நான் எங்கெல்லாம் என்னை தொலைத்தேன்….. தேடிப் பார்க்கிறேன்

என் வாழ்க்கை பிரயாண இலக்கு எனக்கே தெரியவில்லை என்பதால் நான் கடந்து வந்த பாதைகளில் என்னை எங்கு தொலைத்தேன் என ஞாபகப்படுத்துவதில் சற்று சிரமம் இருந்தது. என் அடையாளங்களை எல்லோரிடமும் பதிய வைக்க வேண்டும் என்பதற்காக,  – மற்றவர்களுக்கு பிரியமான சிறு சிறு அடையாள காகிதங்களை என் மீது ஒட்டி அதைக் கொண்டு மற்றவர்களிடம் என்னை பதிய வைக்க முயன்றேன். இயற்கை பரிணாமத்திற்கு பொருந்தாத வாழ்க்கை விதிகள் என்னை சரியாக அடையாளப்படுத்தவில்லை. 

பாதையில் என் பாதச் சுவடு தேடினேன்,எப்படியும் நான் தொலைந்த இடம் கண்டுபிடிக்கலாம் என நம்பினேன். மிக நுட்பமாய் நோக்கினேன். அட , என்ன சொல்ல , என் பாதம் பதிந்த இடங்களில் என் சுவடு இல்லை. வேறு எதனுடைய – யாருடைய சுவடுகள் இருந்தன. எப்படி நிகழ்ந்தது ? நான் பயணித்தது என்னில் இல்லை. வேறொரு உருவத்துக்குள் நான் பயணித்திருக்கிறேன். என்னை சுமந்து வந்தது வேறொரு உருவகம். எதற்கோ பயந்தோ அல்லது நான் எதுமாதிரியோ வாழ நினைத்து இன்னொன்றில் புகுந்து ; வெளி வர மறந்து விட்டேன். நன்றாக புரிந்தது எனக்கு. என்னை மற்றவர்கள் வேறு மாதிரி புரிந்துகொண்டது அவர்கள் தவறில்லை; புரிந்தது.

அகம் விழித்தது ; சுயம் தெரிந்தது.

READ tamilagamtimes.blogspot.com