சொல்வதெல்லாம் பொய்யல்ல… ( திங்கள் தோறும் )

I555எழுத்தாளர் சுஜாதா தன் கட்டுரை ஒன்றில் கூறுகிறார், ” பொய் மட்டும் இல்லையெனில் வணிக உலகம் முற்றிலும் ஸ்தம்பித்து போகும்… நன்றாக சிந்தித்து பாருங்கள்… தரம் – லாபம் – வணிக போட்டி – சந்தை சாதுர்யம் – வணிக இலக்கு அடைதல் – எல்லாம் யூக நியாயம் , அதாவது உண்மைகளின் மாய தோற்றம். இப்போது சொல்லுங்கள் , வணிகம் என்பது பொய்களின் கூட்டு உருவம்தானே… “. இது உண்மைதானே !
சங்கர்ராமன் ஆச்சர்யத்துடன் கேட்டார், ” எப்படி சார் காது கேட்காதவங்க ஊருல போயி சிடி பிளேயர் வித் ஹெட் போன் விக்கறது ? விளையாடாதீங்க சார்..” என்றார்.
பரசுராமன் , ” … சங்கர்… ஒரு விசயம் சொல்றேன்… மனுசன் தன்னுடைய குறைபாடுகளை – பலவீனங்களையும் மறைக்கிறதுக்குத்தான் அதிகமா மெனக்கிடுவான்… தனக்கு காது கேட்காதுங்கற குறை தெரியாம மறைக்கறதுக்குக்காக – தனக்கு இல்லாட்டியும் மத்தவங்களுக்கு சிடி பிளேயரை பரிசா கொடுக்க சொல்லி விற்கலாம் இல்லையா ? எப்படி ஐடியா ? ”
“..ரியலி குட் சார்… ” என்றார் சங்கர்.
“.. சங்கர்… சத்து மாவு தின்னா மட்டுமே மூளை வளருமா ? புத்தி கூர்மையாகுமா ? பரிட்சையில முதல் மார்க் வாங்க முடியுமா ? இதல்லாம் ஆகனும்னா பயிற்சி செய்யனும் இல்லையா ? ஆனா ஹார்லிக்ஸ் தின்னா இதெல்லாம் நடக்கும்னு சொல்றது பொய் இல்லையா ? அதை விட கொடுமை, ஒரு விளம்பரத்துல ஒட்ட பந்தயத்துல ஒடுறவனுக்கு கடைசி நேரத்துல மூச்சிரைப்பு வந்தா வெற்றியை அடைய முடியாது, அதனால பூஸ்ட் குடிங்க … அப்டிங்கறான்.. கடைசி நேர மூச்சிரைப்பு தவிர்க்க பூஸ்ட் போதுமா ? ஆனா இப்படித்தான் சந்தை வணிக உத்திகள கையாள தெரியனும் சங்கர்.. ” சொல்லிவிட்டு காரை ஸ்டார்ட் செய்தார் பரசுராமன்.

சன் மார்கெட்டிங்க் அலுவலகம் …
பரசுராமன் தன் கேபினுள் சங்கர்ராமனோடு பேசி கொண்டிருந்தார்.
” … சங்கர்.. இதை பாருங்க… ” ஒரு நோட்டிசை காட்டினார்.
பேங்கிலிருந்து வந்திருந்தது. அந்த நோட்டிசில் இன்னும் ஒரு மாசத்திற்குள் பேக்டரிக்காக வாங்கின கடனை கட்ட சொல்லப்பட்டிருந்தது.
பரசுராமன் , ” .. சங்கர் இன்னும் 30 நாளுக்குள்ள பேங்கில பணம் கட்டணும். இல்லைனா பேக்டரி நடத்தறது சிரமம். ” என்றார் . தொடர்ந்து , “.. சங்கர்.. என்ன பிளான் பண்ணுவீங்க ? எப்படி செய்வீங்க தெரியாது ? ஆனா செஞ்சாகனும்.. ” என்றார்.
“… சார்… கட்டாயம் செஞ்சுரலாம் சார்… ஆனா நம்ம காம்பிடிட்டர் மூன் மார்கெட்டிங்க் இப்ப புதுசா ஒரு மார்க்கெட்டிங்க் பிளான் போட்டிருக்காங்க … அத மட்டும் நாம ஜெயிச்சிட்டோம்னா … நம்ம சேல்ஸ் டார்கெட் அடையறது ஈஸி சார்… ”
“.. அது என்னன்னு தெரியுமா ? அதை ஜெயிக்கறதுக்கு ஏதாவது பிளான் இருக்கா சங்கர் ?.. ”
” இருக்கு சார்… டிபன்சிவ் பேலண்ஸ் மெத்தெட் … ”
“.. அப்படின்னா… ? ” புரியாமல் கேட்டார் பரசுராமன்.
“… இராணுவம் யுத்தத்தின்போது கள ஊடறப்பு – CROSS FIRE – அப்படின்னு ஒரு போர் யுத்தி கையாள்வாங்க… அதாவது, இரு தரப்பு இராணுவத்துக்கும் துப்பாக்கி சண்டை நடக்கும்போது அதுல மாட்டிக்காம தப்பிச்சு எதிரி இடத்துக்குள்ள நுழையறது. ”
“இதை எங்க படிச்சீங்க சங்கர் ?… ”
“.. 1970 கள்ல அமெரிக்க பொருளாதாரம் உயர காரணமா இருந்த டார்வின் எஸ் ரிச்சர்ட் இந்த தியரியை பயன்படுத்திதான்.. அப்ப ஏற்பட்ட தொழிற் போட்டியை சமாளிச்சாருன்னு அவரோட ஹிஸ்ட்ரில படிச்சேன்.. சார்… ? ”
“.. அந்த தியரியை பயன்படுத்த போறீங்களா சங்கர் ? ”
“.. ஆமா… சார்…” உறுதியாய் சொன்னார் சங்கராமன்.
தொடரும் அடுத்த அத்தியாயம் 07 / 09 / 15

முந்தைய அத்தியாயம் படிக்க  CLICK HERE