தமிழீழமும் – தனித் தெலுங்கானாவும் TAMIL EELAM & TELUNGANA

நெடுமாறன் – வைகோ – சீமான் ஆகியோருக்கு பகிரங்க வேண்டுகோள் !

ஓரே வீட்டில் வசிக்கும் சகோதரர்கள் தங்கள் சவால்களை தாங்களாகவே போராடி தீர்வு காண்பது என்பது ஒன்றுபட்ட குடும்ப அமைப்புக்கு ஏற்புடையதல்ல அல்லவா ? அதேபோல்தான் ஒருங்கிணைக்கப்பட்ட மாநிலங்கள் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு மாநிலத்தில் எழுந்துள்ள சவால்களை நாம் அந்தந்த மாநிலத்தின் பிரச்சனையாகவே நாம் காணும் மனப்பாங்கு நம்மிடையே நிலவுகிறது . இது நம் ஒருமைப்பட்டிற்கு நன்மையல்ல அல்லவா ?
ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பிரச்சனை ஊடங்கள் வாயிலாக மட்டுமே நம்மால் அறியப்படுகிறது ; அதுவும் எப்படி ? பல்கலைகழக மாணவர்கள் வன்முறை காட்சிகளாக – அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப்படும் காட்சியாக ஊடங்கங்கள் பதிவு செய்கிறது . மற்ற மாநில மக்கள் மட்டுமல்ல ஆந்திர மாநில சாமான்ய மக்களுக்கு கூட மிக சரியாக எடுத்துச்செல்லப்படவில்லை என்பதுதான் உண்மை .
தமிழ் நாட்டு மீனவர்கள் கடல் எல்லையில் தாக்கப்படுவது கண்டு இந்தியாவின் எந்த மாநில அமைப்பும் கூட இதுவரை கண்டித்து அறிக்கை வெளியிட்டதில்லை . நம் பிரச்சனைகளை நாம் மற்றவர்களிடம் கூறும்போதுதான் நம் பிரச்சனையின் பரிணாமம் நம் மனதிற்கு சில சமயங்களில் புரிய வரும் .  சர்வதேச அரங்கில் இலங்கை அதிபரை சர்வதேச போர் குற்றவாளியாக நிறுத்த நாம் செய்யும் முயலும்போது ஏன் இன்னும் நாம் அண்டை மாநிலங்களில் கூட நம்மால் ஆதரவு பெற முடியவில்லை ?
ஐயா நெடுமாறன் , மதிமுக தலைவர் வைகோ , சகோதரர் சீமான் இன்னும் இலங்கை தமிழர்களுக்காக குரல் தரும் ஆர்வலர்கள் ஏன் நம் அண்டை மாநில அரசியல் தலைவர்களிடம் ஆதரவு கோரவில்லை எனப் புரியவில்லை .
இலங்கை தமிழர்களுக்காக அண்டை மாநிலங்களின் ஆதரவு கேட்போம் ; அண்டை மாநிலங்களின் கோரிக்கைகளின் நியாயத்திற்காக நாம் குரல் குடுப்போம் .
ஒன்றுப்பட்ட ஆந்திரா அல்லது தனி தெலுங்கானாவின் நியாயங்களை எங்களுக்கு விளக்குங்கள் சகோதரர்களே ! எங்கள் துயரங்களுக்கு ஆதரவு தாருங்கள் !
உங்கள் கோரிக்கைகளின் நியாயங்களை எங்கள் இணையத்திலும் – எங்கள் பத்திரிக்கையான ‘ நமது வெற்றி ‘ – யிலும் வெளியிட்டு சர்வதேச அளவில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த நாங்கள் தயார் !
ஐயா நெடுமாறன் , மதிமுக தலைவர் வைகோ , சகோதரர் சீமான் அவர்களுக்கும் எமது வேண்டுகோள் ; தேசிய அளவில் நம் பிரச்சனைகளை முன்னெடுத்து செல்வோம் ; அதற்கு முதலில் அவர்கள் பிரச்சனைகளின் நியாயத்திற்கு செவிகொடுப்போம் .

EDITOR

READ OUR JOURNAL ‘ நமது வெற்றி  ‘ (‘ NAMATHU  VETRI  ‘ )