நானோ டெக்னாலஜி – விந்தை உலகம் – அத்தியாயம் 1

அறிவியலை பற்றி நாம் அறிந்து கொள்வதில் எப்போதுமே ஆர்வம் அதிகமாகவே இருக்கும். புரியும்படி சொல்ல வந்தால் படிப்பதும் சுவாரசியமாகும். என்றாலும் ஜோசியம் – கிரக பலன்கள் – சனிப் பெயர்ச்சி போன்ற விஷயங்களையும்  விட்டு வைப்பதில்லை. இவைகளிலிருந்து வெளிவந்து ‘ நானோ டெக்னாலஜி போன்ற மிக உச்சமான நவீன அறிவியலை விளக்கமாக – எளிமையாக வழங்கவே இந்த தொடர். நானோ டெக்னாலஜி நுட்பத்திலும் நுட்பமான ஏறக்குறைய அணுவின் மூலக்கூறு அளவுக்கு சிறிதுபடுத்தப்பட்ட விந்தை உலகம் பற்றிய தொடர் இது.

இனி தொடர்வோம்….

டாக்டர் அப்துல் கலாம் இந்தியாவை 2020 – க்குள் முன்னேறிய நாடாக்க வழிகாட்டியாக டெக்னாலஜியில் என்னென்ன செய்யவேண்டும் என்று தெளிவான பட்டியலிட்டார். அதில் முக்கியமான ஒன்று ‘ நானோ டெக்னாலஜி ‘ . இந்த முறைகளை பயன்படுத்தி  ‘சோலார்’ செல்களின் ஆற்றலை 15 % திலிருந்து 45 சதவிகிதமாக பத்து வருஷத்தில் உயர்த்துவதை ஓரு குறிக்கோளாக சொன்னார்.

இந்த எதிர்கால தொழில்நுட்பம் ஏறக்குறைய சைன்ஸ்ஃபிக்ஷனுக்கு அருகில் நம்மை கொண்டுசெல்லும் சாத்தியங்களைக் காட்டுகிறது. தானாகவே பாதிப்புகளை சரிசெய்து கொள்ளும் ஜீன்கள், பெட்ரோல் தயாரிக்கும் பாக்டீரியாக்கள், வயசாவதை தாமதப்படுத்தும் நவீன அம்ருத கலசம் போன்ற சாத்தியங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. இதில் எது நிகழும் – எது மிகை என்பதை நாம்தான் அறிய வேண்டும். இந்த தொழில் நுட்பத்தை நாம் அறிய தவறினால்… நாம் அரை மயக்க நிலையில் கிரிக்கெட் பார்த்து – நடிகைகளின் இடுப்பளவில் ஆழ்ந்து இருக்கும்போது , உலகம் நம்மை புறந்தள்ளிவிட்டு எங்கோ ஒடிப்போய்விடும். நானோ என்ற வார்த்தையை சற்று உன்னிப்பாக ஆராய முற்படுவோம்.

தொடரும்……

READ ENGLISH ARTICLES  tamilagamtiems.blogspot.com
CONTACT EDITOR FOR OLD ARTICLES FOR THIS SITE : editor@tamilagamtimes.com