நந்தினியும் மெழுகுவர்த்தியும் ( சனிக்கிழமை தோறும் )

Image result for melting candle with ladyதன் கதையை சொல்ல ஆரம்பித்த வசுந்தராவை கண் இமைக்காமல் பார்த்தாள் நந்தினி.

வசுந்தராவின் மூச்சு காற்றில் ஒரு கனமான அடர்த்தி இருந்தது. அவள் தன் கதையை சொல்ல ஆரம்பித்தாள்.

“… வாழக்கையின் ஒவ்வொரு தருணனும் தன்னுள்ளே சுவாரசியங்களை சுமந்து வரும் இல்லையா… அப்படித்தான் என் வாழ்க்கையிலும் சில தருணங்கள் .. அதை சுவாரஸ்யமாக்கறதும் – சுவையாக்கறதும் நாம அந்த வாழ்க்கையை வாழ்றதுல இருக்கு … இல்லையா ? … ”
சொல்லிவிட்டு நந்தினியையும் – நரேனையும் பார்த்தாள். இருவரும் தலையாட்டினர்.
“… நந்தனத்துல இருக்கிற ஒரு தனியார் கம்பெனியில நான் ரிசப்சனிஸ்ட் – கம் – எம்டியோட பிஏ வா வேலை பார்த்துட்டு இருந்தேன். அங்கதான் நான் விஜயை சந்திச்சேன். எங்க கம்பெனி ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனிங்ருதால, ஒரு எக்ஸ்போர்ட்டரா எங்க கம்பெனிக்கு வருவார். எம்டியோட பிஏ – ங்கறதால விஜய் என்னோட பேசுற வாய்ப்பு அதிகமா இருந்துச்சு. … ”
“… வேலைக்கு போற எல்லா பெண்களுக்கும் இருக்குற அதே மனோபாவம்தான் எனக்கும் இருந்துச்சு… ஒரு ஆணின் பார்வை பரிச்சயம் பட்டவுடன் என் பின்னங்கழுத்து வியர்த்தது… நான் வைச்சுருந்த மல்லிகையோடு என் பின்னங்கழுத்து வியர்வையும் சேர்ந்து ஒரு வித புது மணம் வர்றதா விஜய் சொன்னப்ப .. அவர் குரல்ல இருந்த இசை மயக்கம் என்னை மயக்கிச்சு… ”
ஒரு குரல் இசையாக மயக்குவதும் – அதில் மயங்கி மனவொளி உருகுவதும் மனித இயல்புதானே.
“.. மனசுக்குள்ள காதலுக்கான மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சுது… பஸ்சுல கூட்டம் அதிகமா இருந்தாலும், மனசுக்குள்ள வியர்க்கலை… போக வேண்டிய இடத்துக்கு இரண்டு முறை டிக்கெட் வாங்கினேன்… இப்படி இன்னும் நிறைய … ”
நந்தினி கேட்டாள், “.. விஜய்கிட்ட காதலை எப்படி சொன்னீங்க வசுந்தரா ? ”
‘..அது ஒரு சுவாரஸ்யமான தருணம்… “.. வாடகை மலராக இருந்தாலும் , நறுமணம் உண்மைதானே. வசுந்தராவின் முகத்தில் வெட்கம் கன்னங்களில் குவிந்திருந்தது.

தொடரும்… அடுத்த அத்தியாயம் 05 / 09 / 15
முந்தைய அத்தியாயம் படிக்க CLICK HERE

———————————————————–