ஜோரா நடக்குது சினிமா சண்டை!

எப்போதும் சண்டையும் சச்சரவுமாக இருக்கும் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தோடு சேர்ந்து, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் (ஃபிலிம் சேம்பர்) சண்டை பூமியாகிவிட்டது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை. வருடந்தோறும் ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவரை சுழற்சி முறையில் போட்டியின்றி தலைவராகத் தேர்ந்தெடுப்பதும், பிற பதவிகளுக்குத் தேர்தல் மூலம் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதும் வழக்கம். இங்கே உறுப்பினர்கள் நேரடியாக ஓட்டுப் போட வேண்டியது இல்லை. ப்ராக்ஸி முறையில் வாக்களிக்கலாம். அதாவது, இவருக்கு ஓட்டுப் போடுகிறேன் என்று வாக்காளர்கள் கடிதம் கொடுத்து அனுப்பினாலே போதும்.

இப்போது தலைவர் பதவிக்கே குடுமிப்பிடிச் சண்டையில் இறங்கிவிட்டது ஃபிலிம் சேம்பர். இந்த முறை கேரள சினிமாவுக்கு வாய்ப்பு என்பதால், அவர்கள் சார்பில் செவன் விஜயகுமார் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து சசிகுமார் நின்றார். ‘இருவரில் ஒருவர் போட்டியில் இருந்து விலகுங்கள்’ என்று கேரள திரைத் துறையினர் கெஞ்சினர். இருவரும் நோ சொல்ல… வேறு வழியில்லாமல் இரண்டு நபர்களையும் ரெகமென்ட் செய்தது.

இதற்கிடையில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், ‘தமிழ் தயாரிப்பாளர்களுக்கு ஃபிலிம் சேம்பரில் முக்கியத்துவம் தருவதே இல்லை. அதனால், சேம்பர் தேர்தலை தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் புறக்கணிக்கும்’ என்று கொந்தளித்தார்.

‘தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பிரமாண்ட கட்டடத்தில் தெலுங்கு, மலையாள, கன்னட திரைப்படத் துறையினர் தலா 3,000 சதுர அடிகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால், தமிழ் திரைப்படத் துறையினருக்கு 10 ஆயிரம் சதுர அடிகளை ஒதுக்கியிருக்கிறோம். இது போதாதா?’ என்று பதிலுக்குப் பாய்ந்தார் ஃபிலிம் சேம்பர் தலைவர் கல்யாண்.

27-ம் தேதி நடந்த ஃபிலிம் சேம்பர் தேர்தலில் தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தினர் தடாலடி பல்டி அடித்தனர். கேயார் ஆதரவாளர்கள் சிலரைத் தவிர, பெரும்பாலான தமிழ் தயாரிப்பாளர்கள் தேர்தலில் வாக்களித்தனர். சங்கத் தலைவராக சசிகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்னொரு புறம், தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சண்டை உச்சத்தில் இருக்கிறது. கேயார் அணியில் இருந்த துணைத் தலைவர் டி.சிவா, பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் இப்போது தாணு அணியில் இருக்கின்றனர். தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே முதன்முறையாக நிர்வாகத்தில் இருப்பவர்களே தங்கள் அமைப்பின் மேல் மே 11-ம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகிறார்கள்.

ரீல் சினிமா சண்டையைவிட இந்த ரியல் சினிமா சண்டை ஜோராத்தான் களைகட்டுது!

நன்றி விகடன்

FOLLOW OUR BLOG VIA MAIL TO GET UPDATES NEW ARTICLES @ YOUR INBOX

VISIT OUR GROUP OF DOMAINS
EDITOR – www.tamilagamtimes. com
CONTACT : tamilagamtimes@post.com
knowledgeocean2014.blogspot.com FOR E BOOKS IN 75 SUBJECTS

madhuvanthana.wordpress.com FOR ENTERTAINMENT ARTICLES

yazhinimaran.wordpress.com FOR MEDICAL ARTICLES

isaipriyanka.wordpress.com FOR ECONOMICAL ARTICLES

kitchapacha.wordpress.com FOR CURRENT AFFAIRS

kaviazhaku.wordpress.com FOR POLITICAL & SOCIAL ARTICLES

sarumathipappa.wordpress.com FOR STUDENTS

devadharsinivinayagam.wordpress.com FOR AUTOMOBILE

shanthivinayagam.wordpress.com FOR WOMEN

kaviazhakuvinayagam.wordpress.com FOR AGRICULTURE

alagusundari.wordpress.com FOR SPIRITUAL