“தி.மு.க. அட்டாக்கை பத்திரமாக வைத்திருக்கிறார்கள்”

ன்று பொட்டு சுரேஷ் கொல்லப்பட்ட இரண்டாம் ஆண்டு தினம். இன்று பொட்டுவின் குடும்பம் ஏதாவது சொல்வார்கள் என்று எதிர்பார்த்த ஊடகங்களுக்கு பெருத்த ஏமாற்றம்! [wysija_form id=”1″]

நேற்று மதுரையில் அழகிரி பிறந்தநாள் விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்தினார்கள் அவருடைய ஆதரவாளர்கள். மதுரையே கொண்டாட்டமாக இருந்தது.
”தன் பிறந்த நாளை அழகிரி கொண்டாடிவிட்டுப் போகட்டும்… தப்பில்லை. ஆனால், ’என் நண்பனை இழந்து விட்டேன்’ என்று அன்று கண்ணீர் சிந்திய அழகிரி, அந்த நண்பனுக்காக என்ன செய்திருக்க வேண்டும். சிறிய அளவில் ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டரோ அல்லது பத்திரிகையில் சிறிய  அறிக்கையோ கொடுத்திருக்க வேண்டும். அல்லது பொட்டு சுரேஷ் வீட்டுக்குச் சென்று, அவர் குடும்பத்தாரிடம் ஆறுதலாவது  சொல்லியிருக்க வேண்டும். எதையும் செய்யவில்லையே? அரசியலில் நட்பு என்பது உயிரோடு இருக்கும்வரைதான் என்பதற்கு இந்த காட்சிகளே உதாரணம்” என்று வருத்தம் படர சொல்கின்றனர் பொட்டு சுரேஷ் தரப்பினர்.

இன்று பொட்டு சுரேஷ் வீட்டில், சிறிய அளவில் வருடாந்திர நினைவு சடங்குகளை நடத்தியுள்ளனர். பொட்டுவுக்கு இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி. அண்ணன் ஒருவர் மனித உரிமை கழகம் நடத்தி வருகிறார். தம்பி வழக்கறிஞராக உள்ளார். ஓரளவு செல்வாக்குள்ள அவர்களால்கூட, தங்கள் சகோதரர் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணமான முக்கியப் புள்ளிகளைக் கைது செய்யுங்கள் என்று சத்தமாகவும் சொல்ல முடியவில்லை. சட்டப்படியும் சொல்ல முடியவில்லை. பல நிர்பந்தங்கள் அவர்களுக்கு. ‘ஆண்டவனின் தண்டனையில் இருந்து கொலைக்காரர்கள் தப்ப முடியாது என்று மட்டும் சொல்லி வருகிறார்களாம்.
இதற்கிடையே, அட்டாக் பாண்டி வெளிநாட்டில் இருப்பதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. இலங்கைக்கு கள்ளத்தனமாகச் சென்று அங்கிருந்து மலேஷியாவில் செட்டிலாகிவிட்டார் என்கிறார்கள். இன்னொரு தரப்போ, ‘அவர் இந்தியாவில் இருக்கிறார். அவர் போலீஸுடம் தொடர்பில்தான் இருக்கிறார். இதன் பின்னணியில் அரசியல் லாபம் உள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அட்டாக் கைது செய்யப்படுவார். அப்போது அவர், தி.மு.க.வைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளைக் கைகாட்டுவார்.  அப்போது அதனால் தி.மு.க.வே கலகலத்து போகும். அதைத் தீர்க்க பெரும் சட்ட போராட்டம் நடத்த வேண்டிய நிலை தி.மு.க.வுக்கு வரும். அது தி.மு.க.வுக்கு தேர்தலில் பின்னடைவை தரும். இந்தத் தொலைநோக்கு திட்டத்தில் அட்டாக்கை பத்திரமாக வைத்திருக்கிறார்கள்” என்று புதிய கதை ஒன்றைச் சொல்கிறார்கள்.
 [wysija_form id=”1″]
இதுவரை அட்டாக் பாண்டியின் தனிப்பட்ட விரோதம்தான் கொலைக்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்த போலீஸார், 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், இன்று வரை அட்டாக் பாண்டியை போலீஸால் நெருங்க முடியவில்லை. தலைமறைவான அட்டாக் பாண்டியைக் கைது செய்யும் எண்ணத்தில் எடுக்கப்பட்ட எந்த முயற்சிகளுக்கும் பலன் கிடைக்காததால், அவரின் சொத்துகளையும், வங்கிக் கணக்கையும் முடக்கிய போலீஸ், கடந்த ஆண்டு மே மாதம் நீதிமன்றம் மூலம் தேடப்படும் குற்றவாளியாக அட்டாக் பாண்டியை அறிவித்தது. அதற்குப் பின் எந்த மூவ்மெண்டும் இல்லை.
அட்டாக்கைப் பிடிக்க பத்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இப்போது அந்தப் படைகள் சைலண்டாகி விட்டன. வழக்கு விசாரணையை முடிக்க முடியாமலும், தொடர முடியாமலும் போலீஸ் விழிபிதுங்கி இருக்கிறது.
அரசியல் கொலைகளின் இறுதி நிலை இதுதான் போலிருக்கிறது.[wysija_form id=”1″]