நமக்குள் நாம் யார் ? WHO AM I INSIDE ? – 1

ஒரு ஆழ்மன அகழ் ஆய்வு !

கடவுள் நம்பிக்கை – பகுத்தறிவு கொள்கை என இரு பிரிவிற்கும் ஏற்ற நம் பண்டைய ஞான நூல்களின் தொகுப்பு கட்டுரையாக நம் இதழில் வெளிவருகிறது .
இயற்கையின் அற்புதமானதும் – நுணுக்கமானதுமான படைப்பு மனித உடல் . அதில் சூட்சுமாய் இயங்கும் நம் மனம் மற்றும் நம் மூளை பற்றி அறியச்செய்யும் பல அற்புதமான நூல்கள் நம் தேசத்தின் அபகரிக்க முடியாத சொத்துக்களாய் இன்றும் நம்மிடையே உள்ளன . நம் உடல், ஆழ் மனம் கொண்டு இயங்குகிறதா அல்லது மூளையின் கட்டுப்பாட்டில் உள்ளதா ? அல்லது இரண்டும் காரணமா ?

மூளை அறிவாக எப்போது மாறுகிறது ? நாம் பரிமாண அறிவை கொண்டு செயல்படுவதா அல்லது மனதின் கட்டுப்பாட்டிற்குள் இயங்குவதா ? நம், இந்திய சிந்தனை சார்ந்த ஞான மரபு எதையும் ‘ இப்படி செய் ‘ – ‘ அப்படி செய் ‘ என ஆணையிடுவதில்லை . ஏனென்றால் , கடவுள் – உருவம் – வழிபாடு – மதம் சார்ந்து சிந்திக்கும் ஒழுக்க முறை என வாழும் ஒரு கூட்டமும் , காரண காரியங்களை ஆராய்ந்து விளைவுகளின் பாதிப்பு அளவுகளை ( DETERMINATION A EFFECT OF CONSEQUENCES ) அடிப்படையாக கொண்டு சிந்திக்கும் கூட்டமும் கலந்து சிந்தனை சுதந்திரத்தோடு வாழும் தேசம் இது .

ஞான மரபு வழி சிந்தனைகளும் – ஆழ் மன ஆராய்வு கொண்டு அதனடிப்படையில் வாழும் வாழ்க்கை முறையை உலகிற்கு அறிமுகப்படுத்திய நம் தேசத்தின் இன்றைய நிலை என்ன ? அறிவு சார் வளம் கொண்ட மக்கள் வளம் எங்கே போனது ?
நாம் வாழ்க்கையை உண்மையாகத்தான் வாழ்கிறோமா ? எப்படி ஆராய்வது ?

இலட்சியம் – கண்ணியம் – நேர்மை – ஒழுக்கம் என மானுட விதிகளை கொண்டு வாழ்வோரும் – அதை மீறி வாழ்வோர் என எல்லோருக்கும் மனம் ஒரே அடிப்படையிதான் இயங்குகிறதா ?
இந்த மனம் கொண்டு என்னென்ன செய்யலாம் ?
உடல் – அறிவு – ஆழ்மனம் ? எப்படி இயங்கிறது ?

அகழாய்வு தொடரும் …..

THIS ARTICLE COMES IN ENGLISH @tamilagamtimes.blogspot.com as ‘ HOW TO CALL IT ‘