நகங்கள் இரவில் வளர்கிறதா… பகலில் வளர்கிறதா?”

[wysija_form id=”1″]

DOWNLOAD BOOKS http://tamilagamtimes.com/?post_type=product

இந்திய ரூபாய்களில் காந்தியின் உருவம் எப்போது முதல் வெளியிடப்படுகிறது?”

– கே.ஆர்.புஷ்பாகரன், தஞ்சாவூர்.

”1969-ம் ஆண்டு, மகாத்மா காந்தியின் நூற்றாண்டுப் பிறந்தநாள் வந்தது. அதன் நினைவாக, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்களில் அவரது உருவம் வெளியானது. ஒரு மேடையில் அமர்ந்து புத்தகம் படிப்பது போல காந்தியின் உருவம் இருக்கும். பிறகு, 1987-ம் ஆண்டு 500 ரூபாய் தாளில் அவரது மார்பு அளவு உருவப்படம் வெளியிடப்பட்டது. பிறகு, 1996 முதல் படிப்படியாக அனைத்து ரூபாய் தாள்களிலும் காந்தியின் உருவம் இடம்பெற்றது. இதில் உள்ள காந்தியின் அழகுச் சிரிப்பு முகம், 1946-ம் ஆண்டு, இந்தியாவின் மாநிலச் செயலாளராக இருந்தவர், லார்ட் பெத்திக் லாரன்ஸ் (Lord Pethick Lawrence). அரசியல் விஷயமாக காந்திஜி அவரைச் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தில் உள்ள உருவத்தைத்தான், ரூபாய் தாள்களுக்குப் பயன்படுத்தினார்கள்.”

”நகங்கள் இரவில் வளர்கிறதா… பகலில் வளர்கிறதா?”

– பி.இனிஷ்குமார், கோடேபாளையம், ஈரோடு.

”பகல், இரவு என ஷெட்யூல் போட்டுக்கொண்டு நகங்கள் வளர்வது இல்லை இனிஷ். சாப்பிடும்போது, ஹோம்வொர்க் செய்யும்போது, கிரிக்கெட்டில் பேட்டிங் செய்யும்போது, தூங்கும்போது என ஒவ்வொரு செயலின்போதும் அது தனது வேலையைச் செய்துகொண்டிருக்கும்.  உடலில் உருவாகும் கெரட்டின் என்ற கழிவுப் பொருள்தான் நகங்களாக வெளியே வருகிறது. நகத்தின் உள்பகுதியில் இருக்கும் மேட்ரிக்ஸ் (matrix) என்ற பகுதிதான் நகத்தின் செல்கள் வளர்வதற்குக் காரணம். பொதுவாக, பெண்களைவிட ஆண்களுக்கு நகங்களின் வளர்ச்சி சற்று அதிகமாக இருக்கும்.”

‘ காண்டாமிருகத்துக்கு இருக்கும் கொம்பினால் என்ன பயன்?”

    – தா.நா.யோகஜெய், ராசிபுரம்.

”நமக்கு நகம் போலதான் காண்டாமிருகத்துக்கு கெரட்டின் வளர்ச்சியின் வெளிப்பாடாகக் கொம்புகள். காண்டாமிருகத்துக்குப் பிறந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு இந்தக் கொம்பு வெளிப்படும். நன்கு வளர்ந்த ஒரு காண்டாமிருகத்தின் கொம்பின் அளவு 25 சென்டிமீட்டர். தாவர உண்ணியான காண்டாமிருகம், புற்களையும் புதர்களையும் பிடுங்குவதற்கு இந்தக் கொம்புகளைப் பயன்படுத்தும்.”

புதைகுழிகள் எப்படி உருவாகின்றன?”

– கே.மனோன்மணி, ருத்திரியம்பாளையம்.

”மணல், சுண்ணாம்புக்கல், பாறை எனப் பல்வேறு அடுக்குகளால் ஆனது நிலப்பரப்பு. ஆறு போன்ற நீர்நிலைப் பகுதிகளில் உள்ள நிலப்பரப்பின் அடிப்பகுதியில், சுண்ணாம்புப் பாறைகள் அதிகமாக இருக்கும். மணல் பகுதியை ஊடுருவிச் செல்லும் நீரானது, இந்தச் சுண்ணாம்புப் பாறைகளை சிறிது சிறிதாகக் கரைக்கும். ஆண்டுக்கணக்கில் இப்படி நிகந்து, அந்த இடத்தில் குழிகள் ஏற்படும். இவையே புதைகுழிகள். 6,000 மீட்டர் ஆழம்கொண்ட புதைகுழிகள்கூட உள்ளன. இது, பெரும்பாலும் இயற்கையாக நிகழ்வது என்றாலும், கனிமங்களை வெட்டி எடுப்பது, நீர்நிலைப் பகுதிகளில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் கட்டுவது போன்ற மனிதர்களின் செயல்களாலும் புதைகுழிகள் உண்டாகின்றன.”

‘நமது மூளையின் ஆச்சர்யங்களில் ஒன்றைச் சொல்லேன்”

– எம்.ருக்சனா, குன்னத்தூர்

”மனித மூளையின் ஆச்சர்யங்களைப் பட்டியல் போட்டால், நீளமாகஜீ போய்க்கொண்டே இருக்கும் ருக்சனா. ஒன்றே ஒன்றை மட்டும் கேட்பதால், நீளத்திலேயே சொல்கிறேன். 20 வயது ஆணின் மூளையில் இருக்கும் மெல்லிய நரம்பு இழைகளை நேராக வைத்தால்… அதன் நீளம், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கிலோமீட்டர் வரும். அதுவே, பெண்ணின் மூளை நரம்பு இழைகள் என்றால், ஒரு லட்சத்து 49 ஆயிரம் கிலோமீட்டர் இருக்கும்.”

WE ARE TAMILAGAMTIMES PUBLISHERS
YOU CAN DOWNLOAD BOOKS FROM FOLLOWING CATEGORIES
accounting-finance
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=accounting-finance

career-study-advice
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=career-study-advice

career-management-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=career-management-books

communication-presentation-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=communication-presentation-books

engineering-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=engineering-books

engineering-for-professionals
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=engineering-for-professionals

entrepreneurship-small-business
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=entrepreneurship-small-business

it-management-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-management-books
it-programming-computer-science-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-programming-computer-science-books

language-learning-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=language-learning-books

management-strategy-development
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=management-strategy-development

marketing-sales
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=marketing-sales

natural-sciences-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=natural-sciences-books

office-programs-software
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=office-programs-software

personal-development-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=personal-development-books

statistics-mathematics
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=statistics-mathematics