நம் வாழ்வு நிறைகிறது ; ஆனால் நாம் நிறைவடைந்தோமா ? அப்படியென்றால்….

என் பேச்சை என் பிள்ளைகள் கேட்பதில்லை , ஏன் ? என்னை என் கணவர் / மனைவி ஏன் புரிந்து கொள்வதில்லை ? தீடிரென்று நண்பன் ஏன் புரியாமல் நடந்து கொள்கிறான் ? நம் பெற்றோர் நம்மை புரிந்துகொள்ளவேமாட்டார்களா? இது போன்ற புரிதல் குறைபாடு நமக்குள்  நம்மை சுற்றி ஏன் நடக்கிறது ?   இதுதான் நாம் நிறைவடையவில்லை என்பதை உணர்த்தும் உணர்வுகள் .

நம்மிடம் உள்ள மிகப்பெரிய ‘ஆக்க சக்தி உலை ‘ எது தெரியுமா ? நம் ஆழ் மனம் . நம் , வேதியல் மூலக்கூறுகள் கொண்ட பௌதீக மூளைக்கு  தேவையான  சக்தியும் ஆழ்மனதிலிருந்துதான் பெறப்படுகிறது.

பிரார்த்தனை போன்ற நேர்மறை சிந்தனை வடிவம் மூலம் நமக்கு மறுப்பு இல்லாத சுய உதவிகள் கிடைக்கும் . ஆனால் , நம் ஆழ் மனதிலிருந்து அந்த சக்தியை பெறும் பயிற்சி நம் பௌதீக மூளைக்கு வேண்டும் . அந்த பயிற்சிதான் நம் மதங்களில் வழிப்பாட்டு முறைகளாக உருவாக்கம் பெற்றது .

நம் பிரார்த்தனைகளால் நம் மூளை எங்ஙனம் சக்தி பெறுகிறது தெரியுமா ? பிரார்த்தனைகளை நம் மூளை எப்படி புரிந்துக் கொள்கிறது ? அதனை உடல் உழைப்பாக மாற்றும் ரகசியம் எப்படி நிகழ்கிறது ?

நம்மூளையை நாம், நம் எண்ணங்களை – நம் எண்ணங்களின் தாக்கங்களினால் உருவான வாழ்வியல் இலக்குகளை உருவாக்குவதிலும் , கால சுழற்சிக்கு தகுந்தாற்போல் உருமாற்றம் செய்யவும் மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். இதன் மூலம்  நம்மை நாம் ஏமாற்றுவதில் சாமர்த்தியம் மிக்கவர்களாக தேறிவிட்டோம் . மனிதனின் அறிவியல்  நாகரீக முன்னேற்றம் அவனை அவனிடமிருந்து வெகுதூரம் பிரித்தெடுத்து ‘அக வளர்ச்சி ‘ (EVALUATION OF SUB CONCIOUS  )இல்லாமல் செய்துவிட்டது .

விமானத்தின் அறிவியல் நுட்பம் தெரிந்த நமக்கு , விமான நிலையம் அமையும் போது அழிக்கப்படும் இயற்கை வளங்களை பற்றிய உயிரியல் நுட்பம் அறியாமல் போனதல்லவா ? ஒன்றை இழந்து மற்றொன்றை பெறும் வாழ்வியல் தர்க்க சமன்பாடுகளை தோற்றுவித்து, அதில் திருப்தியோடு வாழ கற்றுக் கொண்டோம்.

மண்புழுக்களை , உழவனின் நண்பன் என நாம் அழைப்பதுண்டு ; ஏனென்றால், விளை நிலத்தில் மண்சத்துகளோடு விதைகளின் மூலக்கூறுகள் கலக்கும் வண்ணம் மண்ணிற்கு தற்காலிக நெகிழ்வுத் தன்மை ஏற்படுத்துவது மண் புழுக்கள்தான் . நம் பிரார்த்தனைகள் நம் மூளைக்குள் ஏற்படுத்தும் கிரகிப்பு தன்மையும் இது போல்தான் .

பிரார்த்தனைகள் வாழ்வின் அதிசயங்களை இப்படித்தான் உருவாக்கும் . மூளையின் உள்ளியக்க செயல்பாடுகள் இப்படித்தான் உருவாகும் .

மூளையின் உள்ளியக்க செயல்பாடுகள் என்றால் என்ன ?

அடுத்த சந்திப்பில் அலசுவோம்….

இது குறித்த சந்தேகங்களுக்கு..தொடர்பு கொள்ள  editor@tamilagamtimes.com