நினைப்பபது ஒன்று நடப்பது ஒன்று

நடைமுறையில் பலருக்கு இப்படி நிகழ்வதுண்டு. நாம் எதையோ சொல்ல  அல்லது செய்ய நினைத்திருப்போம். ஆனால் விளைவு வேரொன்றாக இருக்கும். எதனால் இப்படி என்று ஒன்றும் புரியாது. இது நம்மையுமறியாமல் நடப்பது. இப்படி நடந்தற்காக பின்னர் வருந்துவோம். இதற்க்கு என்ன காரனம் இதனை எப்படி தவிர்ப்பது என்று யோசிக்கிறோம்.

இதனை சரியாகப் புரிந்துகொள்ளவும் இந்தக்கவலை மீண்டும் வராமலிருக்கவும் நாம் சில விசயங்களை சற்று ஆலோசிக்கலாம்.

நமது கனவு நிலையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொண்டால் இதற்கு விடை கிடைக்கும்

கனவு நிலையில் நம் மனதிற்குள்ளேயே எல்லா விசயங்களையும் நாமே உற்பத்தி செய்கிறோம். இந்த உலகம், மனிதர்கள்,செயல்கள் அதன் விளைவுகள் மற்றும் அதன் அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் நாமே சிருஷ்ட்டிக்கிறோம். பின்னர் தூக்கம் கலந்த பின் இது வெறும் கனவுதான் என்று அதனை பொருட்படுத்துவதில்லை.

இதைப்போலவேதான் நனவு நிலையிலும் நாமே எல்லா விசயங்களையும் சிருஷ்ட்டிசெய்துவிட்டு பின்னர் நாம் நினைத்தது ஒன்று நடந்தது வேறு என்று மிகவும் சலனப்படுகிறோம். கனவில் எப்படி நமக்கு சுதந்திரமில்லையோ அதுபோல நனவிலும் நமது எண்ணம் பேச்சு செயல் இவற்றிற்கு எந்த தொடர்புமில்லை. இதில் வினோதமென்னவென்றால், நாம் எண்ணங்களூக்கு செயல் வடிவம் கொடுக்கும்பொழுது இடைப்பட்ட காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிடும். இதனை மீண்டும் மீண்டும் ஆலோசித்தால் மட்டுமே புரிந்துகொள்ள இயலும்.

சிந்தனை – எழுத்தாக்கம் உயர்திரு. இரா. வேங்கிட கிருஷ்ணன் அவர்கள், சென்னை. – ( rvkrish2@gmail.com)