‘நாங்க போலீஸ்… குமாரைப் பார்க்கணும்…!”

[wysija_form id=”1″]

DOWNLOAD BOOKS http://tamilagamtimes.com/?post_type=product

சிதம்பரத்தை மட்டுமல்ல… ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது அந்த இரட்டைக் கொலை.

கடந்த 2-ம் தேதி அதிகாலை, சிதம்பரம் கலுங்கு மேட்டுத் தெருவில் உள்ள குமார் என்பவர் வீட்டுக்குள் புகுந்த கும்பல், கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாக வெட்டியிருக்கிறது.

குமார் மற்றும் அவரது தம்பி ராஜேஷ் ஆகிய இருவரின் தலைகளைத் துண்டித்து அண்ணாமலை நகர் மருத்துவமனை கேட்டுக்கு இருபக்கமும் ஒவ்வொரு தலையாக வைத்துவிட்டு சென்றது. கஜேந்திரன், பட்டாபி, சிவமணி, பத்தாயிரம் ஆகியோர் ‘கொலையை செய்தது நாங்கள்தான்’ என்று போலீஸில் சரணடைந்துள்ளனர்.

சிதம்பரம் ஏரியாவில் பிரபலங்களாக வலம் வந்தவர்கள், மணல்மேடு சங்கரும், மண் ரோடு சந்திரனும். மண் ரோடு சந்திரன் விபத்தில் இறந்துபோக, மணல்மேடு சங்கரை மட்டும் என்கவுன்டரில் போட்டது போலீஸ்.

சந்திரன் இடத்துக்கு வந்தவன்தான், சந்திரனின் தம்பி ஹரி. இவர்களது நெட்வொர்க், திண்டுக்கல் பாண்டி, புதுவை தட்டாஞ்சாவடி செந்தில், கொள்ளிடம் சத்தியா, சிதம்பரம் சுரேந்தர் என தமிழகம் முழுவதுமே விரிந்திருந்தது. மணல்மேடு சங்கருக்குப் பிறகு இப்போது தலை தூக்குபவன்தான் கலுங்குமேடு குமார். இவனுக்கு உறுதுணையாக இருந்தவன்தான் தம்பி ராஜேஷ். ஹரியும், குமாரும் அடிக்கடி மோதிக்கொண்டனர்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஒரு கட்டத்தில் ஹரி, குமாரை போட அவனுடைய ஏரியாவுக்குள்ளேயே நுழைந்தான். அப்போது குமாரிடம் மாட்டிக்கொண்ட ஹரியை, காலை உடைத்துத் துரத்திவிட்டான் குமார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஹரி, தற்கொலை செய்துகொண்டான். ஹரியின் இடத்துக்கு வந்தான் அவன் நண்பனான சுரேந்தர். நண்பன் சாவுக்குக் காரணமான குமாரை போட்டே தீருவேன் என்று, திண்டுக்கல் பாண்டியின் வலதுகரமான மோகன்ராமை சிதம்பரம் கொண்டுவந்தான் சுரேந்தர். குமாரைப் போட, கடந்த மே மாதம் 3-ம் தேதி நாள் குறிக்கப்பட்டு, அதற்காக மாரியப்பா நகரில் ஓய்வுபெற்ற அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் பன்னீர்செல்வத்தின் வீட்டில் நாட்டு வெடிகுண்டும் தயாரித்தனர். அப்போதுதான் வெடிகுண்டு வெடித்து மோகன்ராம் படுகாயமடைந்தான். இதற்கு உறுதுணையாக இருந்த சுரேந்தரையும் மோகன்ராமையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது போலீஸ். இந்த நிலையில்தான் இந்த இரட்டைக் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

குமாரின் வீட்டில் அழுது புரண்டுக்கொண்டிருந்த, குமாரின் மனைவி மஞ்சுளாவிடம் பேசினோம். ”காலையில மூணு மணி இருக்கும். திபுதிபுன்னு கும்பலா உள்ளே புகுந்தானுங்க. வீட்டு வாசல்ல படுத்திருந்தவங்க, ‘நீங்க யாரு’ன்னு கேட்டதற்கு, ‘நாங்க போலீஸ். குமாரைப் பார்க்கணும்னு சொன்னாங்க. பக்கத்திலிருந்த ரூமை கைகாட்டியதும் எங்க எல்லார் கழுத்திலேயும் கத்தியை வெச்சு, ஒரு ரூம்ல கொண்டுபோய் அடைச்சுட்டாங்க. ரெண்டு பேரையும் கத்தியால துடிக்கத் துடிக்க வெட்டி, தலையை எடுத்துகிட்டு, வெடிகுண்டை எங்க மேல தூக்கிப் போட்டுட்டு போயிட்டானுங்க” என்று தலையில் அடித்துக்கொண்டு கதறினார்.

”தலையை துண்டாக எடுப்பதும், பயமுறுத்த வெடிகுண்டு வீசுவதெல்லாம் திண்டுக்கல் பாண்டியின் ஸ்டைல். இதுவும் அப்படித்தான் இருக்கு. கடந்த நான்கு நாட்களுக்கு முன்னால் சிறையில் இருக்கும் சுரேந்தரிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மோகன்ராமும், சுரேந்தரும் இணைந்துதான் திட்டம் தீட்டி, சத்தியா மூலம் முடிச்சிருக்காங்க” என்கிறது காக்கி வட்டாரம்.

இந்தக் கொலைகள் குறித்து மாவட்ட காவல் கன்காணிப்பாளர் ராதிகாவிடம் பேசினோம். ”அந்த நான்கு பேரையும் விசாரிச்சுக்கிட்டு இருக்கிறோம். அவர்களின் வாக்குமூலத்தை வைத்து பார்க்கும்போது, சத்யா, சுரேந்தர் போன்ற பழைய ரவுடிகள்தான் வருகிறார்கள். வெகு விரைவில் இதில் சம்பந்தபட்ட அனைவரையும் கைது செய்துவிடுவோம்” என்றார்.

ரவுடிகள் அட்டகாசத்தை முடிவுக்குக் கொண்டுவருவது அரசின் கடமை.

WE ARE TAMILAGAMTIMES PUBLISHERS
YOU CAN DOWNLOAD BOOKS FROM FOLLOWING CATEGORIES
accounting-finance
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=accounting-finance

career-study-advice
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=career-study-advice

career-management-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=career-management-books

communication-presentation-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=communication-presentation-books

engineering-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=engineering-books

engineering-for-professionals
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=engineering-for-professionals

entrepreneurship-small-business
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=entrepreneurship-small-business

it-management-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-management-books
it-programming-computer-science-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-programming-computer-science-books

language-learning-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=language-learning-books

management-strategy-development
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=management-strategy-development

marketing-sales
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=marketing-sales

natural-sciences-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=natural-sciences-books

office-programs-software
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=office-programs-software

personal-development-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=personal-development-books

statistics-mathematics
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=statistics-mathematics