படம் பார்த்து படம் காட்டு!

[wysija_form id=”1″]உலகமே இப்போ யூடியூப் பார்க்க ஆரம்பித்து விட்டது. ‘ரொம்ப பேசுனா யூடியூப்ல போட்டுடுவேன்’ என ‘போலீஸைக் கூப்பிடுவேன்’ ரேஞ்சுக்கு மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள், மொபைலில் வீடியோ ஆப்ஷனும் நெட் கனெக்‌ஷனும் வைத்துள்ள இளசுகள். யூடியூபை வைத்து பணம் சம்பாதிக்கவும் தங்களுக்கென அடையாளத்தையும் உருவாக்கிக்கொள்ள முடியும் என நிரூபித்து வருகிறார்கள் பலர். கடந்த 2011லிருந்து தமிழ்நாட்டிலும் யூடியூப் பார்ப்பவர்கள் மற்றும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது என்பதனால்தான். இதன் மூலம் நீங்கள் வருமானம் ஈட்ட முடியும் என்பது தெரியுமா?  http://tamilagamtimes.com/?post_type=product

2005ல் ஒரு சுபயோக தினத்தில் கலிபோர்னியாவைச் சேர்ந்த  ‘பேபால்’ நிறுவன ஊழியர்கள் ஸ்டீவ் சென், சாட் ஹார்லி, ஜேவிட் கரீம் ஆகிய மூவர்தான் இந்தத் தளத்தை உருவாக்கியவர்கள். தாங்கள் மூவரும் ஜட்டி போட்டு ஆடியதை ஷேர் செய்வதற்காக ‘அடோப் ஃப்ளாஷ் வீடியோ’ மற்றும் ‘ஹெச்டிஎம்எல்5’ போன்ற தொழில்நுட்ப சாஃப்ட்வேர் சங்கதிகளை வைத்து ஆரம்பித்து ‘உ’ சுழி போட்டார்கள். ஆனால் இன்றோ யூடியூப் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. ரோட்டில் போகும்போது லைவ்வாக ஒரு விபத்தையோ ஒரு கலவரத்தையோ பார்க்கிறீர்கள். உங்களின் மொக்கை மொபைலில் அதை வீடியோவாகவும் எடுத்துவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதை ‘அப்லோடு’ செய்தால் குறைந்தபட்சம் 40,000 முதல் 50,000 பேர் பார்த்தார்கள் என்றால் யூடியூப் உங்களுடைய வங்கிக் கணக்குக்கு 20 டாலர் பணம் தரும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,200 ரூபாய்.http://tamilagamtimes.com/?post_type=product

இந்தத் தளம் காப்பிரைட் சட்டப்படிதான் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கிறது. வேறொருவரின் படைப்பு சார்ந்த ஏதேனும் அம்சங்கள் உங்கள் வீடியோவில் இருந்தால் உங்களது ‘யூடியூப் சேனல்’ முடக்கப்பட்டுவிடும். அதன் பிறகு வேறொரு அக்கவுன்ட்டில் மீண்டும் ஆரம்பிக்க வேண்டி இருக்கும்.  உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருமானம் தந்த வீடியோக்கள் பெரும்பாலும் போகிறபோக்கில் எந்தவித மெனக்கெடலும் இல்லாமல் எடுக்கப்பட்டவைதான். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தால் அவை வைரலாகிப் பதிவேற்றம் பண்ணிய நபருக்கு வருமானம் கிடைக்க வழி செய்யும். விஜயகாந்தின் சேட்டைகள், டி.ஆரின் பன்ச் பேட்டிகள் போன்ற காமெடி அம்சங்களைத் தாங்கியதாகவும் இருக்கலாம் அல்லது ‘ப்ராங்’ எனப்படும் சோஷியல் எக்ஸ்பரிமென்ட் வீடியோக்களாகவும் இருக்கலாம்.http://tamilagamtimes.com/?post_type=product

தமிழில் சினிமா விமர்சனங்களுக்கென பல சேனல்கள் உள்ளன. இப்போது மார்க்கெட்டுக்கு வரும் ஸ்மார்ட் போன்கள் எல்லாமே யூடியூப் பார்க்கும் வசதியை அளிக்கின்றன. போகிறபோக்கில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் இது போன்ற விமர்சன வீடியோக்களைப் பார்ப்பதை இன்றைய இளசுகளில் ஆரம்பித்து பலர் வழக்கமாகக்கொண்டுள்ளனர். அப்படி அவர்கள் பார்ப்பதாலேயே பார்வையாளர்களின் எண்ணிக்கையான ‘ஹிட்ஸ்’ அதிகமாகி விளம்பரங்கள் கிடைத்து அதன் மூலம் பதிவேற்றம் செய்கின்ற ‘சேனல்’ உரிமையாளர்களுக்கும் பணம் கிடைக்கிறது.http://tamilagamtimes.com/?post_type=product

உங்களுக்கென கார், பைக், செல்போன் போல உங்களுக்கென ஒரு யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் மாதம் 10,000 ரூபாய் வந்தால் சும்மாவா?http://tamilagamtimes.com/?post_type=product

[wysija_form id=”1″]