நம் மனதில் உள்ள ‘ கருப்பு பெட்டி ‘ ( INNER MIND’S BLACK BOX )

விஞ்ஞானத்தின் அடுத்த தலைமுறை புரட்சி .

நாம் பொதுவாக கேள்விபட்டிருப்பது , விமானத்தில் உள்ள கருப்பு பெட்டி . விமானம் பறக்கும்போது விமானத்திற்குள் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் துல்லியமாக இந்த பெட்டிக்குள் பதிவாகிவிடும். விமானிகளின் உரையாடல் – பயணிகளின் நடவடிக்கைகள் என அனைத்தும் பதிவாவதால் , விமானம் ஏதேனும் விபத்துக்குள்ளானால் அதற்கான காரணத்தை மிகச்சரியாக கண்டறிய பயன்படும் .

அது போல் நம் மனதிற்குள் நிகழும் எண்ணங்கள் – உதிக்கும் ஆலோசனைகள் – மூளையின் செயல்பாடு – நாம் சொல்லாமல் மறைத்த வார்த்தைகள் என அனைத்து செயல்பாடுகளையும் நம் மனதிற்குள் இருக்கும் ஒரு ‘ கருப்பு பெட்டி’ – க்குள் பதிவாகும் . அதிலுள்ள பதிவுகளை நம் ஆழ்மனம் உணர்ந்துதான் நம் வாழ்வின் வெற்றி – தோல்விகளை – நம் செயல்பாடுகளை தீர்மானிக்கும் . தீவிரவாதிகள் முதல் கோவிலில் அர்ச்சனை செய்பவர் வரை அனைவரது மனமும் அவரவர் மனதிலுள்ள கருப்புபெட்டி ரகசியங்களை கொண்டுதான் இயங்குகின்றன .

சரி , அப்படி ஒருவர் மனதிலுள்ள ‘ கருப்பு பெட்டி ‘ பதிவுகளை நாம் அறிய முடியுமா என்றால் , சாத்தியம்தான் என்கிறது உளவியல் . நிரூபிக்கப்பட்ட சான்றுகளுடன் இந்த அறிவியல் அதிரடித் தொடர் ஆரம்பம்…

ரகசியங்களை கண்டறிவோம்…..

editor@tamilagamtimes.com