணத்தை வசூலித்து விடும்” என்றவர், சீட்டு ஏலம் கேட்டு எடுத்தபின் என்னென்ன நடைமுறைகள் என்பதையும் தொடர்ந்து விளக்கினார்.

கேரன்டி கையெழுத்து!

”ஏலத்தில் சீட்டை எடுத்தவர் தனக்குத் தெரிந்த மூன்று நபர்களிடம் கேரன்டி கையெழுத்து வாங்கித் தரவேண்டும். சீட்டை எடுத்தவர் பணத்தைச் சரியாகக் கட்டவில்லை எனில்,  பணத்துக்கு நான் பொறுப்பு என கேரன்டர் கையெழுத்து போடுபவர்களிடம்  சீட்டு நடத்தும் நிறுவனம் எழுதி வாங்கிக்கொள்ளும்.

சீட்டுத் தொகையின் அளவை பொறுத்து கேரன்டி கையெழுத்திடும் நபர்களின் எண்ணிக்கைக் கூடும், குறையும். குறிப்பிட்ட தொகைக்குமேல் போகும்போது சொத்து ஏதாவது இருந்தால், அதைச் சீட்டு நிறுவனத்தின் பெயரில் அடமானம் செய்துதர வேண்டும். அப்போதுதான் பணத்தைச் சீட்டு நிறுவனம் தரும். அனைத்து சீட்டும் முடிவடைந்தபின் அடமானமாகத் தந்த சொத்துப் பத்திரத்தை திரும்பத் தந்துவிடுவார்கள்.

சீட்டு நிறுவனம் முதல் சீட்டுப் பணத்தை எடுத்துக்கொள்ளும். அதேபோல, ஒவ்வொரு மாதமும் சீட்டின் தொகையில்  5 சதவிகித தொகையை கமிஷனாக எடுத்துக் கொள்ளும். ஒரு லட்சம் ரூபாய் சீட்டு (1,00,000ஜ்5/100) எனில், மாதம் 5,000 ரூபாயை எடுத்துக்கொள்ளும். இதில்தான் அலுவலக நிர்வாகச் செலவு, சம்பளம் போன்ற செலவுகளைச் சீட்டு நடத்தும் நிறுவனம் பார்த்துக் கொள்ளும்” என்றார்.

எப்படி லாபம்?

50 ஆயிரம் ரூபாய் சீட்டு 10 மாதத்துக்குப் போடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இதில் முதல் மாதம் அல்லது இரண்டாவது மாதம், சீட்டு நடத்தும் நிறுவனம் முழுத் தொகையையும் எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 9 மாதங்களில் மற்றவர்கள் சீட்டை எடுத்துக்கொள்ளலாம். இதில் தள்ளுபடி போக, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையைச் செலுத்துவோம்.

Click To Enlarge

தள்ளுபடி என்பது சீட்டு நிறுவனங்களுக்கு 40% வரை அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், பெரும்பாலான சீட்டு நிறுவனங்கள்

30 சதவிகித தொகையைத்தான் தள்ளுபடி தொகையாக வைத்துக்கொள்கின்றன. இந்தத் தள்ளுபடி தொகை ஒவ்வொரு மாதமும் குறைந்துகொண்டே வரும். (எதிர்பக்கத்தில் உள்ள அட்டவணையைப் பார்க்க).

இந்தத் திட்டத்தில் நாம் மொத்தமாக 44 ஆயிரம் ரூபாய் கட்டியிருப்போம். இதில் 6 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி தொகை கிடைக்கும். கடைசிச் சீட்டு எடுத்தவருக்கு (சீட்டு நிறுவனத்துக்கு 5% கமிஷன் தொகை 2,500 ரூபாய் போக) 47,500 ரூபாய் கிடைக்கும். இதில் நீங்கள் செலுத்திய தொகை 44 ஆயிரம் ரூபாய்; உங்களுக்குக் கூடுதலாகக் கிடைக்கும் தொகை 3,500 ரூபாய். இதுதான் கடைசியாக எடுத்தவருக்கான லாபம்.

ஆனால், நீங்கள் இரண்டாவது சீட்டில் பணம் எடுத்திருந்தால், நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதாவது, உங்களுக்கு அட்டவணையில் சொல்லியுள்ளபடி, 35 ஆயிரம் ரூபாய்க் கிடைத்திருக்கும். ஆனால், நீங்கள் மொத்தமாகச் செலுத்திய தொகை 44,000 ரூபாய். ஆக, உங்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படும். என்றாலும் இந்த நஷ்டத்தைக்கூட லாபமாக ஆக்கிக்கொள்கிறார்கள் பலர். அதாவது, ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு மாதத்துக்கு

5 – 10% வட்டி என்கிற கணக்கில் கடன் வாங்கியிருப்பார்கள். இந்தக் கடனை திரும்பச் செலுத்த சீட்டுப் பணம் உதவும். இதை ஓர் உதாரணத்துடன் பார்ப்போம்.

ஒருவர் 30,000 ரூபாயை மாதம் 5 சதவிகித வட்டிக்கு வாங்கியிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். இதற்கு 10 மாத வட்டி மட்டும் (30,000ஜ்5/100ஜ்10) எனில் 15,000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அசலுடன் சேர்த்து மொத்தமாக 45,000 செலுத்த வேண்டியிருக்கும்.

இரண்டாவது மாதம் நீங்கள் சீட்டின் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து, கடனை அடைத்திருந்தால் (அசலோடு, ஒரு மாத வட்டி 1,500 ரூபாயும் சேர்த்து), நீங்கள் 31,500 ரூபாய்தான் செலுத்தியிருப்பீர்கள்.

30,000 ரூபாய் கடன் தொகைக்கு வட்டியுடன்  சேர்த்து ரூ.45,000 கட்டவேண்டியிருக்கும். ஆனால்

10 மாத சீட்டுக்கு ரூ.44,000 மட்டுமே கட்டியிருப்பீர்கள். இரண்டுக்குமான வித்தியாசம் 1,000 ரூபாய்.

35,000 ரூபாய்க்கு சீட்டை தள்ளி எடுத்து கடனுக்கு 30,000, வட்டிக்கு 1,500 கட்டியது போக மீதி 3,500 ரூபாய் கையில் இருக்கும். ஆக மொத்தம் ரூ.4,500 லாபம்.

ஆக, சீட்டுத் திட்டத்தில் எந்தக் காரணத்துக்காகச் சேர்ந்து பணம் எடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே லாபமா, நஷ்டமா என்பது அமையும்!

நன்றி விகடன்

FOLLOW OUR BLOG VIA MAIL TO GET UPDATES NEW ARTICLES @ YOUR INBOX

TO GET YOUR ENGINEERING & OTHER COLLEGE BOOKS VISIT http://pickyourbooks.wordpress.com/
& write to us pickyourbookz@gmail.com

SHARE THIS DOMAIN http://pickyourbooks.wordpress.com TO YOUR FRIENDS TO FIND THEIR REQUIRED STUDY BOOKS

VISIT OUR GROUP OF DOMAINS
EDITOR – www.tamilagamtimes. com
CONTACT : pickyourbookz@gmail.com

http://pickyourbooks.wordpress.com/ FOR COLLEGE E BOOKS

http://yazhinimaran.wordpress.com/ FOR MEDICAL ARTICLES

http://isaipriyanka.wordpress.com/ FOR ECONOMICAL ARTICLES

https://kaviazhaku.wordpress.com / FOR POLITICAL & SOCIAL ARTICLES

http://shanthivinayagam.wordpress.com/ FOR WOMEN

http://alagusundari.wordpress.com/ FOR SPIRITUAL

SHARE THIS DOMAIN http://pickyourbooks.wordpress.com TO YOUR FRIENDS TO FIND THEIR REQUIRED STUDY BOOKS