நுகரும் விசையும் – நகரும் மனமும்

நம் புலங்களின் நுகர்வு விசையில் மனம் புலம் பெயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பொருள் நுகர்வு – பெண் நுகர்வு – கருத்து நுகர்வு என நுகர்வுகள் நம் மனதை பற்றிக்கொண்டு பயணிக்கிறது. நம் அனுபவங்கள் , ஞாபகங்களாக மூளையில் இருந்து நுகர்வுகளின் நகர்வுகளை ஒழுங்குப்படுத்த முயலும்; நுகர்வின் வேகமும் , மூளையின் ஞாபகங்களின் உறுதியும் பொறுத்து விளைவுகள் அமையும். மூளையும் , மனமும் இணைந்தால் வாழ்க்கை பயணம் சிறக்கும் என்று எண்ண குவிப்பு தியானங்கள் உதித்தது. நுகர்வின் உந்து விசைக்கும் – புசித்தலின் ஈர்ப்பு விசைக்கும் இடையே நகரும் மனம் சார்ந்த வாழ்க்கையில், எப்படி எண்ண குவிப்பு தியானங்கள் தீர்வு தரும் ?

நுகர்தலின் அவசியத்தையும் , புசித்தலின் தேவையையும் நேர்மையாய் உணர்வதில்தான் நம் வாழ்வு நம் வசப்படும். கட்டுபடுத்தலும் – ஒழுங்குப்படுத்தலும் வேக அதிகரிப்புக்கு காரணிகளாகும்.

ஆயினும் நுகர்தலும் – புசித்தலும் நம் பாதத்தின் கீழ் நகரும் எறும்புக்கும் உண்டு. இரைதேடலிலும் – உயிர் விருத்தியிலும் அழிந்து போகும் அஃறிணைகள். நமக்கும் , எறும்புக்கும் வித்தியாசம் உண்டல்லவா ?

அவனி மாடசாமி