தி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி  (திடீர் தொடர் ஆரம்பம்)

தி.மு.கவின் முக்கியமான  இரண்டாம் கட்ட தலைவர் மறைந்த திரு.நாஞ்சில் மனோகரன் எழுதிய தலைப்புதான் “கருவின் குற்றம்”.

இதை எழுதியதற்காகத்தான்  அன்றைக்கு தி.மு.க விலிருந்து  வெளியேற்றப்பட்டார். ஆனால், இன்றைக்கு தி.மு.க விலிருந்து வெளியேற்றப் பட்ட பின்பு அதே தலைப்பை எழுதிகிறார் ஒருவர். தி.மு.க வின் குழுவிலிருந்து உருவாக்கப்பட்டவர்தான். அவர் யார்? அவர் கூற வரும் “கருவின் குற்றம்” என்ன?  அவர் யார் என்பதை இந்த தொடரின் முடிவில் அறிவீர்கள் அல்லது இந்த தொடரை வாசிக்கும்போது உணர்வீர்கள். இனி தொடருக்குள் செல்வோம்..

தி.மு.க – வின் கரு என்பவர் யார்? அல்லது கரு எது? தி.மு.க-வின் கருவாய்  கருதப்படுபவர்கள் பெரியார்-அண்ணா.

பெரியாரின் சித்தாந்தங்களும் அண்ணாவின் கொள்கைகளும் தி.மு.க வின் கருவாக கருதப்படுகிறது.  

இது  உண்மையா? என்றால் , இல்லை. இது உண்மை என்று கருணாநிதியால் இருதய சாந்தியோடு கூற முடியுமா?

ஒரு இயக்கம், அரசியல் கட்சியாக  மாற்றப்படும் போது, ஏற்படும் கொள்கை துறவுகளோடு உருவானதுதான் அண்ணா உருவாக்கிய தி.மு.க.., இதுதான் முதன் முதலில் “கருவில் ” ஏற்பட்ட குற்றம்.

அண்ணாவிற்கு பிறகு கட்சியின் தலைமை  இடத்தை கைப்பற்றி பதவி அகம் காணவும். பதவியின் மூலம் பணம் ஆதாயம் தந்திரங்களைப் போல -புறச் சூழலின் எதிர்வினைக்கான சாதகமாக்க தலைமை இடத்தை அடைத்தது “ கருவின் குற்றம்  ” இல்லையா?

பெரியாரின் சித்தாந்தகளான சாதி ஒழிக்கப்பட்டதால் பெண் உரிமை மீட்க பட்டதா? சமூக நீதி சாத்தியமானதால் குறைந்தபட்சம் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி கிடைத்ததா?

கடவுள் மறுப்புக் கொள்கையும் -பகுத்தறிவுக் கொள்கையும் இரு திசைகளின் விசை அல்லவா? இரு  வேறு விசை திறன்களை ஒரே திசையில் செலுத்தியது “கருவின் குற்றமில்லையா ?” எப்படி?

(தொடரும்…)