சுட்டி தியேட்டர் – கடல் நண்பன் காட்ஸிலா !

TO GET YOUR ENGINEERING & OTHER COLLEGE BOOKS VISIT http://pickyourbooks.wordpress.com/
& write to us tvmurugesan71@gmail.com

இந்தக் கோடை இறுதியில், 3D அவதாரம் எடுத்து, திரையில் கலக்கிக்கொண்டிருக்கிறான் கடல் நண்பன், காட்ஸிலா. அந்தப் படத்தை விமர்சிக்கிறார்கள் நம்ம சுட்டி நண்பர்கள்.

தயாளன்: 1954-ல் ஜப்பான் டைரக்டர் ஹிஷிரோ ஹோண்டா (Ishiro Honda)  உருவாக்கின கற்பனைப் பாத்திரம்தான் காட்ஸிலா. மக்களுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் கடலுக்குள் இருக்கும் காட்ஸிலா வெளியே வந்து உதவும். திரைப்படங்கள், டி.வி. சீரியல், காமிக்ஸ் என ஹிட் அடித்தவன் காட்ஸிலா.

ஜெகஸ்ரீ: நீ ரொம்ப விஷயம் தெரிஞ்சவன்தான் ஒப்புக்கிறோம். இப்போ,   காட்ஸிலா 3D படத்தைப் பற்றி பேசுவோம். 1999-ம் வருஷம் ஜப்பானில் கதை ஆரம்பிக்குது. அங்கே இருக்கும் அணு உலையில் வேலை செய்றாங்க பிரையனும் அவங்க மனைவியும். அப்போ, நில அதிர்வு ஏற்பட்டு, பிரையனின் மனைவி இறந்துடறாங்க. அந்தப் பகுதியைத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கிறாங்க. அப்போ, சின்னப் பையனா இருக்கிற படத்தின் நாயகன் ஆரோன், சான் பிரான்ஸிஸ்கோவுக்குப் அனுப்பப்படுகிறான். 15 வருஷங்களாக அங்கேயே வளர்ந்து, அமெரிக்க நேவியில் வொர்க் பண்றான். மனைவியும் ஒரு குழந்தையும் இருக்காங்க. அந்த சமயத்தில், ஜப்பானில் அப்பாவைக் கைதுசெய்திருக்கிறதா தகவல் வருது.

ஆர்யன் பிரகாஷ்: ஜப்பானுக்குப்போய் அப்பாவை ஜாமினில் எடுக்கிறான் ஆரோன். தடை செய்யப்பட்ட அணு உலைப் பகுதிக்கு அவர் போனது தெரியுது. ‘ஏன் அங்கே போனீங்க?’னு  கேட்கிறான். அதற்கு பிரையன், ’15 வருஷத்துக்கு முன்னாடி பூகம்பம் ஏற்பட்டது உண்மை. ஆனால், உன் அம்மா அதனால் மட்டும் இறக்கலை. அணு உலை நிலையத்தில் ஆபத்தான  ஒரு விலங்கு இருக்கு’னு சொல்றார். ரெண்டு பேருமா சேர்ந்து அந்தப் பகுதிக்கு மறுபடியும் போறாங்க. அங்கே 15 வருஷங்களாக அணுக்கருப் பொருட்களைச் சாப்பிட்டு, ஒரு பயங்கர விலங்கு உருவாகிட்டிருக்கு. போலீஸ், ராணுவம் அதைச் சாகடிக்க முயற்சிக்கும்போது, தப்பிச்சு நாட்டுக்குள் வந்துடுது.

பவேஷ்: அணுக்கதிர்கள், மின்சாரத்தை உணவாகச் சாப்பிட்டு பிரமாண்டமாக வளர்ந்திருக்கும் அந்த விலங்கு நகருக்குள் அட்டகாசம் செய்யுது. அதைப் போலவே இருக்கும் இன்னொரு விலங்கும் அங்கே வந்துடுது. ரெண்டும் சேர்ந்து கட்டடங்கள், விமானங்கள், ரயில்களை அடிச்சு நொறுக்குதுங்க. கடலுக்குள் இருக்கும் காட்ஸிலா வெளியே வந்து, அந்த மிருகங்களை எப்படி அழிக்குதுங்கிறது த்ரில் கிளைமாக்ஸ்.

தயாளன்: வழக்கமான காட்ஸிலா கதைதான். இன்றைய நவீன டெக்னாலஜியில் அசத்தியிருக்காங்க. அந்த ரெண்டு விலங்குகளும் வாயைத் திறந்துகிட்டு வர்றதை 3D-யில் பார்க்கும்போது நம்மையே விழுங்கிற மாதிரி இருக்கு. நாயகனைத் தேடிவந்து, ஒரு கட்டடத்தில் மாட்டிக்கொள்ளும் நாயகிக்கு என்ன ஆகுமோனு பதறுது. ரயிலில் தன் பொறுப்பில் இருக்கும் ஒரு பையனைக் காப்பாற்ற, நாயகன் போராடுறதும் திக்திக். ரெண்டு விலங்குகளாலும் தாக்கப்பட்டு, விழுந்துடுற காட்ஸிலா செத்துப்போச்சுனு எல்லோரும் கண்ணீர் விடும்போது, மெதுவாக எழுந்து கடலுக்குள் போற சீன்… பயங்கர ஃபீலிங்.

ஜெகஸ்ரீ: ஹாரி பாட்டர் டெட்லி ஹாலோஸ், தி ட்விலைட் சகா (The Twilight Saga: New Moon) போன்ற படங்களுக்கு மியூஸிக் பண்ணின அலெக்ஸாண்ட்ரா மைக்கேல்தான் இதுக்கும் மியூஸிக். நாயகன் ஆரோன் டெய்லர், நாயகி எலிசபெத் ஓல்சன், கொஞ்ச நேரமே வரும் அந்தக் குட்டிப் பையன் என எல்லோரும் அற்புதமா நடிச்சிருக்காங்க.

ஆர்யன் பிரகாஷ்: முக்கியமான ஆளை விட்டுட்டீங்களே… கிராபிக்ஸா, இல்லே நிஜமாகவே இருக்கானு நினைக்கிற அளவுக்கு காட்ஸிலாவை அற்புதமாக உருவாக்கின கிரியேட்டிவ் டீம். அவங்களுக்கு காட்ஸிலா மாதிரி சத்தமா ஓ போடுவோம்.

நன்றி விகடன்

FOLLOW OUR BLOG VIA MAIL TO GET UPDATES NEW ARTICLES @ YOUR INBOX
TO GET YOUR ENGINEERING & OTHER COLLEGE BOOKS VISIT http://pickyourbooks.wordpress.com/
& write to us tvmurugesan71@gmail.com

VISIT OUR GROUP OF DOMAINS
EDITOR – www.tamilagamtimes. com
CONTACT : tamilagamtimes@post.com
knowledgeocean2014.blogspot.com FOR E BOOKS IN 75 SUBJECTS

madhuvanthana.wordpress.com FOR ENTERTAINMENT ARTICLES

yazhinimaran.wordpress.com FOR MEDICAL ARTICLES

isaipriyanka.wordpress.com FOR ECONOMICAL ARTICLES

kitchapacha.wordpress.com FOR CURRENT AFFAIRS

kaviazhaku.wordpress.com FOR POLITICAL & SOCIAL ARTICLES

sarumathipappa.wordpress.com FOR STUDENTS

devadharsinivinayagam.wordpress.com FOR AUTOMOBILE

shanthivinayagam.wordpress.com FOR WOMEN

kaviazhakuvinayagam.wordpress.com FOR AGRICULTURE

alagusundari.wordpress.com FOR SPIRITUAL